ஞாயிறு, 16 அக்டோபர், 2011
மூலம் மற்றும் பூராடம் நட்சதிரதிர்க்கான விருட்சங்கள்
தனித்துவ குணம், இறை பக்தி, எடுத்த வேலையை முடிக்கும் உறுதி, எதிராளிகளை அன்பால் வெல்லும் சாதுர்யம், முன்கோபம் ஆகியவை 'மூலம்’ நட்சத்திரக்காரர்களின் இயல்புகள். தனுசு ராசி மற்றும் வியாழக் கிரகத்துடன் தொடர்பு கொண்டது, இந்த நட்சத்திரம். வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்கள், மூலம் நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். இதன் கெட்ட கதிர் வீச்சுக்கள் நோய்களையும், நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மைகளையும் தருகின்றன.
மூல நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், கோங்கிலம் (இலவம்) மரத்தின் நிழலில் தினமும் அரை மணி நேரம் செலவழிப்பதால், நல்ல பலன் உண்டு என்கிறது வானவியல் மூலிகை சாஸ்திரம்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறைக்கு சுமார் 3 கி.மீ. தொலைவிலும், திருவிடைமருதூருக்கு சுமார் 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருமங் கலக்குடி. இங்குள்ள ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீபிராணநாதேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- இலவம். இந்தக் கோயில், திருவாவடு துறை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
அம்பாளின் திருநாமம் ஸ்ரீமங்களாம்பிகை. அத்துடன் ஸ்ரீமங்கல விநாயகர், மங்கல தீர்த்தம், மங்கல விமானம், தலம்- மங்கலக்குடி என உள்ளதால், இதனைப் பஞ்ச மங்கல க்ஷேத்திரம் என்பர். அப்பர், ஞானசம்பந்தர், ராமலிங்க அடிகளார் ஆகியோர் பாடிப்பரவிய தலமிது.
தனக்கு வரவிருந்த தொழுநோய் பற்றி ஞான திருஷ்டியால் அறிந்த காலவமுனிவர், இமயமலையில் நவக்கிரகங்களை வேண்டி தவமிருந்தாராம். அவருக்கு காட்சி தந்த நவக் கிரகங்களோ, ''பூர்வஜென்ம வினையை தடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை'' என்றனராம். இதனால் கோபம் கொண்ட முனிவர், தனக்கு வரவிருக்கும் நோய் நவக்கிரகங்களையும் பீடிக்கக் கடவது என்று சபித்தார். அதன்படி நோயால் அவதிப்பட்ட நவக்கிரகங்கள், ஈசனைப் பிரார்த் தித்தனர். அப்போது, ''காவிரியின் வடகரையில், வெள்ளெருக்கு வனத்தில், ஸ்ரீபிராணநாத ஸ்வாமியை வணங்கி தவமிருங்கள். தொடர்ந்து 11 ஞாயிறுகளில் வெள்ளெருக்கு இலையில் தயிரன்னத்தை ஸ்வாமிக்குப் படைத்து, நீங்கள் சாப்பிட்டு வந்தால், விமோசனம் உண்டு!'' என்றொரு அசரீரி ஒலித்தது. அதன்படியே வழிபட்டு, சிவனருளால் நவக்கிரகங்கள் விமோசனம் அடைந்தனராம்.
முதலாம் குலோத்துங்கச் சோழனின் அமைச்சர் அலைவாணர் என்பவர், வரிப்பணத்தை செலவழித்து இங்கே சிவனாருக்கும் நவக்கிரகங் களுக்குமாக ஆலயம் எழுப்பினாராம். இதனால் கோபம் கொண்ட மன்னன், அமைச்சருக்கு மரண தண்டனை அளித்தான் அப்போது, ''நான் இறந்ததும் எனது உடலை திருமங்கலக்குடியில் புதையுங்கள்'' என்று வேண்டிக் கொண்டாராம் அமைச்சர். தண்டனை நிறைவேற்றப்பட்டதும், அவரது உடல் இந்தத் தலத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவரின் மனைவி அம்பாள் சந்நிதியில் நின்று, 'உனக்குக் கோயில் கட்டிய என் கணவனைத் திருப்பிக்கொடு’ என அழுது மன்றாடினாள். அவளுக்கு மனமிரங்கி அமைச்சரை உயிர்ப்பித்தார் சிவனார். இதனால் அவருக்கு ஸ்ரீபிராணநாதேஸ்வரர் என்று பெயர்! அன்று முதல், தன்னை நாடி வரும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தந்தருள்கிறாள், ஸ்ரீமங்களாம்பிகை.
இங்கே, நவக்கிரக சந்நிதி இல்லை; சூரியனும் சந்திரனும் தனித்தனியே அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீசிவ துர்கை, ஸ்ரீவிஷ்ணு துர்கை இருவரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருட்சம்- இலவம்.இதன் இலையை அரைத்துப் பசும்பாலில் கலந்து சாப்பிட, சிறுநீர் எரிச்சல் நீங்கும்; இதன் பூவைத் தண்ணீரில் கலந்து சாப்பிட, மலச்சிக்கல் சீராகும். இலவத்தில் இருந்து கிடைக்கிற கோந்து, வெள்ளைப்படுதல் மற்றும் சீதபேதியைக் கட்டுப்படுத்த வல்லது.
இலவம், இலவு என்றெல்லாம் குறிப்பிடப்படும் இந்த மரத்தின் செந்நிறப் பூக்கள் குறித்து, குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகள் தங்களது தினவைப் போக்கிக்கொள்வதற்கு, முள் அமைந்த அடிமரத்தில் உராய்ந்து தேய்த்துக் கொள்கின்றன என்றும், அந்த மரம் பாலை நிலத்தில் வளரும் என்றும் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
திருநன்னிலத்துப் பெருங்கோயில், திருக்கோடி, திருக்கைச்சினம் ஆகிய கோயில்களிலும் இலவ மரமே தலவிருட்சம்.
'பூர்வ ஷென்ம தோஜம் விலகும்!’
'’ஸ்ரீபிராணநாதருக்கு, 11 ஞாயிற்றுக்கிழமைகள் எருக்கன் இலையில் தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து, சந்நிதிக்கு எதிரே சாப்பிட்டால், ரோகப் பிணிகள் யாவும் நீங்கும்; ஆயுள் கூடும். அதே நாளில் அர்ச்சித்து, தயிர்சாத நைவேத்தியத்தை அன்னதானம் செய்து பிரார்த்தித்தால், பூர்வஜென்ம தோஷங்கள், பித்ரு தோஷம், கிரக தோஷம் என சகல தோஷங்களும் விலகும்!'' என்கிறார் கோயில் அர்ச்சகர், சுவாமிநாத சிவம் குருக்கள்.
''ஸ்ரீமங்களாம்பிகைக்கு வெள்ளிக்கிழமையன்று, அர்ச்சனை செய்து வேண்டினால், திருமணத் தடை மற்றும் தோஷங்கள் நீங்கும். திருமணமாகி, மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள், சந்நிதிக்கு வந்து, 'மறு மாங்கல்யதாரணம்’ செய்துகொண்டால், தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள்'' என்கிறார் சுவாமிநாத சிவம் குருக்கள்.
--------------------------------------------------------------------------------
தைரியம், நேர்மை, கண்ணியம், பயணத்தில் ஆர்வம், வாசனைப் பிரியர்கள், பெற்றோரிடம் பாசம் ஆகியவை பூராடம் நட்சத்திரத்துக்காரர்களின் குணங்கள். தனுசு ராசி மற்றும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது இந்த நட்சத்திரம். வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21-ஆம் தேதி முதல், டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்கள், பூராடம் நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள்.
பூராட நட்சத்திரத்துக்கு உகந்தது, பவழ மல்லிகை மரம்; அதன் நல்ல கதிர்வீச்சுக்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. பூராட தோஷம் உள்ளவர்கள், மல்லிகை மரத்தின் நிழலில் தினமும் அரைமணி நேரம் அமர்ந்திருந்தால், அதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை உட்கொண்டால், நற்பலன்கள் கிடைக்கும்.
நாகை மாவட்டம், சீர்காழி ஸ்ரீதிருநிலை நாயகி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம், பவழ மல்லிகை. தருமை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆலயம் இது.
காளிங்கப் பாம்பு பூஜித்த தலம் ஆதலால், ஸ்ரீகாளிபுரம் எனப் பெயர் பெற்று, அதுவே பின்னாளில் சீகாழி, சீர்காழி என மருவியதாம். ஸ்ரீபிரம்மன் ஸ்தாபித்த சிவலிங்கம் என்பதால், ஸ்வாமிக்கு ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்று திருப்பெயர் அமைந்ததாம்.
நாற்புறமும் கோபுரங்களுடன் பிரமாண்ட மாகத் திகழ்கிறது ஆலயம் முதல் தளத்தில் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீபெரியநாயகராக சிவனார் எழுந்தருளியுள்ள ஸ்ரீதோணியப்பரே இங்கே குரு மூர்த்தம்.
ஊழிக்காலத்தில், பிரணவத்தைத் தோணி யாகக் கொண்டு உலகை வலம் வரும்போது, பிரளயத்தில் அழியாத இந்தத் தலத்தை மூலாதார க்ஷேத்திரம் எனச் சொல்லி அருளி னாராம் சிவனார்.
இரண்டாவது தளத்தில், மலையுச்சியில் காட்சி தருகிறார் ஸ்ரீசட்டைநாதர். திருஞான சம்பந்தருக்கு அம்பிகை திருமுலைப்பால் தந்தருளிய அற்புதமான இந்தத் தலத்தின் விருட்சம், பவழ மல்லிகை மரம். பாரிஜாத மரம் என்றும் சொல்வார்கள்.
இதன் மூன்று இலைகளில் சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் அமர்ந்திருப்பதாக ஐதீகம். பாரிஜாதகா என்னும் இளவரசி ஒருத்தி, கதிரவன் மீது காதல் கொண்டாளாம். ஆனால், அவளை ஏற்கவில்லை கதிரவன். இதில் விரக்தியுற்றவள், தன்னைத்தானே எரித்துக்கொண்டு இறந்தாள். அந்தச் சாம்பலில் இருந்து உருவானதுதான் பவழ மல்லிச் செடி என்றொரு கதை உண்டு. பகலில் சூரியனுக்கு முன்னே உதிர்ந்து, இரவில் செழித்து மணக்கும் குணம் கொண்டது பவழ மல்லிகை. இங்கே ஒரு முக்கியமான விஷயம்... தரையில் விழுந்து கிடக்கும் பூக்களை நாம் பூஜைக்குப் பயன்படுத்த மாட்டோம். ஆனால், இதில் பவழ மல்லிகைக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.
பவழ மல்லிகையைக் கஷாயமாக்கி குடித்தால் நீரிழிவு நோய், சிறுநீரகப் பிரச்னைகள் விரைவில் குணமாகும். இதன் இலைச் சாறு, வயிற்றுக் கோளாறுக்கு வடிகாலாகும். பித்தக் காய்ச்சல், தொடை நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதன் வேர், பல் ஈறில் உள்ள வலியை நீக்கவல்லது. இதன் தளிர் இலைகள், மூல நோயிலிருந்து நிவாரணம் தருகின்றன. பவழ மல்லிகைப் பூக்களோ இருமலை குணமாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. விதைகள் சொறி, சிரங்கு, நமைச்சலைக் குணமாக்குகின்றன.
'சேடல் செம்மல் சிறு செங்குரலி’ என்கிற குறிஞ்சிப் பாட்டில், 'சேடல்’ என்பது 'பவழக்கால் மல்லிகை’ என விளக்கவுரை தந்துள்ளார் நச்சினார்க்கினியர்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்களர் ஆலயத்திலும், கும்பகோணம்- திருநரையூர் சித்தீச்சரம் ஆலயத்திலும் பவழ மல்லிகையே, தல விருட்சம்!
- விருட்சம் வளரும்...
படங்கள்: கே.குணசீலன்
'ஞானம் கிடைக்கும் தலம்!’
''இங்கேயுள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை வணங்கிய பிறகே, தனது படைப்புத் தொழிலைத் துவக்கினார் பிரம்மா என்கிறது புராணம். இந்தத் தலத்து சிவ- பார்வதியை வணங்கினால் ஞானம் கிடைக்கும்; தோஷங்கள் நிவர்த்தியாகும்'' என்கிறார் ஆலய அர்ச்சகர் வெங்கட்ராம சிவாச்சார்யர். மேலும், ''பிரளயத்தில் உலகம் அழிந்த பிறகு, உலகை இங்கிருந்துதான் இறைவன் உருவாக்கினார். அதனால், இது சக்தி வாய்ந்த திருத்தலமாகப் போற்றப்படுகிறது'' என்கிறார் அவர்.
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்!
தர்ம சிந்தை, பக்தி, சகல கலைகளையும் அறியும் ஆர்வம், அமைதி, பிறருக்கு மனதாலும் தீங்கு நினைக்காத இயல்பு ஆகியன உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!
சனிக்கிழமை, டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை பிறந்தவர்களுக்கு உரிய நட்சத்திரம், உத்திராடம். மேற்கண்ட காலங்களில், அதிக அளவில் வெளிப்படும் உத்திராடத்தின் கதிர் வீச்சுக்களை, வாகை மரம் தனக்குள் சேகரித்து வைத்துக் கொள்ளும். உத்திராட நட்சத்திரம், வாகை மரத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரத்தின் கெட்ட கதிர்வீச்சுக்களை சுத்தம் செய்து ஆக்ஸிஜனாக மாற்றிக் கொடுக்கிறது வாகை. இந்த மரத்தைத் தினமும் தொட்டாலும், இதன் நிழலில் இளைப்பாறினாலும் கெட்ட கதிர் வீச்சுக்கள் நீங்கிவிடும்.
வாகை (வைகை) மரம், திருவாழ்கொளிபுத்தூர் ஸ்ரீவண்டமர் பூங்குழல் நாயகி (ஸ்ரீப்ரமா குந்தலாம்பாள்) சமேத மாணிக்கவண்ணர் (ஸ்ரீரத்னபுரீஸ்வரர்) சுவாமி ஆலயத்தின் தல விருட்சம். நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகா, திருப்புன்னத்தூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ள இந்தத் தலம், திருவாழப்புத்தூர் எனப்படுகிறது.
அருகில் உள்ள இலுப்பைப்பட்டு தலத்துக்கு பாண்டவர்கள் வந்தனர். அவர்களில் அர்ஜுனன் மட்டும் மேற்கில் இருந்த வாகை மரக் காட்டில், ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தான். அவனுக்குக் கடும் தாகம். அப்போது முனிவர் ஒருவர் அங்கு வர, ''சுவாமி, தாகமாக இருக்கிறது. இங்கே தண்ணீர் எங்கு கிடைக்கும்?'' என்று கேட்டான். முனிவர், தன் கையிலிருந்த தண்டத்தினால் நீர் நிலை (தண்ட தீர்த்தம்) உண்டாக்கி, தண்ணீர் வழங்கியருளினார். உடனே அர்ஜுனன், தன்னுடைய உடைவாளை முனிவரிடம் கொடுத்து விட்டு, தண்ணீரை இரு கைகளாலும் அள்ளிக் குடித்தான். பின்னர் திரும்பிப் பார்த்தால், முனிவரைக் காணோம். முனிவரின் காலடிச் சுவட்டைத் தொடர்ந்து, தேடி அலைந்தான். முனிவராக வந்தது இறைவனே. அவர், ஒரு வாகை மரத்தடியில் புற்றில் இருந்த வாசுகி பாம்பிடம் உடைவாளை கொடுத்துவிட்டு, ஆலயத்தை அடைந்தார். பிறகு, இது இறை விளையாட்டு என உணர்ந்த அர்ஜுனனும் இறைவனை தொழுதான். அவனிடம் உடைவாளைத் தருமாறு வாசுகிப் பாம்பை பணித்தார் இறைவன். இதனால், இந்தத் தலம், 'திருவாள் அளி புற்றூர்’ என வழங்கலாயிற்று. பிறகு, திருவாழ் கொளிபுத்தூர் என்றாகி, தற்போது திருவாழப்புத்தூர் எனப்படுகிறது.
கடும் பஞ்சத்தில் உலகம் தவித்தபோது, தானியங்கள், ரத்தினங்கள், மழை ஆகியவற்றைத் தந்தருளியதால் இங்கேயுள்ள இறைவனுக்கு ஸ்ரீரத்தினபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. இங்கேயுள்ள ஸ்ரீதுர்கை மிகவும் சாந்தமானவள். மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்தவள், வதம் முடிந்ததும், சாந்தம் கொண்ட தலம் இதுவாம்! ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி, ஸ்ரீசனி பகவான் (இங்கு நவக்கிரகங்கள் இல்லை), வாசுகி பாம்பு ஆகியோர் அருளும் தலம் இது. இங்குள்ள வாகை மரத்தைச் சுற்றி வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கின்றனர். துர்கா பரமேஸ்வரி அசுரனை அழித்து வெற்றி பெற்ற அடையாளமாக தல விருட்சமான 'வாகை’ போற்றி வணங்கப்படுகிறது.
வாகையின் இலைகளை அரைத்துக் கண்களில் வைத்துக் கட்டினால், கண் நோய்கள் குணமாகும். இதன் இலைகளைக் கஷாயமாக்கிச் சாப்பிட் டால், மாலைக்கண் நோய் சரியாகும். இதன் பூக்களை அரைத்து, பாம்புக்கடி விஷ முறிவுக்குப் பயன்படுத்துவர். தவிர, கட்டிகள், வீக்கங் களைக் குணமாக்கவும் வல்லது இது. வாகை மரப்பட்டை ரத்தமூலம், சீதபேதி ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இந்த மரத்திலிருந்து கசியும் பிசின், பெண்களின் வெள்ளைப்படுதல் முதலான நோய்களைக் குணப்படுத்துகிறது. உஷ்ண உடல் உள்ளவர்கள், வாகை மரத்தால் தயாரிக்கப்படும் மருந்துகளில் பசும் நெய் கலந்து சாப்பிட, உடற்சூடு தணியும். குறிஞ்சிப் பாட்டில், 'வடவனம் வாகை வான்பூங்குடசம்’ என வாகையைக் குறிப்பிட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்களை 'வாகை சூடியவர்கள்’ எனப் போற்றுகிறார் நச்சினார்க்கினியர்.
அடுத்தது, திருவோண நட்சத்திரத்துக்கான ஆலயம்...
பில்லி சூனியம் அகலும்!
''சாந்த சொரூபினியாக ஸ்ரீதுர்கை அருளாட்சி செய்யும் தலம் இது. ராகு காலத்தில் இவளை வணங்கினால், நவக்கிரக தோஷம் அகலும்; பில்லி சூனியம் விலகும்; கொடிய ரோகங்கள் நிவர்த்தியாகும்; பிள்ளை வரம் கிடைக்கும். இந்தத் தலத்து இறைவன் சந்நிதிக்கு முன்னே திருமணம் முடிப்பது விசேஷம். அவர்களுக்கு அனைத்துச் செல்வங்களையும் அருளுவார் ஈசன் என்பது ஐதீகம்'' என்கிறார் ஆலய அர்ச்சகர் நாகராஜ குருக்கள்.
--------------------------------------------------------------------------------
கல்வியாளர்கள், இசை விரும்பிகள், அறிஞர்கள், நறுமணப் பிரியர்கள், ஆடை- அணிகலன்கள் மீது விருப்பமுள்ளோர், தூய்மையாக இருக்க விழைவோர்... திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள். திருவோணம் நட்சத்திரம், மகர ராசி மற்றும் சனிக்கிரகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி வரை பிறந்தவர்களை திருவோண நட்சத்திரம் ஆட்சி செய்கிறது. இந்தத் தினங்களில் மேற்படி நட்சத்திரத்தின் கதிர்வீச்சுக்கள் பூமியில் அதிக அளவு இருக்குமாம். சரக்கொன்றை மரம் அவற்றைத் தனக்குள் சேமித்துக்கொண்டு, கெட்ட கதிர்வீச்சுக்களை நன்மை தரும் நல்ல கதிர் வீச்சுக்களாக மாற்றி விடுகிறது.
பந்தநல்லூர் ஸ்ரீவேணுபுஜாம்பிகை சமேத ஸ்ரீபசுபதீஸ் வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- சரக்கொன்றை.
கும்பகோணத்தில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். கண்வ முனிவரும் தேவர்களும் வேண்டியபடி, இந்தக் கோயிலில் ஸ்ரீபரிமளவல்லித் தாயாருடன் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளும் தனிச் சந்நிதியில் அருள்கிறார். சுயம்பு மூர்த்தியாக புற்று வடிவில் ஸ்ரீபசுபதீஸ்வரர் எனும் திருநாமத்துடன் குடிகொண்டிருக்கிறார் சிவனார். புற்றின் மீது பசுவின் காலடி பட்ட சுவடும், அம்பிகை ஆடிய பந்தின் சுவடும் இன்றைக்கும் உள்ளன. அம்பாள்- ஸ்ரீவேணுபுஜாம்பிகை. அதாவது, மூங்கில் போன்ற தோள் அழகு கொண்டவள் என்று அர்த்தம்.
அம்பிகைக்கு, பந்து ஆடுதலில் விருப்பம் வந்து, சிவனாரை வேண்டினாள். அவளுக்கு நான்கு வேதங்களையும் பந்தாகத் தந்தருளினாராம் சிவபெரு மான். திருக்கயிலையில், தோழியருடன் பந்தாடினாள் பராசக்தி. அப்போது தன்னையே மறந்தாள். சூரியனும் அஸ்த மனம் ஆகாமல், நெடு நேரத்துக்கு ஒளி கொடுத்தான். விளையாட்டு வளர்ந் தது; பகலும் நீண்டது. இதில் உலகம் சோர்வுற்றது. விளையாட்டில் ஆழ்ந்த உமையவள் மீது கடும் கோபம் கொண்டார் சிவனார். அவள் ஆடிய பந்தினை எட்டி உதைக்க... அது பூமியில் வந்து விழுந்தது. பிறகு, தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாள் அம்பிகை. அடுத்து ஈசனின் ஆணைப்படி பசுவாக மாறி, சரக் கொன்றை மர நிழலில், சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத் திருமேனிக்கு பாலைச் சொரிந்து வழிபட்டாள்; அந்தத் தலம் 'திருப்பந்தணைநல்லூர்’ என்றாகி, பிறகு 'பந்தநல்லூர்’ ஆனதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
இங்கு, திருமணக் கோலத்தில் இறைவனும் இறைவியும் காட்சி தருவது கொள்ளை அழகு! இங்கே, இறைவனின் திருமணத்தைக் கண்டு வழிபட்ட ஆனந் தக் களிப்புடன் நேர் வரிசையில் நிற்கிறார்கள் நவக்கிரகங்கள். இவர்களை வழிபட, கோள்களால் ஏற்படும் துயரம் அழியும் என்பது ஐதீகம்! வருடத்தில், ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் இறைவன் திருமேனியில் சூரியக் கதிர் படும் அற்புதம் நிகழ்கிறது!
வாய்ப்புண், தொண்டைப் புற்று ஆகியவற்றைத் தடுக்கும் சக்தி, சரக் கொன்றை மரத்துக்கு உள்ளது. இதன் இலைக் கொழுந்தை அரைத்துச் சாறாக்கி, சர்க்கரை கலந்து சாப்பிட்டால், வயிற்றில் உள்ள கிருமிகள், பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைத் துவையல் செய்தும், கடைந்தும் சாப்பிடலாம். அரைத்துப் படர்தாமரைக்குப் பூசலாம். கீல்வாதம் மற்றும் முகத்தில் வலிப்பு உள்ள இடங்களில் இலை யைத் தேய்க்கலாம். மூளைக் காய்ச்சலுக்கும் உகந்தது இது! சரக்கொன்றைப் பூவுக்கு புழுக்களைக் கொல்லும் திறன் உண்டு. பூவை தனியாகவோ அல்லது இலைக் கொழுந்துடனோ அரைத்து, பாலில் கலந்து உட்கொண்டால் வெள்ளை, வெட்டை, காமாலை நோய்கள் நீங்கும். பழச்சாற்றுடன் பூவை அரைத்துத் தேய்த்துக் குளித்தால், தேமல், சொறி ஆகியவை குணமாகும். பூவை பாலுடன் காய்ச்சி உட்கொண்டால், உடல் உறுப்புகள் வலுப்பெறும். சரக்கொன்றையால் தயாரிக்கப்படும் மருந்து, தடைப்பட்ட மாத விலக்கை வெளியேற்றும்.
கடலூர் மாவட்டம் திருவதிகை ஸ்ரீவீரட்டேஸ்வரர் கோயில், மதுரை மாவட்டம் திருப்பனூர் கொன்றை வேந்தனார் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களின் தலவிருட்சம்- சரக்கொன்றையே!
வியாபாரம் சிறக்கும்!
''இது, பித்ரு சாப நிவர்த்தி ஸ்தலம். கண் பார்வைக் குறைபாடுகளை நீக்கியருளும் தலமும்கூட! சொத்து வழக்கில் நியாயம், கடன் பிரச்னை, தொழில் விருத்தி ஆகியவற்றைத் தந்தருள்கிறார் ஸ்ரீபசுபதீஸ்வரர். வித்தை, கல்வி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஸ்ரீவேணுபுஜாம்பிகை வழங்குகிறாள்'' என்கிறார் ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயிலின் ராஜசேகர குருக்கள் ''ஸ்ரீமுனீஸ்வரருக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் உண்டு. செய்வினை, ஏவல், பில்லி சூனியம் அகற்றும் சக்தி வாய்ந்தவர் முனீஸ்வரர்'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார் குருக்கள்.
அஸ்வினி நட்சத்திரம்
அஸ்வினி நட்சத்திரம், மூன்று தாரங்களை (தாரைகளை) உள்ளடக்கியது; குதிரை வடிவம். ராசி புருஷனின் சிரசில் இடம் பிடித்த நட்சத்திரம். எண்ணிக்கையில் முதலாவது நட்சத்திரமும் இதுவே! இதன் தேவதை, அஸ்வினி தேவர்கள். தேவலோக மருத்துவர்கள்; தேவர்களுக்குச் சுகாதாரத்தை அளிப்பவர்கள்.
வேள்வியின் சிரம் துண்டிக்கப்பட்டது. மருத்துவ இரட்டையர்களான அஸ்வினி தேவர்களுக்குக் கட்டளையிட்டான், இந்திரன். அவர்கள், உடலையும் தலையையும் ஒட்டவைத்தனர். வேள்வி உயிர் பெற்றது. அந்த வேள்வியின் மூலமாக, தேவர்களுக்கு உணவு தடங்கலின்றி வந்து சேர்ந்தது என்கிற தகவல் வேதத்தில் உண்டு (யஞ்யஸ்யசிரோச்சித்யத...).
தேவர்களின் அருளுடன் இணைந்தது அஸ்வினி நட்சத்திரம். நம் உடலில், கைகளில் வலிமை, அவர்கள் அருளில் வலுப்பெறும் என்கிறது வேதம் (அச்வினோர் பாஹீப்யாம்). நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். 27 நட்சத்திரங்களையும் நான்கு பாதங்களாகப் பிரிக்கும் போது, 108 நட்சத்திர பாதங்களாக விரிவடையும். 12 ராசியிலும் அது பரவியிருப்பதால், அதன் தாக்கம் ராசிகளுக்கு ஊக்கம் அளிக்கும். 1 0 8=9 கிரகங்களும் நட்சத்திர பாதங்களுடன் இணைந்து, பலனை இறுதி செய்யும். 108-ல் ராசிச் சக்கரம் முழுமை பெற்றதால் 108 தடவை அர்ச்சனையை முழுமை பெற்றதாக ஏற்கிறோம்.
அஸ்வினியில், முதல் பாதத்தில் செவ்வாய் இணைந்திருப்பான். இரண்டில் சுக்கிரனும் மூன்றில் புதனும் நான்கில் சந்திரனும் இருப்பார்கள். நட்சத்திர பாதங்கள் நவாம்சத்தை உருவாக்கி, பலன் சொல்லுவதில் மாறுதலைத் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திர பாதத்துடன் இணைந்த கிரகங்கள், பாதத்துக்குப் பாதம் மாறுபட்ட பலனைச் சுட்டிக்காட்டுவதால், ஒரே நட்சத்திரத்தில் பிறந்தாலும், அவர்களின் இயல்பில் மாறுபாட்டுக்குக் காரண மாகிறது. அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவன், அம்சகத்தில் மேஷத்தில் வருவதால், அம்சகத்திலும் ராசியிலும் சந்திரன் மேஷத்தில் இருப்பதால், அவனுக்கு வர்கோத்தமம் எனும் தகுதி உண்டு. (சுபம் வர்கோத்தமேஜன்ம). அதை ஏற்படுத்தியது நட்சத்திர பாதம்.
ராசியிலும் அம்சகத்திலும் செவ்வாயுடன் இணைந்திருக்கும் பெருமை பெற்றதால், அவனுடைய பிறப்பின் தகுதி சிறப்பு பெற்றுத் திகழ்கிறது. மற்ற கிரகங்களுடன் ராசியும் சேர்ந்து, நட்சத்திர பாதம் இணைந்திருந்தாலும் வர்கோத்தமத்தின் பங்கு வலுப்பெற்றிருப்பதால், பலன் சொல்லும் விஷயத்தில் நட்சத்திரத்தின் பங்குக்கு முக்கியத்துவம் இருப்பதைத் தெரிவிக்கிறது ஜோதிடம்.
லேசான, அதாவது கனம் குறைந்த நட்சத்திரங்களில் அஸ்வினியும் ஒன்று. 64 கலைகள், குறிப்பாக பொதுக்கல்வி, கிரய - விக்ரயம் (பல்பொருள் அங்காடி), பொருளாதாரத்தை வலுவாக்குதல், கைவேலைப்பாடுகள், மருந்து வகைகள், பயணம் ஆகியவற்றுக்கு அஸ்வினி நட்சத்திரத்தின் இணைப்பு, வெற்றிக்கு வழி வகுக்கும் என்கிறார் வராஹமிஹிரர் (லகுஹஸ்தாச்வின...).
முற்பிறவியின் கர்மவினையே, உடலெடுக்கக் காரணமாகிறது. வருகின்ற இன்ப - துன்பங்களுக்குத் தக்கபடி, ஒருவரின் தோற்றம் இருக்கும். பிறக்கும் வேளையில் உள்ள நட்சத்திர பாதத்தின் இணைப்பு, வரக்கூடிய இன்ப - துன்பங்களுக்கு ஆதாரமாகிவிடும்! அழகிய தோற்றம், ஆடை-அணிகலன்களில் ஆர்வம், அன்புடன் பழகுகிற பண்பு, காரியத்தில் நேர்த்தி, தெளிவான சிந்தனை ஆகியவை அஸ்வினி நட்சத் திரத்தில் தோன்றியவரின் இயல்பு! அவர்கள், சிந்தனை வளத்துடனும் சுகாதாரத்துடனும் இருப்பார்கள். மருத்துவ ஆர்வம், கொடை வழங்கும் இயல்பு, பொருளாதாரம், வேலைக்கு ஆட்கள், மனைவி என அனைவரையும் இணைத்துக் கொண்டு, அரவணைத்த படி செயல்படும் திறமைசாலிகள் என்கிறார் பராசரர் (விஞ்ஞானவானரோகி).
முதல் பாதத்தில் பிறந்தால், பிறர் பொருள் மீது ஆசைப்படுவர். இரண்டாவதில் பிறந்தால், உடல் உழைப்பைக் குறைத்துக் கொள்வர். மூன்றாவதில், எல்லோருக்கும் பிரியமாக இருப்பர். நான்காவதில், நீண்ட ஆயுளுடன் வாழ்வர் என 4 பாதங்களுக்கும் தனித்தனி பலனைச் சொல்லியுள்ளார் வராஹமிஹிரர். பாதத்துக்குப் பலன் சொல்லும் விஷயத்தில், அதில் இணைந்த குறிப்பிட்ட கிரகத்தின் தாக்கத்தால், இயல்பு மாறுபட வாய்ப்பு உண்டு. ஆகவே, பாத பலன்... நம்பிக்கைக்கு உகந்தது!
அஸ்வினி முதல் பாதத்தில் பிறந்தவன் மேஷ ராசி. மேஷத்துக்கு அதிபதி, செவ்வாய். முதல் பாதத் திலும் செவ்வாய் தனிப்பட்ட முறையில் இணைந்திருப்பான். அவனுடைய பூர்வ புண்ணிய ஸ்தானம் (5) சிம்மம். அதில் முதல் நட்சத்திரம், மகம். முதல் பாதத்தில் செவ்வாயின் தொடர்பு உண்டு. அவனுடைய அதிர்ஷ்டம், 9-வது (தனுர்) ராசி; அதில் முதல் நட்சத்திரம் மூலம். அதன் முதல் பாதத்துக்கு செவ்வாயின் தொடர்பு உண்டு. பிறந்த நட்சத்திர பாதம், ஒருவரின் பூர்வ புண்ணியத்தைத் தெரிவிக்கும் நட்சத்திர பாதம், அதன் செழிப்பை வரையறுக்கும் அதிர்ஷ்டம் (கண்ணுக்குப் புலப்படாத பூர்வ புண்ணியம்), அதைச் சுட்டிக்காட்டும் நட்சத்திர பாதம் ஆகியவை செவ்வாயுடன் இணைந்திருப்பதால், ஆசைக்குக் கட்டுண்டு, எதையும் ஆராயாமல், சடுதியில் செயல்பட்டு, பிறர் பொருளைக் கவருவதிலும் ஒருவித துணிச்சல் ஏற்பட்டுவிடும். அஸ்வினி, மகம், மூலம் ஆகிய மூன்றில், 1,5,9 ஆகிய பாவங்கள் தென்படுவதால், நூல் பிடித்தது போல் தொடர்பு இருப்பதால், இந்த மூன்றுக்கும் ரஜ்ஜு என்ற பெயரைப் பயன்படுத்தினார்கள்! இரண்டு, மூன்று மற்றும் நான்காவது பாதங்கள், மாறுபட்ட கிரகங்களுடன் இணைந்திருப்பதால், ஒரே நட்சத் திரமானாலும் பாதத்துக்கு மாறுபட்ட பலனை அளிக்க கிரகங்களின் பங்கு உதவுகிறது. இந்த மூன்று நட்சத்திரங் களுக்கும் கேது தசை ஆரம்பம் என்கிறது ஜோதிடம்.
பலன் சொல்லும்போது (குஜவத்கேது:), அதாவது செவ்வாய்க்கு உகந்த பலனை ஏற்கச் சொல்கிறது ஜோதிடம். மூன்று நட்சத்திரங் களிலும் முதல் பாதத்தில் செவ்வாயின் இணைப்பு, பலனை செவ்வாயுடன் இணைத்துச் சொல்லவும் பரிந்துரைக்கிறது.
பிறப்பின் வேளையுடன் (லக்னம்) முதல் பாதம், மிகவும் நெருங்கி இருப்பதால், தசாகாலத்தை நிர்ணயிப்பதில் நட்சத்திரத்துக்கு முன்னுரிமை அளித்தது ஜோதிடம். கிரகங்களின் உயிரோட்டத்துக்கு நட்சத்திர பாதங்களின் இணைப்பு அவசியம். பலனை இறுதி செய்ய நட்சத்திர பாதத்தை எதிர்பார்க்கும் கிரகங்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி சனி என அத்தனை கிரகங்களும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் இணைந்திருக்கும். ராசி, ஹோரா, த்ரேக்காணம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்ரிம்சாம்சம் ஆகிய பிரிவுகளில் அத்தனை கிரகங்களுடைய இணைப்பும் கிடைத்துவிடும். ஒட்டுமொத்தமான கிரகங்களையும் தன்னில் அடக்கிக் கொண்டு, அதன் தரத்துக்கு உகந்த முறையில், தன் பங்கையும் சேர்த்துப் பலன் அளிக்கும் பொறுப்பு, நட்சத்திரத்துக்கு உண்டு.
பூர்வ ஜன்ம கர்மவினையின் வடிகாலாக நட்சத்திரங்கள் செயல்படுகின்றன. 12 ராசி களிலும் பரவலாக எல்லா கிரகங்களும் இணைந்திருந்தாலும் கர்மவினையின் பலனை வரிசைப்படுத்த நட்சத்திரத்தின் துணையை நாடுகின்றன எனும் தகவல், நட்சத்திரங்களின் சிறப்புக்குச் சான்று.
பிறப்பெடுத்த ஒருவர், பல பொருட்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இன்ப - துன்பத்தை ஏற்கிறார். தசா புக்தி அந்தரங்கள், அவற்றை நடைமுறைப்படுத்துகின்றன என்பது உண்மை. ஆனாலும் எது முந்தி, எது பிந்தி என்கிற அட்டவணையை நட்சத்திரங்களே வரையறுக்கின்றன. வாழ்வின் துவக்கத்தில், சிலருக்கு இன்பமும் சிலருக்கு துன்பமும் ஏற்பட தசைகளின் அட்டவணை காரணமாகிறது. அந்த அட்டவணைக்குக் காரணம், நட்சத்திரம். எனவே, கர்மவினையை வெளியிடும் கருவியாகச் செயல்படுகின்றன நட்சத்திரங்கள்!
மிருதுவான (லேசான) அஸ்வினியின் இணைப்பு எல்லா சுபகாரியங்களுக்கும் சிறப்பைச் சேர்க்கும். முகூர்த்தங்கள் அல்லாத அலுவல்களுக்கும் அது வலுவூட்டும். ராசி புருஷனின் தலை மேஷ ராசி. அதில் இணைந் திருப்பது அஸ்வினி. சிந்தனையுடன் செயல்படும் திறமையை அளிக்கும் அது, விபரீதமான கிரகங்களுடைய சேர்க்கை வலுப்பெற்றிருக்கும் போது, சிந்தனை மங்கிச் செயல்பட முடியா மல் செய்யவும் வாய்ப்பு உண்டு! தவிர, பூர்வ ஜன்ம வினையை அளப்பது 5-ஆம் இடம்; அதன் அளவை வரையறுப்பது 9-ஆம் இடம்! இவற்றின் விபரீதமான போக்கு, நட்சத்திரத்தின் தனிப்பலனை முடக்கிவிடும். நட்சத்திரங்களோ கிரகங்களோ, தனியாகவோ ஒன்று சேர்ந்தோ தன்னிச்சையாக பலன் அளிக் காது. கர்மவினையின் பலனை வெளிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதுதான் அதன் வேலை. ஆகவே அவற்றுக்கு சுதந்திரம் இல்லை! உச்சம், நீசம், மூல த்ரிகோணம், வர்கோத்தமம், ஸ்வக்ஷேத்திரம், அஸ்தமனம், மௌட்யம், வக்ரம் போன்ற கிரகங்களின் நிலைகள், கர்மவினையின் தரத்துக்கு உகந்த பலன் அளிப்பதை வரையறுக்கின்றன. பிறக்கும் வேளையில் அமைந்த கிரகங்களின் தரத்துக் குக் காரணம், ஒருவரது கர்மவினை. இதன் வெளிப்பாட்டுக்குத் தக்கபடியே கிரகங்கள் செயல்படும். நட்சத்திரங்களும் அவ்விதமே செயல்படும்! ஆகவே, நட்சத்திரங்களை வழிபட்டு, கர்மவினையை செயல்படாமல் தடுக்க முற்பட்டு, துன்பத்தில் இருந்து வெளிவர வேண்டும்.
பூஜை, தியானம், வழிபாடு போன்றவை தவறான கர்மவினையை (பாபத்தை) கரைத்து விடும். நட்சத்திரங்களும் கிரகங்களும் இல்லாத (கரைந்த), கர்மவினையை நடைமுறைப்படுத்தாது. போதிய எண்ணெய் விட்டு, திரியைப் போட்டு, விளக்கேற்றுகிறோம். திரியின் நுனியில் இருக்கும் ஒளி, திரியை அழிக்காமல், திரி வழியே எண்ணெயின் தொடர்பில், எரிந்து கொண்டிருக்கும். அதில் இருக்கும் எண்ணெயை முழுமையாகத் துடைத்தெடுத்துவிட்டால், திரியை எரித்து, தானும் எரிந்துவிடும். அதேபோல, சேமித்த விபரீத கர்மவினையை, பரிகாரங்களால் அழித்துவிட்டால், திறமையான கிரகங்களும் செயலிழந்துவிடும். ஆகவே, மனதின் செயல்பாட்டைத் திருப்பிவிட்டு, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட வைக்கும் தருணத்தில், தப்பான கர்மவினை கரையாமல் இருந்தாலும், சிந்தனையில் நுழைய அவகாசமின்றிப் போய்விடும். அப்போது, துயரம் தொடாமல் இருந்துவிடும்.
அஸ்வினி நட்சத்திரத்துக்கு தொடர்பு உடைய அஸ்வினி தேவர்களை வழிபட வேண்டும். 'அம் அச்வினீ குமாராயநம:’ என்று சொல்லி வழிபடலாம். அல்லது 'அச்விப்யாம் நம:’ என்று சொல்லி வணங்கி வழிபடலாம்.
காலையில் எழுந்ததும் அவனுடைய நாமத்தை மனதில் நிறுத்தி வேண்டிக் கொண்டு, அன்றைய கடமையில் இறங்குங்கள். அஸ்வினி தேவர்கள், உங்களுக்கு சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் தந்தருள்வார்கள்!
திங்கள், 8 ஆகஸ்ட், 2011
கிரகங்களின் நாயகன் சூரியன்
கிரகங்களின் நாயகன் சூரியன். ஒளி வடிவானவன்; பார்வைக்கு இலக்காகும் பரம்பொருள், அவன் (சூர்ய:ப்ரத்யஷதேவதா). 'உலகின் அணையா விளக்கு’ என்பார் வராகமிஹிரர் (த்ரைலோக்ய தீபோரலி:). சூரியனது கிரணங்களே, மற்ற கிரகங்களை இயக்க வைக்கிறது. காலை, மதியம் மற்றும் அந்தி சாயும் வேளைகளில் அவனை ஆராதிப்பது சிறப்பு என்கிறது வேதம். மேலும், சராசரங்களின் ஆன்மா என சூரியனை அடையாளம் காட்டு கிறது வேதம் (ஸ¨ர்யஆன்மாஜகத: தஸ்துஷ:ச).
சூரியன், உலகை உணர்த்துகிறான்; இயங்க வைக்கிறான்; உறங்க வைக்கிறான் என்கிறது ஜோதிடம் (லோகானாம் பிரளயோதயஸ்திதிவிபு:). 'அவன் தோன்றும் போது உயிரினங்களுக்கு உயிரூட்டுகிறான். மறையும் வேளையில், உறக்கத்தில் ஆழ்த்தி இளைப்பாறச் செய்கிறான்’ என்கிறது வேதம் (யோஸெளதபன்று தேதி...). மும்மூர்த்திகளும் அவனுள் அடக்கம் (விரிஞ்சிநாராயணசங்கராத்மனே). முத்தொழில்களையும் அவனே நடத்துகிறான். வேதத்தின் வடிவமான ஒலி, ஆகாயத்தில் ஒளி வடிவில் உலா வருகிறது. அதுவே சூரியன் என்கிறது வேதம் (வேதை:ஆசூன்ய: த்ரிபி: ஏதிசூர்ய:).சூரிய வழிபாடு சுகாதாரத்தை நிலை நிறுத்தும் (ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்). நம் கண்களுக்குப் பார்க்கும் திறன் உண்டு. ஆனாலும், அவனது ஒளியின் துணையுடன்தான் பார்க்க இயலும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வந்தால், கண் ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டியிருக்காது. பூதவுடலை, பெரும்பூதங்களுடன் இணைக்கும் போது, கண்கள் சூரியனில் இணையட்டும் என்கிறது வேதம் (ஸ¨ர்யம் தெசஷூர்கசகது).
இருண்ட சந்திரனுக்கு ஒளியை வழங்குபவன் சூரியன். நட்சத்திரங்களும் மற்ற கிரகங்களும் இவனது ஒளி பட்டு மிளிருகின்றன. ஒளியை வெளியிடும் அனைத்துப் பொருட்களும் சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்றவையே! இருளில் ஒளிந்திருக்கிற பொருளை அடையாளம் காட்டுகிறது வெளிச்சம். ஒளிந்திருக்கிற கர்ம வினையை அடையாளம் காட்டுகிறது, இவனுடைய வெளிச்சம் (தமஸித்ரவ்யாணிதீபஇவ). மற்ற கிரகங்களும் இவனுக்குத் துணை போகின்றன. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய அனைத் தும் சூரியனை வைத்தே நிகழ்கின்றன. அதாவது, முற்பிறவியில் நம் செயல்பாட்டைக் கண்காணித்தவன் அவன். இந்தப் பிறவியிலும் அதனைத் தொடர்கிறான். எதிர்காலத்திலும் தொடருவான்.
ஆக, முக்கால நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி! 'முக்காலத்திலும் நிகழ்கிற பலன்களை வெளியிடும் தகுதியை எனக்கு அளித்து அருளுங்கள்’ என வராகமிஹிரர் சூரிய பகவானை வேண்டுகிறார் (வாசம்ந: ஸததாதுறைககிரண: த்ரைலோக்யதீபோரலி:).

மாறிக்கொண்டே இருக்கிற உலகில், அதனை நடைமுறைப் படுத்துபவனே சூரியன்! சூரியனின் கிரணம், பனியை உருக வைக்கும். சேற்றில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி, கட்டியாக்கும்; தாமரையை மலரச் செய்யும்; ஆம்பலை வாட வைக்கும். இலைகளைக் காயச் செய்யும்; ஈரத்தை உலரவைக்கும். வெப்பம் ஏறிய புழுக்கத்தில், ஈசல் போன்ற உயிரினங்களைத் தோற்றிவைக்கும். பொருளின் இயல்புக்கு உகந்தபடி, மாறுபாட்டை ஏற்படுத்தும்! கர்மவினையின் இயல்பை ஒட்டி, மாறுபாட்டை நடைமுறைப்படுத்தும். மாறுபாட்டை வெளிப்படுத்த மாறுபட்ட கிரகங்களை துணைக்கு அழைத்துக் கொள்வான், சூரியன்.
அவனுடைய வெப்பம், குளிர்ச்சியை சந்தித்த சந்திர கிரணத் துடன் இணைந்து ஆறு பருவ காலங்களை உருவாக்குகிறது. தட்பவெட்பங்கள்தான் உலகச் சூழல் என்கிறது சாஸ்திரம் (அக்னீஷோமாத்மகம்ஜகத்). இடைவெளியை (ஆகாசத்தை) நிரப்பும் இந்த இரு பொருள்களின் மூலாதாரம் அவன் என்கிறது வேதம் (விச்வான்யயோ...). மோட்சத்தின் நுழைவாயில் சூரியன் என்கிறார் வராகமிஹிரர் (வர்த்மாபுனர்ஜன்மனாம்). அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களைப் படிப்படியே அடையச் செய்பவன் சூரியன்! கர்மத்தை முற்றிலும் துறந்த துறவியும், கர்மமே கடவுள் என அதில் ஒட்டிக் கொண்டு போராடும் வீரனும் சூரிய மண்டலத்தைப் பிளந்து, வீடுபேறு அடைகின்றனர் என்கிறது புராணம் (த்வாமிமௌபுருஷெளலேகே...).
ஒளிப்பிழம்புகள் ஜோதிடத்துக்கு ஆதாரம். சூரியன், ஒளிப்பிழம்பு.
அவனிடம் இருந்து ஒளியைப் பெற்ற சந்திரனும் ஒளிப்பிழம்பு. நட்சத்திரங்களும் ஒளி வடிவானவை என்கிறது வேதம் (ஜ்யோதிரிதி நஷத்ரேஷீ). கண்ணுக்குப் புலப்படும் சாஸ்திரம் ஜோதிடம். அதற்கு, சூரியனும் சந்திரனும் சாட்சி என்கிறது ஜோதிடம் (பிரத்யஷம் ஜ்யௌதிஷம் சாஸ்திரம் சந்திரார்க் கௌயத்ர ஸாக்ஷிணௌ). கிரகங்க ளின் கூட்டத்துக்கு சூரிய- சந்திரர்கள் அரசர்கள் என்கிறது ஜோதிடம். தேவர்களின் கூட்டத்துக்கு மன்னர்கள் என்கிறது வேதம். சூரியனும் சந்திரனும் இன்றி, வேள்வி இல்லை என்றும் தெரிவிக்கிறது அது (யதக்னீ ஷோமாவந்தரா தேவதா இஜ்யேதே)
வேதத்தின் மறுவடிவம்; வேள்விக்கு ஆதாரம்; ஜோதிடத்தின் அடிப்படை; விஞ்ஞானத்தின் எல்லை; மெய்ஞ்ஞானத்தின் நிறைவு; அன்றாடப் பணிகளின் வழிகாட்டி... என நம்முடன் இணைந்த கிரகம் சூரியன். கிரணம் மூலமாக நம்மில் ஊடுருவி, உடல் மற்றும் உள்ளத்தைப் பாங்குடன் ஒருசேர வளர்ப்பதில் சூரியனுக்குப் பங்கு உண்டு. இயற்கையின் செயல்பாடு, அவனது ஆணைக்கு உட்பட்டது. சூரியனைத் தவிர, மற்ற கிரகங்கள் 'ஜடங்கள்’; தானே செயல்படும் தகுதியற்றவை. சூரியனது இணைப்பில், அவை செயல்படும் தகுதியைப் பெறுகின்றன. நமது மனம், 'ஜடம்’; ஆன்மாவின் இணைப்பில் செயல் படும் (ஆன்மாமனஸாஸிம்யுஜ்யதே). கர்மவினை ஜடம்; சூரியனது இணைப்பில் செயல்படும். புத்தியின் செயல்பாடு கர்மவினைக்கு உட்பட்டது என்கிறது சாஸ்திரம் (புத்தி: கர்மானுஸாரிணீ). சூரியன், ஆன்மா; ஆகவே அவன் எதிலும் ஒட்டமாட்டான். அதன் தொடர்பில், மற்றவை செயல்படும். சூரியனது தொடர்பில் மற்ற கிரகங்கள், கர்மவினையை வெளிப்படுத்துகின்றன.
சிம்மத்துக்கு அதிபதியாக சூரியனைச் சொன் னாலும், அத்தனை ராசிகளிலும் சூரியன் (ஆன்மா) நிறைந்திருக்கிறான். எண்ணக் குவியல்களின் தொகுப்பை மனம் என்கிறோம். மன சஞ்சல இயல்பு, சந்திரனுக்கும் உண்டு (சஞ்சலம்ஹிமன:பார்த்த). சந்திரனுக்குக் கடகம் என்று சொன்னாலும், எல்லா ராசிகளிலும் நிறைந்திருக்கிறான், அவன்! 'ஹோரா’ என்கிற பெயரில், எல்லா ராசிகளிலும் இரண்டு பேரும் சம பங்கில் நிறைந்திருப்பதாகச் சொல்கிறது ஜோதிடம். இந்த இரண்டுபேரின் தொடர்புடன் ராசி நாதனான மற்ற கிரகங்கள் செயல்படுகின்றன.
ஆன்மாவும் மனமும் இணைந்தால் மட்டுமே புலன்கள் செயல்படும். ஜீவாத்மா வெளியேறிய பிறகு, மனம் இருந்தும் உடல் இயங்குவதில்லை. ஒவ்வொரு ராசியும் ஆன்மாவுடன் இணைந்த மனம் படைத்த உடலாகவே செயல்படுகிறது. த்ரேக்காணம், ஸப்தமாம்சம், நவாம்சம், தசாம்சம், த்ரிம்சாம்சம் ஆகிய ராசியின் உட்பிரிவுகளில் மற்ற கிரகங்களும் சேர்ந்திருக்கும். ஒவ்வொரு ராசியிலும் எல்லா கிரகங்களின் பங்கு இருக்கும். ராசிச்சக்கரத்தில் சூரியனின் ஊடுருவல், அத்தனை கிரகங்களையும் செயல்பட வைத்து, நன்மை தீமைகளை, கர்மவினைக்குத் தக்கபடி, நடைமுறைப் படுத்த வைக்கிறது. சூரியனின் வெப்பம் ஏறும்போதும் இறங்கும்போதும், நாம் படாதபாடு படுகிறோம். நீரை உறிஞ்சுபவ னும் மழையைப் பொழியச் செய்பவனும் அவனே (ஆதித்யாத்ஜாயதெவிருஷ்டி:). இன்பத்தை அளிப்பதும் துன்பத்தைச் சுமக்க வைப்பதும் சூரியனே! இயற்கையின் சட்ட திட்டங்களில், இவனது பங்கு உண்டு.

குருவுடன் சேரும்போது, ஆன்மிக நெறியைத் தந்தருள்வான். செவ்வாயுடன் இணையும்போது, உலகவியலில் திளைத்து, சிறப்பான செயலால் பேரும் புகழும் பெற்றுத் திகழலாம். சந்திரனுடன் இணைந்தால், மனத்தெளிவை ஏற்படுத்துவான். சுக்கிரனுடன் இணைந்தால், தாம்பத்தியத்தை இழக்க நேரிடும். சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டு, செல்வ வளம் பெற்றாலும், செல்லாக்காசாக மாற நேரிடும். ராகுவுடன் சேர்ந்தால், வீண்பழி, அவப்பெயர்தான் மிஞ்சும். பலவீனமான மேகம், சில தருணங்களில் சூரியனின் ஒளி பரவாமல் தடுப்பது உண்டு. அதேபோல், ஒளிப்பிழம்பான சூரியனை, இருள் கிரகம் மறைப்பதும் உண்டு. கேதுவுடன் சேர்ந்தால், வசதி இருந்தும் அனுபவ அறிவு இல்லாது போகும்! வசதி உலகவியலில் அடங் கும்; சுகம், மனம் சார்ந்த விஷயம். ஒன்றை அழித்து மற்றொன்றை அளிக்க வைப்பான். உச்சம், ஸ்வஷேத்திரம் போன்ற நிலைகளில் சூரியன் இருந்தால், செல்வாக்கு மிகுந்தவனாக மாற்றிவிடுவான். அவனது தனித்தன்மையை அழியாமல் காப்பாற்றுவான்.
நீசம், சத்ருஷேத்திரம் ஆகிய நிலைகளில் இருந்தால், விழுந்து விழுந்து வேலை செய்தாலும், தகுதி இருந்தும் சிறக்க முடியாது போகும்! சமூகத்தில் அங்கீகாரம் இருக்காது. பலம் பொருந்திய குரு, புதன் ஆகியோருடன் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும்; தன்னம்பிக்கை பிறக்கும்; மக்கள் சேவை யுடன் திகழலாம்; புகழுடன் வாழலாம்! ஆன்ம காரகனின் தொடர்பு, பலன்களைச் சுவைக்கத் துணை புரியும். சூரியனும் சந்திரனும் பலம் பெற்றிருந்தால், மற்ற கிரகங்களின் தாக்கத்தை, அதனால் விளையும் சங்கடங்களை எளிதாகக் கடந்துவிடலாம். ஆன்ம பலத்தில் மனம் வலுப்பெற்றால், எல்லா இன்னல் களில் இருந்தும் விடுபடுவது எளிது.

உண்டு. ஆன்ம சம்பந்தம் இல்லாத உடலுறுப்புகள், இயங்காது. நேரடி யாகவோ பரம்பரையாகவோ ஆன்ம காரகனின் சம்பந்தமின்றி, கிரகங்கள் இயங்காது. சூரியன் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை. கர்மவினைக்குத் தக்கபடி மாற்றத்தை ஏற்படுத்துவான். பலவாறான கர்மவினைகள்; எனவே, மாறுபட்ட கிரகங் களின் துணை அவனுக்குத் தேவை. பூமியில் விளையும் பயிர்கள் பலவிதம்; அதற்கு விதையின் தரம் காரணம். கண்ணுக்கு இலக்காகாத கர்மவினையின் தரத்தை வெளிக்கொண்டு வருபவன், சூரியன்!
ஞாயிற்றுக்கிழமை, சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாள். விண்வெளியில் சூரியனின் ஓடு பாதை, நடுநாயகமாக விளங்குகிறது. சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி... இப்படி முன்னும் பின்னுமாக இருக்கிற எல்லா கிரகங்களையும், தனது கிரணத்தால் செயல்பட வைத்து உலக இயக்கத்தைச் செம்மைப்படுத்துகிறான், சூரியன். 'ஸ¨ம் ஸ¨ர்யாயநம:’ என்று சொல்லி 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். சூரியன் உதிப்பதற்கு முன்பே அவனை வணங்குவது சிறப்பு. சூரிய நமஸ்காரம் 12 முறை செய்ய வேண்டும். மித்ர - ரவி - ஸ¨ர்ய - பானு - கக - பூஷ - ஹிரண்யகர்ப - மரீசி - ஆதித்ய - ஸவித்ரு - அர்க்க - பாஸ்கரேப்யோ நம: என்று சொல்லி வணங்கலாம். மித்ராயநம: ரவயநம: ஸ¨ர்யாயநம: பானவேநம: ககாயநம: பூஷ்ணெநம: ஹிரண்யகர்பாயநம: மரீசயேநம: ஆதித்யாயநம: ஸவித்ரேநம: அர்க்காயநம: பாஸ்கராயநம: என்று சொல்லிப் புஷ்பத்தைக் கைகளால் அள்ளி, அவனது திருவுருவத்துக்கு அளிக்க வேண்டும். 'பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ரச்மேதிவாகர...’ என்ற செய்யுளைச் சொல்லி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்.
வெள்ளி, 1 ஜூலை, 2011
நவக்கிரகங்களில் தனியிடம் பெற்றவன் செவ்வாய்
நவக்கிரகங்களில் தனியிடம் பெற்றவன் செவ்வாய். இவனுக்கு 'குஜன்’ என்றும் பெயர் உண்டு. 'கு’ என்றால் பூமி; 'ஜன்’ என்றால் பிறந்தவன் எனப் பொருள்; பூமி புத்திரன் என்பார்கள். பூமி, வெப்பத்துடன் இணைந்திருக்கும். இவனிடமும் வெப்பம் உண்டு!
பூமியில் விதைக்கப்படும் விதையானது, நீரின் துணையோடு அதிலிருக்கும் வெப்பத்தால் முளைவிடும். படைப்புக்கு வெப்பத்தின் துணை அவசியம். பிரம்மன், ரஜோகுண சேர்க்கையில் படைப்பை நிகழ்த்துகிறார் என்கிறது புராணம். இந்த ரஜோகுணத்துடன் இணைந்தவன் செவ்வாய். அதன் நிறம் சிவப்பு. இதை வைத்து, செவ்வாயின் நிறமும் சிவப்பு என்கிறது சாஸ்திரம். 'அக்னிர்மூர்த்தா’ என்ற மந்திரத்தை அவனை அழைப்பதற்காக பயன்படுத்தச் சொல்கிறது வேதம். இதில் வரும் 'அக்னி’ எனும் சொல், வெப்பத்தைச் சுட்டிக் காட்டும். செவ்வாய்க்கு அதிதேவதை- பூமி; பிரத்யதி தேவதை- க்ஷேத்ரபாலன். க்ஷேத்ரம் என்றால் பூமி; பாலன் என்றால், காப்பாளன் எனப் பொருள். இப்படி, பூமியின் சம்பந்தம் செவ்வாய்க்கும் அதன் அதிதேவதைகளுக்கும் உண்டு.
சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் சந்திரசாரப்படி சம்பந்தம் இருக்கும் தறுவாயில், பெண்களில் மாதவிடாய் தோன்றும் என ஜோதிடம் சொல்கிறது. 'ரஜஸ்’ என்றால், மாதவிடாயின் வெளிப்பாடு எனச் சொல்லும் தர்மசாஸ்திரம், 'ரஜ:ப்ரவிருத்தி’ என்று மாதவிடாயைக் குறிப்பிடுகிறது. சரியான வேளையில் போதுமான ரத்தத்துடன்... அளவோடு 3 தினங்கள் ரத்தத்தை (ரஜஸ்யை) வெளியேறச் செய்யும் வேலையை செவ்வாயின் சந்திப்பு நிகழ்த்துகிறது. சந்திரன்- மனம்; செவ்வாய்- ரஜோகுணம். ரஜோ குணத்துடன் மனம் இணையும்போது, வெப்பம் மேலிட்டு ரத்தம் வெளியேறுகிறது என விளக்குகிறது ஆயுர்வேதம்.
அரக்கு வண்ணத்தில் வெளியேறும் அந்த ரத்தம், ரஜோகுணத்தின் அடையாளம். அதன்பிறகே, மனதில் எண்ணங்கள் உருவாகும். ரிதுவான பிறகு, மனதில் எண்ணங்கள் உதயமாகி, படிப்படியாக வளர்ந்து, எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள இணையைத் தேடும். ஆக, இணையோடு இணையவைத்து மகிழ்ச்சியை ஊட்டுபவன், செவ்வாய். உடலுறவை நிறைவு செய்யவும் செவ்வாயின் பங்கு வேண்டும்.
உறைந்த நெய்க்குடம் போன்றவள் பெண். கடுமையான வெப்பம் போன்றவன் ஆண். இவர்களது சந்திப்பில் இன்பம் பிறக்கும் என்பார்கள். நெருப்பின் தாக்கத்தில் நெய் உருகியோடும். அதேபோல், எண்ணங்கள் உருமாறி இன்ப வடிவத்தை அடையும் என்கிறது தர்மசாஸ்திரம் (கிருதகும்பஸமாநாரீ தப்தாங்கார ஸம:புமான்). சந்திரனைப் பெண்ணாகவும், செவ்வாயை ஆணாகவும் சொல்லும் ஜோதிடம். 'அங்கார’ என்றால் நெருப்புத் தணல். வேதம், நெருப்புத் தணலை அங்காரம் என்கிறது. அதிக வெப்பம் தணலில் இருக்கும்; ஜ்வாலையில் இருக்காது (தேப்யோங்காரேப்யோர் சிருதேதி). அந்த வெப்பத்தைச் சுட்டிக் காட்டி, செவ்வாயை அங்காரகன் என்றார்கள்.
தாம்பத்யத்தின் முழுத் திருப்திக்கு அவன் பங்கு வேண்டும். 'சும்மா இருக்கும் சிவனை செயல்பட வைத்தவள் பார்வதி’ என்பார் ஆதிசங்கரர் (சிவ: சக்த்யா.) சுறுசுறுப்பு, செயல்பாடு, சிந்தனையோட்டம், தன்மானம், வீரம், தைரியம், கண்டிப்பு, ஆர்வம், பிடிப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய அனைத்தும் செவ்வாயின் சேர்க்கையில் முழுமை பெற்று விளங்கும்.
அத்யுச்சம், உச்சம், மூலத்ரிகோணம், ஸ்வக்ஷேத்ரம், ஸீஹ்ருத்க்ஷேத்ரம் போன்ற பலம் பெற்ற செவ்வாய், வாழ்க்கையில் தடையில்லா மகிழ்ச்சியை அளிப் பான். அதிநீசம், நீசம், சத்ருக்ஷேத்ரம், மௌட்யம், அஸ்தமனம்... போன்ற பலமிழந்த நிலையில், இன்னல்களுக்கு இரையாக்கி சங்கடத்தைச் சந்திக்கவைப்பான் என ஜோதிடம் விளக்கும்.
விண்வெளியில் சூரியனுக்கும் குருவுக்கும் இடையில் செவ்வாயின் ஓடுபாதை அமைந்துள்ளது. சூரிய னுடன் இணைந்தால்... வெப்பம் மேலிட்டு, சாகஸ வேலைகளில் ஆராயாமல் ஈடுபடவைத்து துயரத்தில் ஆழ்த்துவான். ஆன்மகாரகன் சூரியனை, 'ஆக்னேய க்ரஹம்’ என்கிறது ஜோதிடம். செவ்வாயும் ஆக்னேய க்ரஹம். இரண்டும் வெப்பத்தை உமிழும். இவர்களது சேர்க்கையில், வெப்பம் உச்சக்கட்டத்தை அடைந்து விபரீத விளைவுகளை உருவாக்கும். சூரியக் கிரணங்களை உள்வாங்கும் பூமி, இரட்டிப்பாக வெப்பத்தை வெளியிடும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
சந்திரனுடன் செவ்வாய் இணையும்போது, செவ்வாயின் வெப்பம் தணிந்து, மிதமான- இதமான சூழலை உருவாக்கி, மனதை ஆனந்தத் தில் ஆழ்த்துவான். இதை, 'சசிமங்கள யோகம்’ என்று பெருமையாகச் சொல்கிறது ஜோதிடம். சந்திரனில் இருக்கும் நீர், சூரியனிடமிருந்து பெற்ற வெப்பமான கிரணத்தை குளிரவைக்கிறது. தண்ணீருடன் இணைந்த சந்திரன், சூரியனிடம் இருந்து கிரணத்தைப் பெற்று படிப்படியாக வளர்கிறான் என்பது ஜோதிட விளக்கம் (ஸலிலமயேசசினிரவே: தீதிதய:...). வெப்பத்தைத் தணிக்க தண்ணீர் வேண்டும். சூரிய கிரணம், சந்திரனில் இருக்கும் தண்ணீரில் பட்டு வெளி வருவதால், நமக்கு குளிர்ச்சியை அளிக்கிறான் சந்திரன். அவனுக்கு சீதகிரணன் என்று பெயர் உண்டு. அதிக வெப்பத்தை அளவோடு நிறுத்த சந்திரனுக்கு தகுதி இருப்பதால், சசிமங்கள யோகம் அளவான வளமான வாழ்வைத் தரும் என வரையறுத்தது ஜோதிடம்.
வாழ்க்கைத் தரத்தை நிலைபெறச் செய்யவும் செவ்வாயின் பங்கு வேண்டும் என்கிறது ஜோதிடம். போர்வீரர்கள், வேட்டையாடுபவர்கள், மீன் பிடிப்பவர்கள், கசாப்புக் கடைக் காரர்கள், அறுவை சிகிச்சை செய்பவர்கள், அரசர்கள், நீதிபதிகள், வேள்வி செய்பவர்கள், மந்திரிகள், படைத்தலைவர்கள், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவர்கள் ஆகியோரை உருவாக்கி, அவர்களது பணியில் வெற்றிபெற வைப்பதில், செவ்வாய்க்கு தனிப் பங்கு உண்டு. இவர்கள், கருணை உள்ளம் படைத்தவர்களாகவே இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு, இலக்கை நோக்கிச் செயல்படும் சுறுசுறுப்பை செவ்வாய் அளிப்பான்.
தேவஸேனாதிபதியை மகிழ வைத்தால், செவ்வாய் மனமிரங்கி அருள்வான் என்பார்கள். செவ்வாயின் இடையூறு விலக, முருகனை வழிபடுவர். அவர், தேவ ஸேனாதிபதியாக விளங்கி, மூவுலகையும் காப்பாற்றினார்.
புதனோடு இணைந்தால், சிந்தனையில் சுணக்கம் எழாமல் செய்து, உசுப்பி செயல்பட வைத்து, வெற்றி பெறவைப்பான். சிந்தனைத் திறன் குறையாமல் பாதுகாக்க வெப்பம் உதவும். ரஜோ குணம் சுறுசுறுப்பை ஏற்படுத்தி, சிந்தனையை வளரவிட்டு உதவி புரியும். செல்வாக்கும் செவ்வாயின் இணைப்பில் வளரும். அரசாணை நம்மை ஆட்கொண்டு பணிய வைக்கும் வல்லமையை நிலைக்கச் செய்ய, செவ்வாயின் பங்கு அவசியம். ஜமீன்தார்கள், பிரபுக்கள், மக்கள் தலைவர்கள் ஆகியோரது பெருமை நிலைத்திருக்க, செவ்வாயின் பங்கு வேண்டும்.
குருவோடு இணைந்தால் அறவழி சிந்தனைகள் வெளிப்பட, பொதுநலத் தொண்டில் இன்பம் காண்பவராக மாற்றிவிடுவான். இன்ப- துன்பங்களின் தரத்தை அறிந்து, பிறரது துன்பத்தை அழிப்பதில் முன்னின்று செயல்பட வைப்பான். பொருளில் இருக்கும் பற்றைத் துறக்கச் செய்து, வள்ளலாக மாற வைப்பான். குருவின் சேர்க்கை, அவனது ரஜோ குணத்தை முடக்கி, நல்ல வழியில்- அமைதியான முறையில் சுறுசுறுப்புடன் செயல்படவைக்கிறது.
சுக்கிரனுடன் இணைந்தால், உலக சுகத்தை சுவைத்து மகிழ வைப்பான். சுக்கிரன், பெண்மை பெற்ற கிரஹம் எனச் சொல்லும் ஜோதிடம், செவ்வாயை ஆண்மை பெற்றது என்கிறது. மாறுபட்ட இனத்தின் இணைப்பே உலக சுகம். 'சேர்க்கையில் விளைந்த செயற்கையான சுகம்- உலக சுகம்; சேர்க்கையைத் துறந்து, தனிமையில் கிடைக்கும் சுகம்- ஆன்ம சுகம்’ என்ற விளக்கமும் உண்டு. பொருளாதாரச் செழிப்பு, படாடோபமான வாழ்க்கை, அளவு கடந்த அலங்காரம், செல்வச் செருக்கு ஆகிய வற்றை சுக்கிரன் அளித்தாலும், செவ்வாயின் சேர்க்கையில் சிந்தனை திசைமாறி, வாழ்க்கை தடம் புரள, சோகத்தைச் சந்திக்க வைப்பான் அவன். வலுவான செவ்வாயுடன் வலுவான சுக்கிரன் இணையும் போது, புகழுடன் வாழ்வ துடன், இறந்த பிறகும் புகழுடன் திகழ்வான்.
சனியுடன் இணைந்தால், சனியிடமிருந்து வலுப்பெற்று, விபரீத விளைவுகளைச் சந்திக்க வைப்பான். சனி, சூரியனில் இருந்து வெளிவந்த கிரகம்; சூரியனின் புதல்வன் என்கிறது ஜோதிடம். சூரியன் ஆக்னேய கிரகம். சனியும் ஆக்னேய கிரகம். செவ்வாயும் ஆக்னேயம். மூவரது இயல்பும் ஒன்றாக இருக்கும். ஆனால் சனிக்கிரகம், வாயுவின் தன்மையைப் பெற்றிருக் கிறது. வாயுவும்... அதாவது காற்றும் நெருப்பும் இணைந்ததுபோல் ஆகிவிடும், சனி- செவ்வாய் சேர்க்கை. இதை, 'அக்னிமாருத யோகம்’ எனக்
குறிப்பிடுகிறது ஜோதிடம். நெருப்பு கொழுந்து விட்டு எரியும்போது, காற்று அதற்கு உதவி புரிந்து, நெருப்பை மேலும் மேலும் வளரச் செய்யும். அதேபோல் சனியின் சேர்க்கை, செவ்வாய்க்கு
வலுவூட்டி, ரஜோகுணத்தைப் பெருக்கி, சிந்தனை செய்யவிடாமல் சடுதியில் செயல்பட வைத்து, துயரத்தை சந்திக்கவைக்கும். முற்றிலும் தீமையை விளைவிப்பதால், இதைக் கெடுதலான யோகமாகக் குறிப்பிடுகிறது ஜோதிடம்.
சனி, நம்புஸககிரஹம்; ஆண்மைக் குறைவால் செவ்வாய்க்கு அடிபணிந்து விடுகிறது. சனியை துக்ககாரகன் என்று குறிப்பிடும் ஜோதிடம். பிற கிரகங்களின் தாக்கத்தை சந்திக்காத வலுப்பெற்ற செவ்வாய், சனியின் சந்திப்பில் முழு பலத்துடன் செயல்படுவதால், அந்த ரஜோ குணம் எல்லையைத் தாண்டிக் கெடுதலைச் சந்திக்க வைக்கிறது. அதிகமானால் அமுதமும் விஷம் என்பது இங்கு பொருள் படைத்ததாகவே தென்படுகிறது.
ராகுவுடன் இணைந்தால்... இருளில் மூழ்கிவிடுவதால், செயல்பாடு சிறக்காமலோ, அரைகுறையாகவோ முடிவடைய வைப்பான். ராகுவை க்ரூர கிரகம் என்பர். கிரஹணத்தின்போது சந்திர- சூரியரைத் துன்புறுத்துபவன். அது அவனது இயல்பு. அவனது சேர்க்கையில்... சுறுசுறுப்பு துன்புறுத் தலுடன் இணையும்போது, துயரத்துக்கே வழிவகுப்பான்.
செவ்வாய், கேதுவுடன் சேர்ந்தால், நன்மையை விட தீமையைச் சந்திக்க வைப்பான். கேதுவும் ஆக்னேய கிரகம். 'சிகி’ என்று அவனுக்குப் பெயர் உண்டு. சிகி என்றால் நெருப்பு என்று பொருள். சிகி, நிழல் கிரகம். அதனுடன் இணைந்த செவ்வாய், தனது ரஜோ குணத்தை முற்றிலும் இழந்து, மனத்தெளிவை ஏற்படுத்தி வைப்பான். வலுவுடன் இணைந்த செவ்வாய்- கேதுவின் சேர்க்கையில், ஆசைகளை அழிக்கும் விஷயத்தில் சுறுசுறுப்பு பெற்று, கர்மவினை முழுவதையும் வெப்பத்தால் அழியவைத்து, அறிவாளியாக மாற வைப்பான். கேதுவை மோக்ஷகாரகன் என்கிறது ஜோதிடம். மோக்ஷம் என்றால் துயரத்திலிருந்து விடுதலை என்று பொருள்.
'அறிவு என்கிற நெருப்பு, எல்லா வினை களையும் அழித்து சாம்பலாக்கி விடும்’ என்று ஸ்ரீகண்ணன் சொல்வார். உலக சுகத்தில் சுறுசுறுப்பு இணையும்போது, இல் வாழ்க்கையில் திளைப்பான். உலக சுகத்தில் பற்றற்று செயல்படும்போது, அறிவைப் பெற முயற்சிகள் திருப்பிவிடப்பட்டு, மோக்ஷத்தை எட்டவைப்பான்.
ஆக, படைப்புக்கும் செவ்வாய் தேவை. இன்பத்தை சுவைக்கவும் அவன் தேவை. இன்பத்தைத் துறந்து வீடுபேறு பெறவும் அவன் தேவை. அவனின்றி அணுவும் அசையாது. அப்படி அசைவதற்கு ரஜோகுணம் தேவை. அது அவனிடம் இருக்கிறது.
செவ்வாய்க்கிழமையில் அவனை வழிபடவேண்டும். 'அம் அங்காரகாய நம:’ என்று சொல்லி, 16 உபசாரங்களைச் செய்ய வேண்டும். பூமி மாதா, அவனது அதிதேவதை. மந்திரம் தெரிந்தவர்கள், பூசூக்தம் சொல்லி வழிபட லாம். தெரியாதவர்கள், 'பிருதிவ்யை நம:’ என்று சொல்லி வழிபடலாம்.
காலையில் குளிர்ந்த நீரில் நீராடி உடையணிந்து, நெற்றித் திலகம் இட்டு, செவ்வாயின் திருவுருவத்தை வைத்து, 'அம் அங்காரகாய நம:’ என்று இரண்டு கைகளாலும் புஷ்பத்தை அள்ளிப்போட்டு வணங்குங்கள்.
ஆரக்தமால்ய வஸனம்
பாரத்வாஜம் சதுர்புஜம்
ஸ்கந்தாதிதைவதம் பௌமம்
க்ஷிதிப்ரத்யதி தைவதம்
- என்ற செய்யு ளைச் சொல்லி அடிபணிய வேண்டும். சிரமப் படாமல் எளிய முறையில் செயல்பட்டு, முழுமையைப் பெற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் தற்காலத்தில் அதிகம். அதைப் பெறமுடியாமல் தவிப்பர்களும் உண்டு. சிரமத்தை ஏற்று, அதைச் சுமந்து சுணக்க முறாமல், சுறுசுறுப்புடன் இயங்க செவ்வாயின் திருவருள் துணைசெய்யும்.
-

வெள்ளி, 17 ஜூன், 2011
குரு தரிசனம்... கோடி புண்ணியம்!
சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி- இந்த ஏழு கிரகங்களும், வாயு மண்டலத்தைக் கடந்திருக்கிற அண்ட வெளியில், பிரவஹம் எனும் சிறப்புக் காற்றினால், ஒன்றுக்கு மேல் அகண்ட இடைவெளியுடன் இணைந்த தனித்தனி வழித்தடங்களில் சுற்றி வருகின்றன என்கிறது சூர்யசித்தாந்தம். காலம் என்பது அருவமானது; அதற்கு உருவம் அளிப்பவர்களே இந்தக் கிரகங்கள்தான்! அதுமட்டுமா? கிழமைகளின் வரிசைகளை வரையறுத்ததும் இவர்கள்தான்.
இன்று ஞாயிற்றுக்கிழமை எனில், சூரியன் தோன்றும் வேளையில்... அன்றைய தினம் சூரிய ஹோரை. அன்று முழுவதும் ஞாயிற்றுக்கிழமை. கிரக வரிசையில், சூரியனில் இருந்து 4-வதாக இருப்பது சந்திரன். ஆகவே,
மறுநாள் திங்கட்கிழமை. சந்திரனில் இருந்து 4-வது, செவ்வாய்; எனவே, மறுநாள் செவ்வாய்க்கிழமை என விளக்கம் அளிக்கிறது சூர்ய சித்தாந்தம். அவர் களின் சுழற்சி, உலக இயக்கத்துக்கு உதவுவதால் அவர்கள் வணக்கத்துக்கு உரியவர்களாக மதிக்கப் படுகின்றனர். பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்து கொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர் நவக்கிரகங்கள். இவர்களின் தாக்கம் தொடாத இடமே உலகில் இல்லை. உடலுடன் நிற்காமல், உள்ளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் சிந்தனையிலும் மாற்றமுறச் செய்து, செயல்பாட்டில் ஏற்ற- இறக்கத்தையும் நிகழ்த்துகின்றன என்று, கிரகங்கள் குறித்து ஜோதிடங்கள் விவரிக்கின்றன.
12 ராசிகளுடன் இணைந்த இந்த ஏழு கிரகங்களும், கால புருஷனின் உடற்கூறாகக் காட்சி தருகின்றன. ஒளிப் பிழம்பான சூரியன்- கால புருஷனின் ஆன்மா; சந்திரன்- அவனுடைய மனம்; குரு, அவனுடைய பேரறிவு. சூரிய னிடம் இருந்து சந்திரன் உருப்பெற்றான் (ஸலிலமயேச சினிரவேர்தீதிதய;). இவர்களுடன் அறிவு இணையும் போது, சராசரத்தின் இயக்கம் சரியான பாதையில் செல்லும். அந்த அறிவுதான், குரு! அவனுக்கு அறிஞர் என்று பெயர். அதனால்தான், கிரகங்களில் குருவின் பங்கு சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள். கால புருஷனின் தேகத்தில் தலை, மேஷம்; முகம், ரிஷபம்; கழுத்து, மிதுனம்... எனத் துவங்கி கால்கள், மீனம் என முழுமையுறும். இந்த ராசிகளில் பற்றிக்கொண்டிருக்கும் கிரகங்கள், அந்தந்த உடற்கூறுகளுடன் இணைந்து, மொத்த உடலையும் பராமரிக்கின்றன. பஞ்சபூதங்களின் கலவையில் உருப்பெற்றது இந்த உலகம். பூதங்க ளில், ஆகாயமும் அடங்கும்; அதில் கிரகங்களும் இணைந்துள்ளன. ஐம்பெரும் பூதாம்சங்களின் கலவையில் உருப்பெற்றது இந்த மனித உடல் என் கிறது ஆயுர்வேதம் (இதிபூத மயோ தேஹ:).
நம் உடலிலும் ஆகாயத்தின் பங்கு உண்டு; அதில், கிரகங்களின் சாந்நித்தியமும் கலந்திருக்கும். வெளியிலுள்ள ஆகாயம், உடலுக்குள்ளும் பரவியிருக்கிறது எனத் தெரிவிக்கிறது உபநிடதம்.
வெளியில் தென்படும் கிரகங்களின் சுழற்சியில் ஏற்பட்ட விளைவு, உடலுக் குள் உறைந்துள்ள கிரகாம்சத்திலும் பரவியிருக்கும்.
கிரஹங்களில், குருவை 'பிரகஸ்பதி’ என்பர். அது, வேதம் அளித்த திருநாமம். சூட்சுமமான அறிவுக்கு, ஸ்தூல வடிவம் கொடுத்து, பிரஹஸ்பதி எனப் பெயரும் வைத்திருக்கிறோம். கிரக வரிசையில் செவ்வாய்க்கும் சனிக்கும் நடுவில் இருப்பார், குரு. அண்டவெளியில் அவரின் ஓடு பாதை, இந்த இரண்டுபேருக்கு இடையே அமைந்திருக்கும்.
ரஜோ குணம், சுறுசுறுப்புடன் நிற்காமல், அகங்காரம், இறுமாப்பு, அலட்சியம் ஆகியவற்றையும் ஏற்படுத்தும். ஏளனம் மற்றும் சூளுரைத்தல் ஆகியவற்றையும் அது தரவல்லது! ஆராயாமல் திடீரென முடிவு எடுத்தல், பொறுமை இல்லாமை ஆகியவற்றையும் தந்து அலைக்கழிக்கும்! செவ்வாய் கிரகத்தின் இயல்பும் அதுதான்! 7-ல் செவ்வாய் அவர்களின் ரஜோ குணத்தைத் தட்டி எழுப்பி, கருத்து மாறுபாடுகளைக் கொடுத்து, தாம்பத்தியத்தில் கசப்பையும் ஏற்படுத்துவான் எனும் நோக்கில், ஜாதகத்தில் செவ்வாய் தோஷத் தைத் தவிர்க்கின்றனர்.
சோம்பல், மெத்தனம், உறக்கம், மயக்கம், அறியாமை, உள்ளதை உள்ளபடி அறிகின்ற திறமையின்மை ஆகியன தமோ குணத்தின் வெளிப்பாடு; இது, சனியின் இயல்பு.
ஸத்வ குணம் பொருந்தியவன் குரு. தன் இரண்டு பக்கங்களிலும் உள்ள செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தி, இருவரையும் ஸத்வ குணத்துடன் இணைத்து உலக இயக்கத்தின் பயனை உணர வைப்பவர், பிரஹஸ்பதி! ராசிச் சக்கரத்தில் 9 மற்றும் 12-ஆம் வீடுகள் குருவின் ஆதிக்கத்தில் இருக்கும். தனுர் மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதி இவர்தான்! மீனத்தில் இருக்கும் குரு, தனக்குப் பிந்தைய ராசியில், அதாவது கும்பத்தில் சனியையும், முன் ராசியான மேஷத்தில் செவ்வாயையும் வைத்திருக்கிறார். தனுர் ராசியில் இருக்கும் குரு, பின் ராசியில் அதாவது விருச்சிகத்தில் செவ்வாயையும் முன் ராசியில் அதாவது மகரத்தில் சனியையும் வைத்துக் கொண்டிருக்கிறார். அண்டவெளி வரிசை யில் அவர், இருவருக்கும் இடையில் வழித்தடத்தை வைத்துக் கொண்டிருக் கிறார். இங்கேயும் ராசிச் சக்கரத்தில், இருவருக்கும் இடையே தனது இருப் பிடத்தை அமைத்துக் கொண்டிருக் கிறார். குருவானவர், சிஷ்யனை அருகில் அமர்த்திக்கொண்டு, அவனது அறியாமையை அகற்றுவது போல், இருவரது செயல்பாட்டையும் தூய்மைப் படுத்தி அவர்களையும் அரவணைத்தபடி செயல்படுகிறார் அவர்!
நமது அத்தனை இன்னல்களுக்கும் அடிப்படைக் காரணம், நம்மில் உறங்கிக்கிடக்கிற ரஜோ மற்றும் தமோ குணங்கள்தான்! அவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க, ஸத்வ குணம் வலுப்பெற்றிருக்க வேண்டும். காரத்தையும் கசப்பையும் கட்டுப் படுத்த, இனிப்பும் உப்பும் உதவும். அதேபோல் இனிய வாழ்க்கைக்கு மூன்று குணங்களும் தேவை. வாழ்க்கையின் திசையையே தடம் புரளச் செய்யும் ரஜோ மற்றும் தமோ குணங்களைக் கட்டுப்படுத்த, ஸத்வ குணம் அவசியம். அதனைத் தந்து அருள்பவர், குரு. வாழ்க்கை யுடன் என்றைக்கும் நம்முள் இணைந்திருப்பவரும் கூட! எதிர்பாராத இன்னல்களின்போது, அந்தச் சிக்கல்களில் இருந்து நம்மை விடுவிப்பவர், ஸத்வ குணத்தின் குன்றெனத் திகழும் குரு பகவான்!
பிரம்மாவின் முதல் படைப்பு, தண்ணீர். உலகை ஆட்கொள்வது பிரளயம்; அதாவது தண்ணீர். இரண்டையும் சுட்டிக்காட்டும் ஜலமயமான மீன ராசியில் இருந்தபடி, முடிவுக்கும் ஆரம்பத்துக்கும் இணைப்பாக வீற்றிருக்கிறார் அவர்! ஸத்வ குணத்துடன் சும்மா இருந்த குரு, தனக்கு அருகில் உள்ள மேஷ ராசியில் அமர்ந்த ரஜோ குண செவ்வாயின் துணையுடன் படைப்பைத் துவங்க உதவி புரிகிறார். அதேபோல், உலகை ஆட்கொள்ள, துயரத்துக்குக் காரணமான தமோ குண சனியின் உதவியால், அனைத்தையும் அழித்து பிரளயத்துக்கு வழி வகுக்கிறார். நீரில் இருந்து ஜீவராசிகளின் தோற்றத்தை உணர்த்தி, பரிணாம வாதத்தை வெளியிட்ட ஆய்வாளர்களின் முடிவை, குருவின் மீன ராசியின் இருக்கை, சொல்லாமல் சொல்கிறது!
அதிர்ஷ்டம், புண்ணியம், பெருமை, புகழ், சந்நியாசம், அதன் மூலம் கிடைக்கிற விடுதலை, அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ராசிச் சக்கரத்தின் 9-ஆம் இடமான தனுர் ராசியிலும் அமர்ந்திருக்கிறார் குரு. சுத்தமான ஸத்வ குணத்துக்கு அடையாளமான குணங்களைப் பறைசாற்றும் அந்த ராசி, அவரது சாந்நித்தியத்தில் வளர்ச்சி பெற்று, நல்ல குடிமகனாக மாற்றும் திறனைப் பெற்றிருக்கிறது. லோகாயத வாழ்வைச் செம்மைப்படுத்தவும், ஆன்மிக வாழ்வின் எல்லையை அடையவும் குருவருள் தேவை என்பதை 9 மற்றும் 12-ஆம் வீடுகளில் அமர்ந்து வெளிப்படுத்துவதை உணரவேண்டும். இகபர சுகத்தை அள்ளித் தரும் குரு பகவானைப் போற்றி வணங்குதலே சிறப்பு!
சந்திரனுடன் குரு இணையும்போது, மனமானது அறிவுடன் இணைகிறது. அறிவின் உதவியில், செயலானது சிறப்புற்று, செல்வத்தில் திளைக்கச் செய்கிறது. இதனால் இது, கஜகேஸரி யோகம் எனும் பெருமையைப் பெறுகிறது. சூரியனுடன் குரு இணையும் வேளையில், ஆன்மாவுடன் அறிவு இணைகிறது; அவன், ஆன்மிக அறிவைப் பெற்று வீடுபேறு எனும் நிலையை அடைகிறான்.
சீடரான சூரியன் வீட்டுக்கு அதாவது சிம்ம ராசிக்கு குரு விஜயம் செய்யும்போது, ஆன்மாவும் அறிவும் சந்திக்கின்றன. அப்போது, சிற்றின்பமான திருமணம் முதலானவற்றைத் தவிர்த்து, குருவுக்குப் பெருமையளிப்பார்கள்! மாமாங்க வருடத்தில் திருமணத்தைத் தவிர்ப்பது, அதன் வெளிப்பாடு. செவ்வாய் மற்றும் சனியுடன் இணையும்போது, இரண்டு குணங்களின் தாக்கங்களைக் கட்டுப் படுத்தி, ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் வாழ்வின் உயர்வுக்குச் சாதகமாக மாற்றி அமைப்பார் குரு பகவான். அவரின் பார்வை பட்டாலே, இரண்டு கிரகங்களும் தனது இயல்பை மாற்றிக்கொண்டுவிடும்.
7-ல் இருக்கும் செவ்வாயை, குரு லக்னத்தில் இருந்து பார்க்கும்போது, இடையூறைத் தருகிற இயல்பை மாற்றி, செவ்வாய்க்கு ஒத்துழைக்கும் தன்மையை வரவழைக்கிறார் குரு. அப்போது சம்பந்தப்பட்டவர்களின் தாம்பத்தியத்தில் இன்னல் கள் ஏதும் நேராது. குரு பார்வைபட்ட வீடுகளும் கிரகங்களும் தங்களது விபரீத எண்ணங்களை அடக்கிக்கொள்ளும்; நல்ல எண்ணங்களை வாரி வழங்கும்.
ரஜோ குணமும் தமோ குணமும் சேரும்போது, ஒன்று மற்றொன்றை வளர்த்து, பேரிழப்பு வரக் காரணமாக அமையும். சனியும் செவ்வாயும் இணைந்தால், இரண்டு குணங்களும் பெருகும். அதற்கு அக்னி மாருத யோகம் என்ற பெயர் உண்டு. நெருப்பு காற்றுடன் இணைகிறபோது, அணைக்க முடியாமல் திணறுவோம், இல்லையா?! அதேபோல், வாழ்வில் பிரச்னைகளின் இணைப்பால், நாமும் படாதபாடுபடுவோம். இந்த இருவரையும் குரு பார்த்துவிட்டால், அக்னி மாருத யோகம் செயலற்றுவிடும். குருவின் பார்வை, பிரச்னைகள் பலவற்றையும் அழித்துவிடும். குருவின் சேர்க்கை அல்லது பார்வை, கிரகங்களுக்கு இருக்கும் நல்லது- கெட்டது என்கிற இரு தன்மைகளில், கெட்டதை அழித்து, நல்லதைப் பெருக்கி உதவும்.
இத்தனை இருந்தும் ஒரு விதிவிலக்கும் உண்டு. ராகுவோடு சேர்ந்த குரு செயல்பட இயலாமல் தவிப்பார். ராகு இருள் வடிவு; அறியாமை! அறியாமையானது அறிவை ஆட்கொண்டு விடுகிறது. செயல்பாடு முடக்கப்படுகிறது. சூரிய னால் உருவாக்கப்பட்ட மேகம், சிலநேரம் சூரிய னின் கிரணத்தைப் பரவவிடாமல் தடுப்பதுண்டு.
மற்ற சுப கிரகங்கள் பாப கிரகத்துடன் இணைந் தால், பாப கிரகத்தின் தன்மை சுப கிரகங்களுக்கும் வந்துவிடும். ஆனால், குருவோடு சேர்ந்த பாப கிரகங்கள், தனது இயல்பை மாற்றி, குருவின் இயல்பை ஏற்றுக்கொண்டு விடும். இப்படியரு பெருமை குருவுக்கு மட்டுமே உண்டு. இந்தப் பெருமை, பரம்பொருளான- உலக குருவான தட்சிணாமூர்த்தியிடமிருந்து கை மாறியது. பரம்பொருள் பேரறிவு. அறிவுக்கு ஈசனை நாடு என்கிறது சாஸ்திரம் (ஞானம் மஹேச்வராதி ச்சேத்). 'சூரியனுக்கு ஒளியை வழங்கியவர் ஒளி மயமான பரம்பொருள்’ என்கிறது உபநிடதம் (தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி). அதுபோல, உலக குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் அறிவுத் திறன், நவக்கிரக குருவுக்குள் ஊடுருவியது.
குருவை என்றும் வணங்கவேண்டும். ஒட்டு மொத்தமான மகிழ்ச்சிக்கு அது உதவும். வேதம் ஓதுபவர்களும் 'ஸ்ரீகுருப்யோ நம:’ என்று குரு வணக்கத்தோடு செயல்படுவார்கள். 'கும் குருப்யோ நம:’ என்று சொன்னால், அது மந்திரமாக மாறிவிடும். அதைச் சொல்லி 16 உபசாரங்களை செயல்படுத்தவேண்டும்.
குருர் பிரம்மா, குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: குரு: ஸாஷாத் பரம்ப்ரம்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம: என்று செய்யுளைச் சொல்லி வணங்குங்கள். நன்மை நம்மைத் தேடி வரும்.

சனைச்சரன்
ஒன்பது கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும் குறிப்பிடுவர். 'சனை’ என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் தனது பயணத்தைச் சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு!
விண்வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டி இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர், இவர்! சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம். அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின.
ராசி மண்டலத்தை ஒருமுறை வலம் வருவதற்கு, சனி பகவானுக்கு 30 வருடங்கள் தேவை. அதாவது, ஒருவரது வாழ்நாளில், சனி பகவான் மூன்று முறை வலம் வருகிறார். முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை, 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை என சனி பகவானின் வலம் வருதல் நிகழ்கிறது. முதல் வலத்தை மங்கும் சனி; அடுத்ததை பொங்கும் சனி; மூன்றாவதை போக்கு சனி என்பார்கள்!
இப்படி மூன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், முதல் பிரிவு கௌமாரம் எனப்படும். அதாவது, அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். அடுத்து, யௌவனம்; அதாவது இளமைப் பருவம். எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு, அலசி ஆராயும் திறனுடன், நல்லது - கெட்டதை அறிந்து செயல்பட்டு வாழும் காலம் அது. துன்பங்களைத் தாங்கி, அதனை அலட்சியப்படுத்தி, மனோபலமும் சிந்தனைத் தெளிவும் கொண்டு செழிப்புடன் விளங்குகிற பருவம் இது! மூன்றாவது, முதுமை. தேக ஆரோக்கியமும் மனோபலமும் குறைகிற இறுதிப்பகுதி. கௌமாரம், யௌவனம், வார்த்தகம் என வாழ்வின் மூன்று பிரிவுகளை விவரிக்கிறது ஆயுர்வேதம்.
சிறுவயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில், சகல விஷயங் களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும்போது, சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும். மனதில் பதிந்த எண்ணங்கள், முழு வளர்ச்சியை எட்டாத நிலையில், சனியின் தாக்கம் முடங்கிவிடும். ஆகவே, சனியின் பாதிப்பு மங்கியது என்பர்.
இளமையில் வளர்ச்சியுற்று, எண்ணம் பெருகி, கிரகிப்பதிலும் வளர்ந்து, சனி பகவானின் தாக்கம் கட்டுக்கடங்காத ஆசைகளை அவனுக்குள் வளர்ந்தோங்கச் செய்து, பொங்கச் செய்கிறது. ஆகவே, பொங்கு சனி என்கின்றனர். இன்ப - துன்பம் நிறைந்த வாழ்வில், துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று மனதுள் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கிறார் சனி பகவான். இளமையில் கற்ற கல்வியுடன் விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, சனி பகவானின் தாக்கத்தை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் திசை திருப்ப முடியும். ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் சனீஸ்வரர்.
முதுமையில், சோர்வைச் சந்தித்த உடலும் உள்ளமும் கொண்டிருக்க, சனியின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. சனியின் விருப்பப்படி தன்னை இணைத்துக்கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க அவன் செயல்பாடு உதவும். ஆகவே, அவனது வேலையைச் சுட்டிக்காட்டி, போக்கு சனி என்றனர். ஆக, முதற்பகுதி வளரும் பருவம்; 2-ஆம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, இன்பத்தை அனுபவிக்கிற பருவம்; இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம். இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, சனி பகவானின் செயல்பாடு இருப்பதை, ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.
ராசி மண்டலத்தில் வலம் வரும் தருணத்தில், சந்திரன் இருக்கிற ராசியில் இருந்து பன்னிரண்டிலும், சந்திரன் இருக்கிற ராசியிலும், அடுத்து சந்திரனில் இருந்து 2-வது ராசியிலும் இரண்டரை வருடங்கள் தங்கியிருந்து, பயணிப்பார் சனி பகவான். ஆக, மூன்று ராசியிலும் இருந்த காலத்தைக் கூட்டினால் மொத்தம் ஏழரை வருடங்கள் வரும். இதை, ஏழரை நாட்டுச் சனி என்பார்கள். அதாவது ஏழரை ஆண்டுகளை நாடிய சனி எனப் பொருள்.
பிறக்கும் வேளையில் சந்திரன் இருக்கும் ராசி, ஒருவரது நட்சத்திரத்தைச் சொல்லும். அத்துடன், அவனது மனத்தையும் சுட்டிக்காட்டும். சனியுடன் மனம் நெருங்கிவரும் வேளை, 12-ஆம் ராசி; நெருக்கம் வலுப்பெற்றிருப்பது, சந்திரன் இருக்கும் ராசி; அந்த நெருக்கம் தளர்வது- 2-வது ராசி. இந்த நெருக்கத்தின் தன்மையைக்கொண்டே, மங்கும் சனி, பொங்கும் சனி, போக்குச் சனி என்றும் சொல்லலாம். 12-ல் உள்ளபோது மங்க வைப்பார்; சந்திரன் இருக்கும் ராசியில் இருக்கும்போது பொங்க வைப்பார். இரண்டில் இருக்கும்போது, போக வைப்பார்.
மனதோடு இணைந்த எண்ணங்கள், அதன் தாக்கம் நெருங்கும்போது, இன்பமோ துன்பமோ முழுமையாக வரும். விலகியிருக்கும் வேளையில், தாக்கம் செயலற்றுப் போகும். அதாவது, பன்னிரண்டிலும் இரண்டிலும்... நெருக்கம், மனத் துடன் (சந்திரனுடன்) குறைந் திருப்பதால் பாதிப்பானது, அனுபவத்துக்கு வராமலே போகலாம். அந்த ஏழரை வருட காலத்தில், அவனது தசாபுக்தி
அந்தரங்கள் வலுவாகவும் நன்மையை வாரி வழங்கு வதாகவும் இருந்தால், சனியின் தாக்கம் செயலிழந்துவிடும். தனக்கு இருக்கும் மூன்று இயல்புகளில் 'பொங்கும்’ இயல்பு வெளிப்பட்டு, தசாபுக்தி அந்தரங்களின் தரத்தைப் பொங்க வைத்து மகிழ்ச்சியைப் பன்மடங்காக்குவார். மாறாக தசாபுக்தி அந்தரங்கள் துயரத்தில் ஆழ்த்தும் நிலையில் இருந்தால், தரத்தையட்டி மங்கவைப்பதோ அல்லது அதன் உச்சத்தை எட்டவைப்பதோ சனியின் வேலையாக மாறிவிடும்.
தசாபுக்தி அந்தரங்களைப் புறக்கணித்து, தன்னிச்சையாக செயல்படும் தகுதி சந்திர சாரப்படி வளையவருகிற ஏழரை நாட்டுச் சனிக்கு இல்லை. சந்திர சாரப்படி தென்படுகிற
கிரகம், தசாபுக்தி அந்தரங்களின் பலத்தை நிறைவேற்றவே ஒத்துழைக்கும். பிறக்கும்போது இணைந்த நட்சத்திரம், அவனது ஆயுள் முடியும் வரை சந்திக்கவேண்டிய தசாபுக்தி அந்தரங்கனை வரிசையாகப் பட்டியலிட்டுத் தந்துவிடும்; கர்மவினைக்கு உகந்தபடி, இன்ப - துன்பங்களைச் சந்திக்கும் காலத்தையும் வரையறுத்துவிடும். சந்திரசாரப்படி மாறி வரும் அந்தந்த வேளையில், அந்தந்த ராசியில் தென்படும் கிரகங்களின் பலன்கள், தசாபுக்தி அந்தர பலன்களை முடக்கிவைக்க இயலாது. நொடிக்கு நொடி, மனித சிந்தனையில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதால், மனமாற்றத்துடன் இணைந்த கிரகங்கள், நிரந்தரப் பலனை அளிக்க இயலாது என்பதே உண்மை. நிச்சயமான பலனை அளிக்கவல்லது தசாபுக்தி அந்தரங்கள். தசையினால் திடமான பலத்தை அறியவேண்டும் என்கிறது ஜோதிடம் (விசிந்தயேத் த்ருடம்...). அஷ்டகவர்த்தை முன் வைத்து அதிருட பலத்தை அறியவேண்டும். நிச்சயமல்லாத, அதாவது சந்தர்ப்பம் இருந்தால் தென்படும் பலன்களை அறியவேண்டும் என்கிறது அது. யோகங்களால் இரண்டு வித பலன்களும் ஏற்படலாம். யோக பலம் செயல்பட்டுத்தான் தீரவேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் விளக்கம் தருகிறது ஜோதிடம்.
சூரியனுடனும் (ஆன்மா), சந்திரனுடனும் (மனம்) இணைந்திருப்பவர் சனி பகவான். சூரியனின் 'சாரம்’ சனி; சூரியனிடமிருந்து வெளிவந்தவர்; சூரியனின் புதல்வன் என்றும் ஜோதிடம் தெரிவிக்கிறது. அப்பாவின் சாரம், பிள்ளையாக உருவெடுத்தது என்கிறது வேதம். அதேபோல், மனதுடன் தொடர்புகொண்டவர் சனி. மனதுள் உறைந்திருக்கும் சிந்தனையைத் தட்டி எழுப்பிச் செயல்பட வைக்கிற
தமோ குணம் அவரிடம் உண்டு. சூரியனில் (ஆன்மா) இருந்து உருப்பெற்றது சந்திரன் (மனம்). ஆன்மா ஒன்று மனமும் ஒன்று. ஆகவே, 12 ராசிகளில் இருவருக்கும் ஒரு வீடு மட்டுமே உண்டு. புலன்கள் இரண்டாக இருப்பதால், மற்ற ஐந்து கிரகங்களுக்கு இரண்டு வீடுகள் இருக்கும். ஆன்மா மற்றும் மனத்துடன் புலன்களுக்குத் தொடர்பு உண்டு. ஆதலால் ராசிச் சக்கரத்தில், சிம்மத்தில் உள்ள சூரியனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். அதேபோல், கடகத்தில் உள்ள சந்திரனுக்கு, மற்ற கிரகங்களின் தொடர்பு வரிசையாக இருக்கும். சூரியனுக்கு சிம்மராசி. அதற்கு அடுத்த ராசியில், புதன். அதையடுத்து, சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். சந்திரனுக்குப் பின் ராசியில், மிதுனத்தில் புதன்; அடுத்து சுக்கிரன், செவ்வாய், குரு, சனி என்று இருப்பார்கள். இருவருக்கும் கடைசியில் சனி தென்படுவதால், மகரத்துக்கும் கும்பத்துக்கும் சனி அதிபதியாக அமைந்துள்ளார்.
ஆன்மாவுடன் மனம் இணையவேண்டும். அத்துடன் எண்ணங்கள் இணைந் தால் மட்டுமே, அது வளர்ந்து அனுபவத்துக்கு வரும். ஆன்மா, மனத்துடன் இணைகிறது; மனம், புலனுடன் இணைகிறது; புலன்கள் பொருட்களுடன் இணைகின்றன என்கிறது ஜோதிடம் (ஆன்மாமனஸா ஸம்யுஜ்யதே...).
இருக்கிற பொருள், தோற்றமளிக்கும்; வளரும்; மாறுபாட்டைச் சந்திக்கும்; வாட்டமுறும்; மறையும். ஆக... இருத்தல், தோன்றுதல், வளருதல், மாறுபடுதல், வாட்ட முறுதல், மறைதல் ஆகிய ஆறுவித மாறுபாடுகளைக் கொண்ட பொருளுக்கு, எல்லாமே உண்டு. அது மனிதனுக்கும் உண்டு. அதனை ஆறு பாவ விகாரங்கள் என்கிறது சாஸ்திரம் (அஸ்தி, ஜாயதெ, வர்த்ததெ, விபரிணமதே, ம்லாயதெ, நச்யதி, இதி). சூரிய- சந்திரனுடன் இணைந்த இந்த ஐந்து கிரகங்கள், ஜீவராசிகளில் தென்படும் ஆறுவித மாற்றங்களை நடைமுறைப்படுத்துகின்றன எனும் கோணத்தில், ராசிச் சக்கரத்தின் கிரக வரிசைகள் சுட்டிக்காட்டுகின்றன.
மனிதனாகப் பிறந்தவன் முதலில் சந்திப்பது கல்வியை. அடுத்து பொருளாதாரம், செயல்பாடு, தெளிவு பெற்று மகிழ்தல், கடைசியில் மறைதல் என அவனது வாழ்க்கை நிறைவுறுகிறது. இந்த வரிசையில் புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி எனத் தென்படுகிறது. இறுதியில் உள்ள சனி, மறைவைச் சந்திக்கிற வேளையை நடைமுறைப்படுத்துகிறார். அதாவது, சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல; அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர்.
'பிறந்தவனுக்கு இறப்பு உண்டு; இறப்பு இருப்பவனே பிறக்க இயலும்; அதுதான் நியதி’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். விதை முளைக் கிறது; வளர்கிறது. இலை, பூ, காய், கனி என மாறுபாடுகளைச் சந்திக்கிறது; வாட்டமுறுகிறது; மறைகிறது என்பது நமக்குத் தெரியும். உடலில், ஆன்மாவுக்குக் குடியிருக்கத் தகுதியில்லாத நிலையில், உடலுக்கு மறைவு வருகிறது. அந்த வேளையை வரையறுக்கும் பணியை சனி பகவான் சுட்டிக்காட்டுகிறார். நம்மை வளர்த்து, நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப - துன்பங்களை கர்மவினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர் சனி பகவான். உடல் வாழத் தகுதியற்ற நிலையில், மறுபிறவி தருவார்; பாபமும் புண்ணியமும் அற்றுப் போயிருப்பின், மறைவை இறுதியாக்கி மோட்சம் தருவார்.
'சம் சனைச்சராய நம:’ என்று சொல்லி, சனி பகவானுக்கு 16 வகை உபசாரங்களை அளித்து வழிபடலாம். 'நம: ஸ¨ர்யாய ஸோமாய மங்களாய புதாய ச குருசுக்கிர சனிப்ய: சராஹவே கேதவே நம:’ எனும் ஸ்லோகத்தைச் சொல்லி, 12 நமஸ்காரங்களைச் செய்தால், 12 ராசியில் வீற்றிருக்கும் கிரகங்களை வணங்கி வழிபட்டதாக ஆகிவிடும். உடல் - உள்ளத்தை வாடவைத்து, அடிபணிந்தால்தான் பலன் உண்டு என நினைக்க வேண்டாம். உள்ளத் தெளிவுடனும் ஈடுபாட்டுடனும்
சனி பகவானின் திருநாமத்தைச் சொல்லி வழிபட்டால், அவனருளால் இன்பம் பொங்கும்; மூன்று நிலைகள் இருந்தாலும், நம்மைப் பொறுத்தவரை 'பொங்கும்’ சனியாகவே நமக்குக் காட்சி தருவார்.
சனீஸ்வரரை தினமும் வணங்கி, மனதில் உறைந்தவராக மாற்றினால், விசேஷ பூஜை, தனி வழிபாடுகள் ஏதும் தேவையே இல்லை. வாழ்வின் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்பச் செயல்பட்டு, வளங்கள் அனைத்தையும் நமக்குத் தந்தருளும் சனீஸ்வர பகவானை மனதாரப் பிரார்த்திப்போமாக!

மகிழ்ச்சிக்கு மனமே காரணம்; இடம் காரணமல்ல என விளக்குபவன் சுக்கிரன்.
பூமியில் இருந்து விண்வெளியில் முதலில் சந்திரனின் ஓடுபாதையும், பிறகு புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய் எனும் வரிசையில் ஓடுபாதைகளும் இருக்கும். ராசிச் சக்கரத்திலும், சுக்கிரனுக்கு முன்னும் பின்னுமான வீடுகளில், புதனும் செவ்வாயும் தென்படுவர். ரிஷபத்துக்குப் பொறுப்பான சுக்கிரனின் முன் வீட்டில் புதனும், பின் வீட்டில் செவ்வாயும் அதிபதியாக இருப்பர். துலாத்துக்கு அதிபதியான சுக்கிரனுக்கு முன் வீட்டில் செவ்வாயும், பின் வீட்டில் புதனும் இடம் மாறியிருப்பர்.
சுக்கிரன் உலக சுகங்கள் அனைத்தையும் நமக்கு வழங்குபவன். அவன் வலுவை இழந்தால், ஏழ்மையில் தள்ளுவான்; வலுப்பெற்றிருந்தாலோ செல்வத்தில் திளைக்கச் செய்து, சிந்தனையைத் திருப்பி, சிக்கலில் சிக்க வைத்து, நம்மைத் துயரத்தில் ஆழ்த்துவான். சுக்கிரன் அளவான வலுவுடன் இருந்தால், வளமான வாழ்வைத் தருவான் நமக்கு!
பக்கத்து வீட்டு புதன்- விவேகத்துடனும், மறுபக்கத்து வீட்டுச் செவ்வாய்- சுறுசுறுப்புடனும் நம்மை இயங்க வைப்பார்கள். புதனது சேர்க்கையால் விவேக மும் கலப்பதால், செல்வச் செருக்கின்றிச் செயல்படும் திறன் கிடைக்கும். செவ்வா யுடன் சேரும்போது, ரஜோ குணத்தின் சேர்க்கை நிகழ, தவறான சிந்தனை தலை தூக்கும்; மெத்தனம் வெளிப்படும்; துயரத்தைச் சந்திக்க நேரிடும்.
சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் பயண வேளையில் ஒற்றுமை உண்டு. இருவருக்கும் ஏறக்குறைய இரண்டு வீடுதான் இடைவெளி! அடிக்கடி சூரியனுடன் நெருங்கும் வேளை அதிகம் உண்டு என்பதால், சூரியனின் ஒளியில் மங்கி, செயல்படும் தகுதியை இழக்க நேரிடும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் சேரும்போது, தனது தனித்தன்மையை இழந்துவிடுவான், சுக்கிரன். சேர்ந்த கிரகத்தின் செயல்பாடும் அவனில் கலப்பதால், மாறுபட்ட பலனையே தருவான். 'இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை’ என்கிறான் காளிதாசன். இதற்கு, சுக்கிரனின் மாறுபட்ட அமைப்பே காரணம். ஏழை, செல்வந்தன் ஆகிய இந்த இரண்டு நிலையும் அவனால் ஏற்படுவதே!
மாறுபட்ட காலத்தில், விகிதாசாரப்படி செல்வத்தைத் தருவதால், ஏழ்மையும் செல்வச் செழிப்பும் என மாறி மாறி வருகிற நிலையைச் சந்திப்பவர்கள் இருக்கின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! சுக்கிரன் செல்வத்தில் மூழ்கடித்தால் விவேகம் குன்றும்; சிந்தனை திசை திரும்பும். சுக்கிரன் வலுவிழந்தால், விவேகம் முளைக்கும்; செல்வந்தனாவது கடினம். இந்தச் செல்வம், விவேகம் இரண்டும் ஒருசேரக் கிடைப்பது அரிது! அதாவது, கிடைத்ததைக் கொண்டு திருப்திப்பட வேண்டும் எனும் கருத்தை உணர்த்துகிறான், சுக்கிரன். அறிவும் செல்வமும் மாமியார்- மருமகளைப்போல... ஒன்று சேராது! ஸ்ரீலட்சுமியும் ஸ்ரீசரஸ்வதியும் மாமியார்- மருமகள்தான். இரண்டுபேரும் ஒத்துப் போகமாட்டார்கள். அறிவு இருப்பவரிடத்தில், செல்வத்தின் சேமிப்பு இருக்காது; செல்வம் மிகுந்தவனிடம் அறிவு மங்கும். இந்த இரண்டின் தாக்கம், இன்றைய விஞ்ஞான உலகிலும் உண்டு! பொருளாதாரமும் விவேகமும் சம அளவில் இணையாது. வயதில் முதிர்ந்தவன், அறிவில் முதிர்ந்தவன், ஒழுக்கத்தில் முதிர்ந்தவன் ஆகிய அனைவரும் செல்வந்தனின் வீட்டு வாசலில், கைகட்டிச் சேவகம் செய்யக் காத்திருக்கின்றனர் என்கிறார், கவிஞர் ஒருவர் (ஞானவிருத்தா; வயோவிருத்தா...). இன்றைக்கு, இந்தச் சூழலே அதிகம் காணப்படுகிறது.
அதாவது, செல்வமும் விவேகமும் சம வலிமையுடன் திகழ்கிற நிலையை ஜோதிடம் உருவாக்கவில்லை. புதன், கன்னியில் உச்சனாக இருப்பின், சுக்கிரன் உச்சம் பெறமாட்டான். சுக்கிரன் மீனத்தில் இருப்பின், உச்சம் பெற்றிருப்பான். புதன், அங்கே நீசனாகிவிடுவான். அதாவது, புதனுடன் மீனத்தில் சுக்கிரன் இருந்தால், புதனும்; புதனுடன் கன்னியில் இணைந்தால், சுக்கிரனும் நீசம் பெறுகின்றனர். அதாவது, இருவரும் முழு பலத்துடன் இணைவது, இயலாத ஒன்று. அறிவு வலுப்பெற்றால் செல்வம் முடங்கும்; செல்வம் வலுப்பெற்றால் அறிவு முடங்கும் என்பதை காலத்தின் நியதியாக சுக்கிரன் வெளிப்படுத்துகிறான். இருவரது சேர்க்கை அவர்களின் இயல்புகளை இடமாறச் செய்யும். துஷ்டனின் சேர்க்கையில் நல்லவன் துஷ்டனாகலாம். நல்ல சேர்க்கையால் துஷ்டனும் நல்லவனாகலாம்!
மீனத்தில் நீசனான புதனுக்கு உச்ச சுக்கிரனின் சேர்க்கையைப் பார்த்து, புதனுக்கு நீசபங்கம் வந்து, ராஜ யோகமாக மாறிவிட்டதாக... நற்பலனாக சித்திரித்து விளக்கமளிக் கும் ஜோதிடம். கன்னியில், நீச சுக்கிரனுக்கு உச்ச புதனது சேர்க்கையில் நீசபங்கம் வந்து, ராஜ யோகமாக மாறியதாகச் சித்திரிக்கும். உச்ச கிரக சேர்க்கையில், நீசம் வலுப்பெறும்; நீசக் கிரக சேர்க்கையில், உச்சம் தரம் தாழ்ந்து விடும் என்கிறது அது! இந்த இரண்டு சேர்க்கையும் ஒன்றை இழந்து, மற்றொன்றை வழங்குமே தவிர, இரண்டையும், சமமாகச் சேர்த்து வழங்காது. இதை உயர்ந்த யோகமாகச் சொல்லும் ஜோதிடத்தின் கூற்றுக்கு ஆதாரம் தேட வேண்டி யுள்ளது. ஆக, இருவரின் உச்ச நீச சேர்க்கையில், இருவரும் சம பலனை அளிக்கும் வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. எனவே, அறிவும் செல்வமும் ஒரே இடத்தில் முழுமையாக இருப்பது, அரிதாகி விடுகிறது. இருட்டும் வெளிச்சமும் ஒரே இடத்தில் இருப்பதில்லை.
களத்திரகாரகனாகவும் விவாக காரகனாகவும் செயல்படுபவன். சிற்றின்பம், உலக சுகம், பாட்டு, இசை, நாட்டியம் முதலான கலைகள், ஆடம்பரப் பொருட்களில் ஈர்ப்பு, புதிய பொருட்களின் மீதான ஆர்வம் ஆகிய அனைத்தையும் தரவல்லவன் சுக்கிரன்; அழகிலும் அழகிய பொருட்களிலும் ஆர்வத்தைத் தூண்டிவிடுவான் அவன்.
கடகம் போன்ற ஜல ராசியில் இருந்து, அது லக்கினத்திலிருந்து களத்திர ஸ்தான மாக அமைந்தால், பலரிடம் சிற்றின்பத்தைத் தேடி அலையவைப்பான். அஷ்டமத்தில் வீற்றிருந்தால், தாம்பத்திய சுகத்துக்காக ஏங்க வைப்பான்; காலம் கடந்து தருவதுடன், முழுத் திருப்தியைத் தராமல் அலைக்கழிப்பான். இரண்டு பாப கிரகங்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சுக்கிரன், வலிமையை இழந்த நிலையில் இருந்தால், அரைகுறையான தாம்பத்ய சுகத்தைத் தந்து, விரக்தியில் தள்ளுவான். சுக்கிரனுக்கு, 4-லும் 8-லும் பாப கிரகம் இருக்க... 'சதுரச்ர’ தோஷத்தைச் சந்தித்த சுக்கிரன், களத்திர தோஷமாக மாறி, மனைவியை இழக்கச் செய்வான்.
விவாகத்துக்குக் காரகன், சுக்கிரன். 'காரகன்’ என்றால், நடைமுறைப்படுத்தவேண்டியவன் என்று அர்த்தம். அவன் நல்ல நிலையில் இருந்தால், உரிய தருணத்தில், தடங்கலின்றித் திருமணத்தை நடத்திவைப்பான். லக்னத்தில் இருந்து, 7-வது வீடு களத்திர ஸ்தானம். அங்கே, விவாக காரகனான சுக்கிரன் இருந்தால், களத்திர சுகத்தை பலவீனமாக்கு வான். 7-ஆம் பாவமாக அமைந்த விருச்சிகத்தில் வீற்றிருக்கும் சுக்கிரன், வரம்பு மீறிய சிற்றின்பத்தைத் தேடச் செய்து, துயரத்தில் ஆழ்த்துவான். சூரியனுடன் இணைந்து, 9-வது இடத்தில் அமர்ந்தால், வெப்பத்தின் தாக்கத்தால் தாம்பத்திய ஈடுபாட்டை வெட்டிவிடுவான். பாப கிரகங்களுடன் இணைகிற சுக்கிரன், தனது இயல்பை வெளிப்படுத்த முடியா மல் தவிப்பான். மகர லக்னம், துலாத்தில் சுக்கிரன். துலாம் 10-ஆம் வீடு... அங்கே சுக்கிரன் அமர்ந் தாலும்; சிம்ம லக்னம், ரிஷபத்தில் சுக்கிரன். ரிஷபம் 10-ஆம் வீடு... அங்கே சுக்கிரன் அமர்ந்தாலும், அவனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. இந்தத் தோஷத்தை எட்டிய சுக்கிரன், வேலையில் இடையூறு விளைவித்து, பொருளாதாரப் பற்றாக் குறையை உண்டுபண்ணுவான். சுபக் கிரகங்க ளோடும்- அவற்றின் பார்வை பட்டும், சுக்கிரன் வலுப் பெற்றிருந்தால், வாழ்நாள் முழுவதும் இன்ப மயமாக வாழலாம்.
கும்பம், மகர லக்னங்களுக்கு சுக்கிரன் யோக காரகன். ஒரு கிரகம், கேந்திரத்துக்கும் த்ரிகோணத் துக்கும் அதிபதியாக இருந்தால், யோக காரகன் எனும் அந்தஸ்து உண்டு. சுக்கிரன் யோக காரகனாக மாறியதால், அவனுடன் சேர்ந்த கிரகங்கள் நற்பலனை அளிக்கும்விதமாக மாறிவிடுவர். பாபத்துடன் இணைந்த சுக்கிரன், பாப கிரகத்தின் தாக்கத்தால் தனது இயல்பை மாற்றி, சேர்ந்த கிரகத்தின் இயல்புக்குத் தக்கபடி பலன்களைத் தருவான். அப்போது, சுக்கிரனின் தன்னிச்சையாகப் பலனளிக்கும் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழில் செவ்வாயும், சுக்கிரனும் இருப்பதாகக் கொள்வோம். செவ்வாய், தாம்பத்திய சுகத்தை அழிப்பவன். ஆனால், சுக்கிரனின் சேர்க்கையில் தன் இயல்பை மாற்றிக்கொண்டு பலனை அளிப்பான். இதேபோல், சுக்கிரனும் தனது இயல்பை மாற்றி செவ்வாயின் இயல்புடன் பலன் தருவான். அப்போது, இருவரிலும் இருவரின் இயல்பும் கலந்திருப்பதால், இழப்பையும் தராமல், சுகத்திலும் முழுமை கிடைக்காமல் அரைகுறை பலத்தையே தருகின்றனர். செவ்வாய் 7-ல் இருந்தால் வைதவ்யம்; செவ்வாயுடன் சுபக் கிரகம் சேர்ந்திருந்தால், வைதவ்யம் இல்லை. ஆனால், 'புனர்பூ’வாக மாறிவிடுவாள். அதாவது, ஆசைப்பட்டவனைத் துறந்து வேறொருவனை ஏற்பாள் எனப் பலனை மாற்றிச் சொல்வதைக் கவனிக்க வேண்டும் (ஆக்னேயை: விதவாஸ்தகை: மிச்ரே புனர்பூ பவேத்). செவ்வாயால் ஏற்பட்ட தாம்பத்யத்தை இழக்கும் சூழலைச் சந்தித்தவளை வேறொருவருக்கு மனைவியாக மாற்றி, கறுப்புப் புள்ளியுடன் வாழ்க்கையைத் தொடரச் செய்வான், செவ்வாயுடன் இணைந்த சுக்கிரன். 'புனர் பூ’ எனும் திருப்புமுனை அவனால் உருவானது.
தசா வருஷத்தின் எண்ணிக்கை மற்ற கிரகங்களைவிட சுக்கிரனுக்கு அதிகம். 20 வருடங்கள் அவனது தசை நீடிக்கும். மூன்றாக வகுத்த தசா வருஷத்தில், 2-வது பகுதியில் தசா பலன்களை அள்ளித் தருவான். 2, 7-க்கு உடையவனாக அங்கே வீற்றிருந்தால், அதாவது மாரகாதிபதி மாரகத்தில் இருந்தால், அழிவைச் சந்திக்க வைப்பான். இன்பத்தைக் கொடுத்துவிட்டு, திடீரென துன்பத்தில் தள்ளும்போதுதான், அது பொறுக்கமுடியாத துயரமாகிவிடுகிறது. அதை தனது இயல்பாகக் கொண்டிருக்கிறான் சுக்கிரன்.
ஆணில் உருப்பெறும் கடைசித் தாதுவுக்கு 'சுக்கிரம்’ எனப் பெயர் வைத்திருக்கிறது ஆயுர்வேதம். அதுதான் தாம்பத்திய சுகத்தின் அடிப்படை. சிற்றின்பத்தை அளிப்பவனான சுக்கிரனுக்கு, இந்தப் பெயர் பொருத் தமே! நல்லவன் சேர்க்கையில் இன்பம், கெட்டவன் சேர்க்கையில் துன்பம் என்பதற்கு சுக்கிரன் எடுத்துக் காட்டு. இளமையை இனிமையாக்குவதில் இவனுக்கு நிகர் எவரும் இல்லை. வம்ச விருத்திக்கு, வாழ்வில், நம்பிக்கையூட்ட சுக்கிரன் அவசியம். விண்வெளி ஓடு பாதையில் ஆத்மகாரகனான சூரியனுடன் நெருங்கிச் செல்வதால், தன்மானத்துடன் வாழச் செய்பவன் அவன். அறத்தை வளர்ப்பதிலும், இனத்தைப் பெருக்குவதிலும் திறமை பெற்றவன் என்று அவன் அமர்ந்த ரிஷப ராசி சுட்டிக்காட்டும் (தர்ம ஸ்த்வம் விருஷரூபேண...). சீர்தூக்கி ஆராய்ந்து முடிவு எடுப்பதில் முதன்மையானவன் என்பதை அவன் அமர்ந்துள்ள துலா ராசி சுட்டிக் காட்டும். அதாவது, கிராமச் சூழலிலும் (ரிஷப ராசி) நகரச் சூழலிலும் (துலாம்) மனம் ஒத்துப்போக வைப்பதில் திறமைகொண்டவன். மகிழ்ச்சிக்கு மனமே காரணம்; இடம் காரணமல்ல என விளக்குபவன் சுக்கிரன்.
சுக்கிர வழிபாட்டு முறையை வேதம் வகுத்துத் தந்திருக் கிறது. 'சுக்கிர சாந்தி’ என விரிவான வழிபாட்டை சாந்தி ரத்னாதரம் எனும் நூல் விளக்குகிறது. வெள்ளிக்கிழமை, அவனை வழிபட உகந்த நாள். 'சும் சுக்ராயநம:’ என்று சொன்னால் அது மந்திரமாக மாறிவிடும் என மந்திர மஹோததி சொல்கிறது. இந்த மந்திரத்தை 108 முறை மனதுக்குள் சொல்லி வழிபடலாம். சுக்கிரனின் உருவத்தை 'சும் சுக்ராய நம:’ எனும் மந்திரத்தால், 16 உபசாரங்களை நடைமுறைப்படுத்தி வணங்குவது வளம் தரும். தினமும் அவசரத்துடன் வழிபடுவதை விட, வெள்ளிக்கிழமை தோறும் முழு ஈடுபாட்டுடன் சுக்கிரனை வணங்கி பலன் பெறலாம்.
'பகவந்தம் கவிம் சுக்ரம் பிரணதார்த்தி வினாசகம்
ஸர்வகாம பிரதம் வந்தெ பரமானந்த தாயகம்’
- எனும் ஸ்லோகத்தைச் சொல்லியும் வணங்குங்கள்; வாழ்வு வளம் பெறும்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்
புதன் பகவானை வணங்குங்கள்; வளம் பெறுவீர்கள்!
விண்வெளியில் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் இடையே அமைந்துள்ளது, புதனின் பயணப்பாதை. ராசிச் சக்கரத்தில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் பின்வீட்டில் தென்படுவான், புதன் பகவான். மிதுனமும் கன்னியும் அவன் இருக்கும் இடங்கள்; கன்னியில் உச்சம் பெற்றிருப்பதால், அவனது பலம் வலுத்திருக்கும். மிதுனம் என்றால் இருவர்; அதாவது... இணைந்த இருவர் எனும் பொருள் உண்டு.
நாகரிக மனித இனத்தின் வெளிப்பாடு, மிதுனம். அது முதிர்ச்சி அடைந்த நிலையைச் சுட்டிக்காட்டுவதே கன்னி. ஓடத்தில், கன்யகை கையில் பயிருடன் தென்படும் இயல்பு கன்னிக்கு உண்டு. சூரியனுடனும் (ஆன்மா) சந்திரனுடனும் (மனம்) சேர்ந்து காணப்படுவான், புதன்.
ராசிச் சக்கரத்தில் சூரியனுடன் இணையும் வேளையில், நிபுண யோகத்தைத் தரவல்லவன், புதன். எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொண்டாலும், எளிதில் வருவதற்கான சிந்தனையை, புத்திசாலித்தனத்தை அளிப்பான். புதன் என்றால், அறிதல், உள்வாங்கி உணர்தல் என்று அர்த்தம் உண்டு (புத அவகமனே). உடலையும் உள்ளத்தையும் இணைப்பதில் புதனுக்குப் பங்கு உண்டு. ஆன்மிகத்தையும் உலகவியலையும் இணைக்கிற பாலமாகச் செயல்படுவான், புதன். மனம் நினைத்ததை புத்தி ஆராயும். அந்த வேலையை இறுதி செய்வதற்குப் புதன் தேவை. சந்திரனின் (மனம்) மைந்தனாக புதனைச் சித்திரிக்கிற தகவல், புராணத்தில் உண்டு. அதாவது, சந்திரனிலிருந்து வெளியானவன் புதன். மனத்தின் எண்ண ஓட்டத் துடன் நெருங்கிய தொடர்பு, புதனுக்கு இருப்பதையே இது உணர்த்துகிறது. புதன் என்றால், அறிஞர் என்கிற அர்த்தமும் உண்டு.
உடலில் அணு அளவில் உள்ள மனம், புதனின் ஒத்துழைப்பில், தன்னுடைய எண்ணங் களை விரிவாக்கி, செயல்படுத்தி வெற்றிக்கு வழி வகுக்கிறது. சிந்தனை வளத்துக்கான அடித்தளம், புத்தி; அது, புதனுடன் இணைந்தே இருக்கும். நாகரிகமான சிந்தனையைத் தூண்டுபவனும், முதிர்ச்சி அடைந்த செயல்பாட்டுக்கு உரியவனும் புதனே! அவன் வலுவிழந்தால், பாமரனாகச் செயல்படுவான்; வலுவுற்றால், அறிஞனாக விளங்குவான். கல்வியை முழுமையாகப் பெறுவதற்கு, புதனின் துணை அவசியம். வாழ்வின் வெற்றிக்கு ஆதாரமான அறிவு வளர்ச்சிக்கு, புதனின் பங்கு வலுப்பெற்றிருக்க வேண்டும்.
உலக சுகத்தை அடைவதற்குப் பணம் வேண்டும்; அதனை ஈட்டுவதற்கு உயரிய கல்வி வேண்டும்; அதனைப் பெறுவதற்கு, புதனின் ஒத்துழைப்பு தேவை. உயர்கல்வியானது பணத்தை மட்டுமே அளிக்கும். குறிப்பாக, இன்றைய சூழலில், உலக வாழ்வின் சுகத்தை அடைவதற்குப் பணத்தை ஈட்டித் தருமே தவிர, அறிவின் முதிர்ச்சியை அளிக்காது. ஆகவே, படிக்காத மேதைகள் தோன்றுவதற்கு புதனே காரணமாகிறான்!
இன்றைய கல்வியறிவு, பெரும்பாலும் தொழிலுடன் இணைந்து பணம் ஈட்டுகிற கருவி யாகவே மாறிவிட்டது. அதை அளிப்பது மட்டுமின்றி, அறிவையும் அளிப்பவன், புதன்! பேரறிவை, பெருஞானத்தை அடைவதற்கு, துறவறம் ஏற்பவர்களுக்கு புதனின் உறுதுணை அவசியம். அவனுக்கு, 'ஸெளம்யன்’ என்ற பெயர் உண்டு. ஸோமன் என்றால் சந்திரன். அவனுடைய மைந்தன் என்றும் இதற்கு அர்த்தம் சொல்வர்.
பொதுவாக, மற்ற கிரகங்கள் யாவும் ஏனைய உடல் உறுப்புகளுடன் தொடர்பு கொண்டிருக்கும். புதன் மட்டும், சந்திரனுடன் (மனம்) நெருங்கிய தொடர்பில் இருப்பவன்! சூரியன், சந்திரன் ஆகிய இருவரது தொடர்பில் பலம் பெற்று, பிற கிரகங்கள் செயல்படுகின்றன. மற்ற ஐந்து கிரகங்களும் நட்சத்திர கிரகங்கள். அவற்றை, தாராகிரகங்கள் என்கிறது ஜோதிடம். ஆன்மாவாகிய சூரியனும், மனமாகிய சந்திரனும் வலுவாக இல்லையெனில், மற்ற கிரகங்கள் செயலற்றுவிடும்; புலன்கள் வேலை செய்யாமல் நிலைத்துவிடும். எனவே சூரிய- சந்திரருக்கு, ஜோதிர்கிரகம் எனும் அந்தஸ்து உண்டு.
மனமானது நினைக்க வல்லது; புத்தி ஆராய வல்லது; அத்துடன், அதற்குத் தகுந்தபடி உத்தரவிடவும் செய்யும்.; புலன்கள் அதன்படி செயல்படும். புதனுடன், வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு ஆகியோர் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும்; சிந்தனையில் தடங்கல் இருக்காது; வெற்றியும் மகிழ்ச்சியும் தேடி வரும்.
சனி, செவ்வாய், ராகு- கேது ஆகியோர் இணைந்தால், தனது வலிமையை இழப்பான் புதன்; தவறான சிந்தனைகளால், சங்கடத்தைச் சந்திக்கச் செய்வான்.
சூரியனுடன் நெருக்கமாக இருப்பின், நிபுண யோகத்தை அளிப்பான். ஆனாலும், மிக நெருங்கிய நிலையில், மௌட்யம் பெற்று, அதாவது செயல்படும் தகுதியை இழந்து, விபரீத பலனைத் தந்து விடுவான், புதன். அஸ்தமனமானால், அதாவது சூரிய ஒளியில் தென்படாமல் இருப்பின், செயல்பட மனமிருந்தும் இயலாத நிலைக்குத் தள்ளுவான். இதனால்தான், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பர், முன்னோர். அதாவது, பொன் குவிந்திருப்பினும், அறிவு பெருகுவது அரிது!
செல்வந்தர்கள் பலருக்கு அறிவுரை வழங்க, அறிவாளிகள் தேவைப்படுவது உண்டு. பணத்தைப் பல வழிகளிலும் ஈட்டலாம்; அதனைத் தக்கவைத்துக் கொள்ள அறிவு தேவை. அதற்கு, ராசிச் சக்கரத்தில் புதன் வலுவுற்றிருக்க வேண்டும்.
செவ்வாயுடன் இணைந்தால், ரஜோ குணத்தின் சேர்க்கையால், சிந்தனை திசை திரும்பும்; விரும்பத்தகாத விளைவுகளுக்குக் காரணமாகி விடுவான், புதன்! சனியுடன் இணைந்திடின், மெத்தனத்துடன் இருக்கச் செய்து, அறிவிருந்தும் பாமரன்போல் செயல்பட வைப்பான்.
சனி, புருஷத்தன்மை கலந்த அலி; புதன், பெண்மை கலந்த அலி என அவர்களின் தரம் குறித்து விவரிக்கிறது ஜோதிடம். ஆகவே, அவர்களின் சேர்க்கை, இரண்டும் கெட்டான் பலத்தையே வழங்கும் என உறுதி செய்கிறது.
அதேபோல், ராகு- கேதுவோடு இணைந்தாலும் நற்பலனை அளிக்கமாட்டான், புதன். ஏனெனில், இந்தக் கிரகங்களை நிழல்கிரகம் என்கிறது ஜோதிடம் (சாயா கிரஹ;). அதாவது, இருள், அறியாமை என்று அர்த்தம். இருளில் மறைவதும், அறியாமை ஆட்கொள்வதும் செயல்பாட்டையே முடக்கிவிடும் அல்லவா?!
புதன், சுபக்கிரகம். ஆனால், பாபக் கிரகத்துடன் இணைந்தால், பாவியாக மாறுவான் என்கிறது ஜோதிடம். அப்படித்தான், அறிவானது, துஷ்டனுடன் இணையும் போது மங்கிவிடும்; நல்லவனுடன் இணைய... துளிர்விட்டு மிளிரும். ஆசை, கோபம், அறியாமை, அகங்காரம், அசூயை ஆகிய அனைத்தும் மனதில் இணைந்திருக்கும்; அன்பு, பண்பு, உண்மை, சகிப்புத்தன்மை, அடக்கம், இரக்கம் ஆகிய நற்குணங்களும் மனதுள் இருக்கும். புதன் வலுப்பெற்றால், துர்குணங்களை அடக்கி, நற்குணங்களை வளர்க்கும்; சிந்தனைத் தரத்தை உயர்த் தும்; நல்ல குடிமகனாக மாறச் செய்யும்.
புதன், மற்ற கிரகங்களுடன் சேராமல், மிதுனத்திலோ கன்னியிலோ வீற்றிருக்கும் வேளையில், எதிர்மறையான பலனைத் தருவான் என்கிறது ஜோதிடம்.
தனுர் லக்னம் அல்லது மீன லக்னம்; புதன்... மிதுனம் அல்லது கன்னியில் வீற்றிருந்தால், கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும்; இதனால் விபரீத பலனே கிடைக்கும் என்பர். தனுர் லக்னமானால், ஏழிலும் பத்திலும் இருக்கிற புதனுக்கு, கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. மீனமெனில், நான்கிலும் ஏழிலும் அந்தத் தோஷம் இருக்கும். நாலு கேந்திரங்கள் இருந்தாலும், 4-வது கேந்திரத்தில் இருக்கிற புதன், உலக சுகத்தால் கிடைக்கிற மகிழ்ச்சியை இழக்கச் செய்வான்; மற்ற கேந்திரங்களின் பலனை இழக்க வைக்கமாட்டான் எனும் விளக்கமும் ஜோதிடத்தில் உண்டு. புதனானவன், அறிவு வழிச் சுகத்தை அடையவும் செய்வான்; இழக்கவும் வைப்பான்.
காலத்தின் அளவுகோலான ஒரு வாரத்தின் நடுநாயக மாக வீற்றிருப்பவன், புதன். மனதில் படிந்த அழுக்கு மற்றும் உடலில் தென்படும் அழுக்கு ஆகியவற்றை அகற்ற, புதன்கிழமை சிறந்தது என்கிறது சாஸ்திரம். முடியும் நகமும் உடலின் கழிவுப் பொருட்கள் என்கிறது ஆயுர்வேதம். மஜ்ஜை, எலும்பு இவற்றின் கழிவுகள் என்றும் தெரிவிக்கிறது.
அந்தக் கழிவுகளை அகற்றுவதற்கு, புதன் கிழமையைப் பரிந்துரைக்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான், அந்தக் காலத்தில் புதன்கிழமையன்று க்ஷவரம் செய்துகொள்வார்கள் (குர்வீத புத சோமயோ:). ஆண்கள், எண்ணெய் தேய்த்துக் குளிக்க, புதன் கிழமையையே தேர்ந்தெடுக்கும் சம்பிரதாயமும் உண்டு. எண்ணெய் தேய்த்துக் குளித்தால், உடல் அழுக்கு அகன்றுவிடும். தற்காலச் சூழலால் அது விலக்கப்பட்டாலும், அதன் பெருமை குன்றிவிடாது.
பூர்வஜென்ம வினைக்குத் தக்கபடி, பிறக்கும் வேளை அமையும். வினையின் முழு உருவத்தை ஜாதகத்தில், வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் விளக்கும். புதன் வலுவுடனும், மற்ற கிரகங்களின் தாக்கத்தால் வலுவிழக்காமலும் இருந்தால், அதனால் விளைகிற நற்பயன்கள் யாவும் முன் ஜென்ம புண்ணியத்தின் சேமிப்பு என அறியலாம்.
கிரகங்களின் கூட்டுப்பலன் தான் நடைமுறைக்கு வரும். ஆகவேதான், வீடுகளுக்கு 'ராசி’ எனப் பெயர் அமைந்தது. ராசி என்றால் கூட்டம் என்று அர்த்தம். நெற் குவியலை தான்ய ராசி என்றும், பணக் குவியலை தன ராசி என்றும் சொல்வர். தனியரு கிரகம், மற்ற கிரகங்களின் தாக்கத்தை முறியடித்துப் பலன் தராது. அவற்றுடன் இணைந்து, சிறு மாறுபாட்டுடன் தனது பலனை நடைமுறைப்படுத்தும். முற்றும் துறந்த சில துறவிகள், அறிஞர்கள், பெரியோர்களிடம் சில அல்பத்தனங்களும் தென்படும். பெருமையில் இந்தச் சிறுமை புலப்படாது. ராசி புருஷனின் நாலாம் வீட்டுக்கும் ஆறாம் வீட்டுக்கும் உடையவனாகச் சித்திரிப்பதால், மகிழ்ச்சியின் இழப்பு, எதிரியின் தாக்கம் ஆகியவை நேரிட புதன் காரணமாகிறான்.
வலுப்பெற்ற புதனுக்கு, குரு மற்றும் செவ்வாயின் பார்வை சேர்ந்து வரும்போது, அறிவை வளர்க்க குரு உதவினாலும், செவ்வாய் அகங்காரத்தை அளித்து, அறிவை மங்கச் செய்வதும் நிகழும். அகங்காரம் வெளிப்படுகிற அறிஞர்களும் உண்டு. விவேகம் அகங்காரத்தை அழிக்க வேண்டும். ஆனால், செயல்படாது போய்விடும். புதனை வழிபட்டால், அகங்காரம் அழியும்; அமைதி கிடைக்கும். விவேகத்தைத் தரவல்லவன் புதன் பகவான்; அவனை வழிபட, விவேகம் வளரும்!
அடக்கமும் சகிப்புத்தன்மையும் இருந்தால் வளமான வாழ்க்கை நிச்சயம். 'பும் புதாய நம:’ என்று சொல்லி புதன் பகவானது திரு விக்கிரகத்துக்கு 16 உபசாரங்களைச் செய்யுங்கள். அல்லது, அதன் அதிதேவதையான ஸ்ரீமந் நாராயணனை, 'நமோ நாராயணாய’ என்று சொல்லி, புதனை வழிபடுங்கள். இன்னலை அகற்றி, இன்பத்தை வழங்குவான்!
பஞ்சபூதங்களில், பூமியின் பங்கு புதனில் உண்டு. நம் உடலிலும் பூமியின் பங்கு உண்டு. ஆகவே, பூமித் தாயின் வழிபாடு, புதன் பகவானின் வழிபாடாக மாறிவிடும்.
'சமுத்ரவஸனே! தேவி! பர்வதஸ்தன மண்டிதே! விஷ்ணு பத்னி! நமஸ்துப்யம் பாதஸ்பர்சம்க்ஷமஸ்வமே’ எனும் ஸ்லோகத்தை மனதாரச் சொல்லலாம்.
ஸெளம்ய! ஸெளம்ய குணோபேத!
புதக்ரஹ மஹாமதே!
ஆத்மானாத்ம விவேகம் மே
ஜயை த்வத்ப்ரசாதத:
- என்று சொல்லி வணங்கி, இயற்கையில் விளைந்த பொருட்களை புதனுக்கு அர்ப்பணிக்கலாம். புதன்கிழமை நன்னாளில், இப்படி மனதாரப் பிரார்த்தியுங்கள். ஆர்வத்துடன் விஸ்தாரமான பூஜையில் இறங்கவேண்டாம்; ஆடம்பரத்தில், பூஜை மூழ்கிப் போகும்; சோர்வு ஏற்பட்டு, ஒரே நாளில் பூஜை நின்றுவிடும். என்றென்றைக்கும் நடைமுறைப்படுத்தும் அளவுக்கு வழிபட்டால், தடங்கலின்றி பூஜையைத் தொடர முடியும்.
ஒருவேளை, பூஜைக்கு நேரம் கிடைக்காது போனால், மனதுள் புதன் பகவானது மூல மந்திரத்தையும் ஸ்லோகத்தையும் சொல்ல... மருத்துவரையும் தேடவேண்டாம்; ஜோதிடரையும் பார்க்க வேண்டாம்!
ஆரோக்கியமும் அமைதியும்தான், நாம் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிற சொத்து. அவை கிடைப்பதற்கு, புதன் பகவானை வணங்குங்கள்; வளம் பெறுவீர்கள்!

செவ்வாய், 3 மே, 2011
ராகு - கேது பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பலன்கள்
ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை, 8-ஆம்வீட்டில் சென்று மறைகிறார் ராகு. மன நிம்மதி, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும்.
தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை வழி சொத்துச் சிக்கல்கள் நீங்கும். ஆனால் எதிர்பாராத செலவுகளும், வீண் பயணங்களும் அதிகரிக்கும். தம்பதிக்குள் சிறு கருத்து மோதல் களும் ஏற்படும். அந்தரங்க விஷயங்களில் மூன்றாம் நபரை நுழைக்காதீர்கள். மனைவிக்கு, பெண்களுக்கே உரிய உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. இந்த கால கட்டத்தில் திடீர் பயணம், வாகனச் செலவுகள் வந்துபோகும். சொத்துப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. பழைய வழக்கில், வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்கவேண்டாம். 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷ நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. குழப்பம், காரியத் தடங்கல் வரக்கூடும். அடுத்தவர் பிரச்னையில் தலையிட வேண்டாம். பழைய கடன் தொந்தரவு மனசை வாட்டும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாகத்தில் செல்கிறார் ராகு. இந்த காலகட்டத்தில் பெரிய பதவியில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். வீடு கட்டும் பணியைத் தொடர வங்கிக் கடன் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.
மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். விமர்சனங்கள் எழுந்தாலும் உங்களின் புகழ் கூடும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை; அசைவம் தவிர்க்கவும். தங்க ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். வெளியூர் செல்லும்போது, வீட்டு பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள். எவருக்கா கவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மாணவர்கள், உயர் கல்வியில்
கூடுதல் கவனம் செலுத்தவும். அரசியல்வாதிகள், அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். கன்னிப் பெண்கள், புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில், பெரிய முதலீடுகள் வேண்டாம். பாக்கிகளை வசூலிப்பதில் போராட்டம் உண்டு. கமிஷன், ஷேர், புரோக்கரேஜ் வகைகளால் முன்னேற்றம் உண்டு. வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. பங்குதாரர்கள், உங்களின் நிர்வாகத் திறனை மதிப்பர். உத்தியோகத்தில் தொல்லை தந்து வந்த மேலதிகாரியே, இனி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். இழந்த சலுகை மீண்டும் கிடைக்கும். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு பரிசும், பணமுடிப்பும் உண்டு.
கேது பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் கேது பகவான், ராசிக்கு 2-வது வீட்டில் நுழை கிறார். சாதுரியமான பேச்சால் சாதிப்பீர்கள். சிலநேரம், பேச்சால் பிரச்னைகளும் ஏற்படலாம்! பல் வலி, பார்வைக் கோளாறு வந்து நீங்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். எனினும், உங்கள் யோகாதிபதியின் நட்சத்திரங்களில் கேது செல்வதால் இடையிடையே பண வரவு, யோக பலன்களும் உண்டாகும். மகனுக்கு, எதிர்பார்த்த வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் இருந்த சிக்கல்கள் நீங்கி, திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: மிருகசீரிடம் நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 18.9.2011 வரை கேது பகவான் செல்வதால், இந்த காலகட்டத்தில் கௌரவப் பதவிகள், பண வரவு, சகோதர உதவி உண்டு. 19.9.2011 முதல் 25.5.2012 வரை ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் புகழ், கௌரவம் உயரும். புது இடம் வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழக்கவழக்கங்களில் கவனம் தேவை. 26.5.2012 முதல் 30.11.2012 வரை, கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், வீண் டென்ஷன், தாழ்வு மனப்பான்மை, சலிப்பு வந்து நீங்கும். வீண்பழியும் ஏற்படலாம். சொத்துப் பிரச்னையில் நிதானம் தேவை. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.
வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து செயல்படுங் கள். உத்தியோகத்தில், வேலை அதிகரிக்கும். மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன் பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, ஓரளவு பண வரவையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
--------------------------------------------------------------------------------
ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல், ராகு உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் வந்து அமர்வதால், உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். டென்ஷன், மன உளைச்சல்கள் நீங்கி, இனி உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போவீர்கள்.
கணவன்- மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலைக்கும். எனினும், களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டில் ராகு அமர்வதால், மனைவியுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்படலாம்; பெரிதுபடுத்த வேண்டாம். மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, ரத்த அழுத்தம் வந்து நீங்கும். அவர் வழி உறவினர்களால் கருத்துமோதல்கள் ஏற்படலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, அழகும் அறிவும் மிகுந்த குழந்தைச் செல்வம் வாய்க்கும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசு காரியங்களில் தடுமாற்றம் விலகும்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், பிள்ளைகளால் செலவு கள் உண்டு. எனினும் அவர்களால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் தீர்வு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். 22.1.12 முதல் 30.9.12 வரை, அனுஷத்தில் ராகு செல்வதால், தந்தைவழிச்
சொத்து கைக்கு வரும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். புது வீடு கட்ட லோன் கிடைக்கும். வேலை கிடைக்கும். 1.10.12 முதல் 30.11.12 வரை, விசாக நட்சத்திரத்தில் ராகு செல்வதால் அலைச்சல், பணப் பற்றாக்குறை, மூத்த சகோதர வகையில் கருத்து மோதல், சிறுசிறு விபத்து வந்து நீங்கும்.
பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உயர் கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவர். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தடைப்பட்ட காரியங்களும் முழுமை பெறும். எவருக்காகவும் ஜாமீன் போடாதீர்கள். மதிப்பு கூடும். கன்னிப் பெண்கள், பெற்றோரின் பாச மழையில் நனைவர். மாணவர்களுக்கு, விளையாட்டின்போது கவனம் தேவை.
வியாபாரத்தில், புதிய அணுகுமுறையால் சாதிப்பீர்கள். ஷேர், கமிஷன், அரிசி குடோன், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டு. வேலை ஆட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிடவேண்டாம். உத்தியோகத்தில், உயரதிகாரி நேசக் கரம் நீட்டுவார். பதவி உயர்வு உண்டு. கணினித் துறையினருக்கு வேலை அதிகரிக்கும். கலைத் துறையினர் போட்டி- பொறாமைகளுக்கு நடுவில் வெற்றி பெறுவர்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால், நேரத்துக்கு தக்கவாறு பேச வைப்பார். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தாரின் இன்ப-துன்பங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். மகளுக்காக வரன் தேடி அலைவீர்கள். மகனின் வேலை- படிப்பு குறித்தும் அதிகப் போராட்டம் இருக்கும். தலை சுற்றல், ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும். வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். பழைய கடனை நினைத்து வருந்துவீர்கள். சகோதரர்கள், நண்பர்களிடம் வீண் விவாதங்கள் வேண்டாம்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை, மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தின் முற்பகுதி கொஞ்சம் சவாலாக இருக்கும். பிற்பகுதியில் ஓரளவு பண வரவு உண்டு. மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு சிறு சிறு விபத்துகள் ஏமாற்றங்களும் நிகழலாம். 19.9.11 முதல் 25.5.12 வரை, ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால், இந்த நட்சத்திரக்காரர்கள், சாட்சி கையப்பம் இடவேண்டாம். இருசக்கர வாகனத்தில் கவனம் தேவை. 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் வீண் கவலை, விரயம், சோம்பல், வந்து நீங்கும். கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் எவரையும் நம்பி ஏமாறாதீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும்.
புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். அரசியல்வாதிகள், தலைமையை விமர்சிக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் தீவிரம் காட்டுவது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. பங்குதாரர்களிடம் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசுக்கான வரிகளை முறையாகச் செலுத்துவது நல்லது. உத்தி யோகத்தில் வேலை அதிகரிக்கும். எனினும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, இடைவிடாத முயற்சியால் எண்ணியதை எட்டிப் பிடிக்க வைக்கும்.

ராகு பகவான் 16.5.2011 முதல் 30.11.2012 வரை, உங்கள் ராசிக்கு 6-வது இடத்தில் வந்து அமர்வதால், எதிலும் முன்னேற்றம்தான். சந்தேகத்தால் பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாழ்க்கைத் துணையின் தேக ஆரோக்கியம் மேம்படும். மறுமணத்துக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல சேதி வந்துசேரும். வரவேண்டிய பணம் தாமதமின்றி வந்து சேரும்; கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
புதிதாக ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவுகளுடனான மனஸ்தாபம் நீங்கும். வழக்கில் வெற்றி உண்டு.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: கேட்டை நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 21.1.2012 வரை ராகு பகவான் செல்வதால் திடீர் பண வரவு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சகோதரப் பகை நீங்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை அடைக்க உதவிகள் கிடைக்கும். 22.1.12 முதல் 30.9.12 வரை ராகு, அனுஷ நட்சத்திரத்தில் செல்வதால் சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். தந்தைவழியில் சொத்து சேரும். ராகு பகவான், 1.10.12 முதல் 30.11.12 வரை விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பார்த்த காரியங்கள் தடைப்பட்டு முடியும். அதேநேரம், வி.ஐ.பி-களிடமிருந்து எதிர்பாராத உதவிகள் வந்துசேரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசியும் உண்டு.
மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். தடைப்பட்டிருந்த மகளின் திரு மணம் இப்போது கூடிவரும். சகோதர - சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். கன்னிப் பெண்கள், தடைப்பட்டிருந்த கல்வியை மீண்டும் தொடருவர். நல்ல வேலை கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். பணப் பற்றாக்குறையால் தடைப்பட்ட கட்டட வேலைகள், இனி முழுமை அடையும். பூர்வீகச் சொத்து வழக்குகள் சாதகமாகும். அதிகாரிகளின் துணையுடன் அரசு காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில், புதிய அணுகுமுறையால் லாபத் தைப் பெருக்குவீர்கள். மருந்து வகை, எண்ணெய் வித்துகள், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகத்தில், மேலதிகாரி கனிவுடன் நடந்துகொள்வார். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினர் குறித்த வதந்திகள் விலகும். பெரிய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.
கேது பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 12-ல் சென்று அமர்கிறார் கேது. உடல்நிலை மேம்படும்.
பேச்சில் தெளிவு பிறக்கும். எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மகனுக்கு தடைப்பட்ட திருமணம் முடியும். சகோதர- சகோதரி வகையில் அலைச்சல் இருந்தாலும் மகிழ்ச்சி குறையாது. சொத்துப் பிரச்னைகள் தீரும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செல்கிறார் கேது. இந்த காலகட்டத்தில், மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணியில் செல்கிறார் கேது. புண்ணிய தலங்களுக்குச் செல்வீர்கள்.
வீடு கட்ட லோன் கிடைக்கும். இழுபறியான வேலைகளையும் பேச்சு சாதுரியத்தால் செய்து முடிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். கேது 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத் தில் செல்கிறார். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். புது வேலைவாய்ப்பும் உண்டு.
மதிப்பு கூடும். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். சிலர், புதிதாக வாகனம் வாங்குவர். கன்னிப் பெண்களுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவ-மாணவியருக்கு நினைவாற் றல் பெருகும். மதிப்பெண் உயரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்.
வியாபாரத்தில் பற்று- வரவு உயரும். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். அலுவலகத்தில் பிரச்னைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்துக்கே இடமாற்றம் உண்டு. வெகுநாட்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களை அதிர்ஷ்டசாலிகளாக்கி, எல்லா வசதிகளையும் பெற்றுத் தருவதாக அமையும்.

ராகு பகவான் 16.5.2011 முதல், 5-ஆம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் நீங்கும். எனினும் புத்தி ஸ்தானமான 5-ஆம் வீட்டில் ராகு அமர்வதால், எல்லோரையும் ஒருவித சந்தேகக் கண்ணுடன் பார்ப்பீர்கள். மனதில் வீண் குழப்பம் எழும். நண்டு ராசியில் பிறந்த உங்களுக்கு, யோக வீடான தேள் வீட்டில் கருநாகமான பாம்பு அமர்வதால் எதிலும் வெற்றி உண்டு. குடும்ப வருமானத்தை உயர்த்த அதிரடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். தங்க ஆபரணம், ரத்தினங்களை வாங்குவீர்கள். பிள்ளைகளுடன் சச்சரவுகள் எழுந்தா லும், உங்களது கருத்துகளை அவர்களிடம் திணிக்க வேண்டாம்.
கர்ப்பிணிகள் நீண்டதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: கேட்டை நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 21.1.2012 வரை செல்கிறார் ராகு பகவான். எதிர்பார்த்த
பணம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு- மனை வாங்குவீர்கள். 22.1.12 முதல் 30.9.12 வரை, அனுஷம் நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. இந்தக் காலகட்டத்தில் பணப்பற்றாக்குறை, எதிர்மறை சிந்தனை, சிறுசிறு நெருப்புக் காயங்கள், வீண் டென்ஷன் வந்து போகும். 1.10.12 முதல் 30.11.12 வரை, விசாக நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சகோதர உதவி, அரசு காரியங்களில் தீர்வு, வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தாய்வழிச் சொத்துகளில் சிக்கல்கள் விலகும்.
பிள்ளைகளின் நட்பு வட்டத்தில் ஒரு கண் வையுங்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். குடும்பப் பிரச்னைகளில் அறிவுப்பூர்வமான அணுகுமுறை தேவை. கன்னிப் பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கைகூடி வரும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. மாணவர்கள், படிப்பதுடன் விடைகளை எழுதிப் பாருங்கள். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளில் அவசர முடிவுகள் வேண்டாம். அரசியல்வாதிகள், எவரையும் விமர்சிக்க வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் கூற வேண்டாம். வியாபாரத்தில், அனுபவ அறிவால் மாற்றங்கள் நிகழ்த்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். பாக்கிகளை வசூலிப்பதில் கறார் வேண்டாம். ஹோட்டல், இரும்பு, கமிஷன் மற்றும் எண்ணெய் வகையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரியுடன் மோதல்போக்கு நீங்கும். வேலை குறையும். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் புது வேலை கிடைக்கும். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் கற்பனைத்திறனுக்கு பாராட்டுகள் குவியும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ல் அமர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் வெற்றி உண்டு. குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும். பிரபலங்களைப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். வங்கி லோன் மூலம், வீட்டை கட்டி முடிப்பீர்கள்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், எதிர்பாராத முன்னேற்றம் உண்டு; பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து சேரும். கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. ரோஹிணி நட்சத்திரத்தில் 19.9.11 முதல் 25.5.12 வரை கேது செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வேலையில் அமர்வீர்கள். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், சிக்கனம் தேவை.வங்கிக் காசோலைகளை கவனமாகக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம்.
உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பதவி தேடி வரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் உங்கள் மீதான வீண் பழி விலகும். கணினித் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மாணவர்கள், போட்டிகளில் பரிசு பெறுவார்கள். உயர் கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும்.
மொத்தத்தில், ராகுவால் கொஞ்சம் டென்ஷன் ஏற்பட் டாலும், கேதுவால் வாழ்வில் நிம்மதியும், பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும்.

16.5.2011 முதல் 30.11.2012 வரை, ராசிக்கு 4-வது வீட்டில் ராகு வந்து அமர்வதால், மன நிம்மதி தருவார். தடைப்பட்ட வேலைகள் இனி முழுமை பெறும். வீட்டில் அமைதி திரும்பும். தாம்பத்தியம் இனிக்கும். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் கூடிவரும். வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து வாங்கிய வங்கிக்கடனை அடைக்க வழி பிறக்கும். பூர்வீகச் சொத்து சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்றுசேருவீர்கள். வழக்கு சாதகமாகும். தாயாருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கலாம். சிலர், புறநகர்ப் பகுதிகளுக்கு குடிபெயர்வர்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. பண வரவு உண்டு. சிறு அறுவை சிகிச்சை, வீண் செலவுகள் வந்து போகும். வீடு- வாகனம் சேரும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. 22.1.12 முதல் 30.9.12 வரை, அனுஷ நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. எனவே, பணத் தட்டுப்பாடு, சொத்துப் பிரச்னைகள் நீங்கும். பழைய பிரச்னைகள் தலைதூக்கும். குடும்ப விஷயங்களை வெளியே விவாதிக்க வேண்டாம். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத் திரத்தில் ராகு செல்கிறார். எதிர்பார்த்த பணம் வரும். மகளுக்குத் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவியுண்டு.
5-ஆம் வீட்டை விட்டு ராகு விலகுவதால், பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவீர்கள். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். கன்னிப் பெண்கள், பெற்றோரின் ஆலோசனைப்படி நடக்கவும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். யோகா, தியானம் செய்யுங்கள். கர்ப்பிணிகள், கனமான பொருட்களைத் தூக்க வேண்டாம். மாடிப்படியில் ஏறி- இறங்கும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, கௌரவப் பதவிகள் தேடி வரும். வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க முயற்சிப்பீர்கள். மாணவர்களுக்கு மதிப்பெண் கூடும்.
வியாபாரத்தில், ராஜ தந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். கனிவான பேச்சால் பாக்கிகளை வசூலிப்பீர்கள். உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் எவரையும் விமர்சிக்க வேண்டாம். கணினித் துறையினருக்கு, அதிகச் சம்பளத்துடன் அயல் நாட்டில் வேலை கிடைக்கும். கலைத் துறையினருக்கு, பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது 10-வது வீட்டில் வந்தமர்வதால், எதையும் திறம்பட முடிக்கும் மனோபலத்தைத் தருவார். சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தேடி வரும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்டும் பணி முழுமை அடையும். வீடு- மனை வாங்கும்போது தாய் பத்திரத்தை சரி பார்க்கவும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: மிருகசீரிடம் நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 18.9.2011 வரை கேது செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலை தொடர்பாக நல்ல சேதி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உதவுவர். ரோஹிணி நட்சத்திரத்தில் 19.9.11 முதல் 25.5.12 வரை கேது செல்வதால், புது சொத்து வாங்குவீர்கள். திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். 26.5.12 முதல் 30.11.12 வரை கேது கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால், வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். தொட்டது துலங்கும்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். என்றாலும், வறட்டுக் கவுரவத்திற்காக கையிருப்பைக் கரைக்க வேண்டி வரும். தந்தை வழி உறவுகளால் செலவும் அலைச்சலும் உண்டு.ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கன்னிப் பெண்கள், புதிய நட்பால் ஆதாயம் அடைவீர்கள். மாணவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள்.
வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த, புது யுக்திகளைக் கையாளுவீர்கள். அரசுக்கான வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். உத்தியோகத்தில், காலநேரமில்லாமல் உழைக்க வேண்டியது வரும். எதிர்பார்த்த பதவி உயர்வைப் போராடி பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்த ராகு- கேது பெயர்ச்சி, உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன், திடீர் முன்னேற்றங்களைத் தருவதாகவும் அமையும்.

16.5.2011 முதல் 30.11.2012 வரை உங்களின் ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வந்து ராகு அமர்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். உற்சாகம் கூடும். சவாலான விஷயங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உங்களின் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், இப்போது திருப்பித் தருவார்கள். நீங்களும் கடனையெல்லாம் அடைத்துவிட்டு, கம்பீரமாக வலம் வருவீர்கள்.
தாயாருக்கு ஆரோக்கியம் கூடும். பிள்ளைகளை மேல்படிப்பு, வேலை காரணமாக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். மகளின் திருமணம் குறித்து, மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து நல்ல பதில் வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, அழகான குழந்தை பிறக்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்ற வழி பிறக்கும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை, கனவுத் தொல்லைகள் நீங்கும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை, ராகு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் அனுபவ அறிவு வெளிப்படும். திடீர் பண வரவு உண்டு. வழக்குகளில் நெருக்கடி நீங்கும். உங்கள் ரசனைக்கேற்ப புது இடம் வாங்குவீர்கள். 22.1.12 முதல் 30.9.12 வரை ராகு அனுஷ நட்சத்திரத்தில் செல்வதால் எதிலும் வெற்றி உண்டு. நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்துத் தகராறு சுமுகமாக முடியும். அரசியலில் செல்வாக்குக் கூடும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். 1.10.12 முதல் 30.11.12 வரை, விசாக நட்சத்திரத்தில் ராகு செல்வதால், சேமிக்கத் தொடங்குவீர்கள். அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.
வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவுகளுடன் மனஸ்தாபங்கள் நீங்கும். உங்களின் கனவு வீட்டை கட்டி முடிக்கும் வாய்ப்பு கூடிவரும். கன்னிப் பெண்கள், பாதியிலேயே விட்ட படிப்பை மீண்டும் தொடர்வார்கள். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, தலைமையின் ஆதரவு உண்டு. என்றாலும், வீண் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். லோன் உதவியால் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில், உங்களின் அணுகுமுறை மாறும். பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலியுங்கள். விளம்பரங்களால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். ஷேர், புரோக்கரேஜ் மூலம் ஆதாயம் அடைவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். பதவி உயர்வு உண்டு. கலைஞர்கள், வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வர்; உங்களின் படைப்புகளை அனைவரும் பாராட்டுவர்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது ராசிக்கு 9-ஆம் இடத்தில் வந்தமர்வதால், சமயோசிதமாகச் செயல்பட வைப்பார். மனைவியின் பேச்சுக்கு மதிப்பு கொடுங்கள். சேமிக்கத் துவங்குவீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பர்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை கேது மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால், பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வருமானம் உயரும். வீடு- மனை வாங்குவது- விற்பது லாபகரமாக அமையும். 19.9.11 முதல் 25.5.12 வரை, ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். மூத்த சகோதரர் ஆதரவாகப் பேசுவார். 26.5.12 முதல் 30.11.12 வரை, கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். பெரிய பதவிகள், பிரபலங்களின் நட்பு, நாடாளுபவர்களால் பலன் கிடைக்கும்.
கேது 9-ஆம் வீட்டுக்கு வருவதால் தந்தையின் உடல்நிலை பாதிக்கும். தந்தைவழி சொத்துகளால் அலைச்சல்களும் செலவுகளும் ஏற்படும். பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்களுக்கு புது வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத் தில் பணிகளை விரைந்து முடியுங்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கணினித் துறையினருக்கு வேலை குறையும். சலுகைகளுடன் கூடிய வேறு வாய்ப்புகளும் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி பலவிதங்க ளிலும் உங்களைச் சாதனையாளராக மாற்றும்.

16.5.2011 முதல் 30.11.2012 வரை, உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார் ராகு. தடைப்பட்டிருந்த பல காரியங்கள், இப்போது முழுமை பெறும். ஆனால், அவர் வாக்கு ஸ்தானத்தில் நுழைந்திருப்பதால், பேச்சில் கவனம் தேவை. வருமானம் உயர்வதுடன், செலவுகளும் துரத்தும். குடும்பத்தில் சந்தோஷம் குறையாது.உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களும், தேடி வந்து பணம் தருவர். பயணங்களால் ஆதாயம் உண்டு.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும். ராகு, அனுஷ நட்சத்திரத்தில் 22.1.12 முதல் 30.9.12 வரை செல்கிறார். தாய்வழி உறவுகளால் அலைச்சலும் செலவும் உண்டு. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கு கூடும்; வீடு- மனை சேரும். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. இந்த காலகட்டத்தில், சிறு விபத்துகள் நிகழலாம்.பணப் பற்றாக்குறையும் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் இறங்குவதோ, வீண் விவாதங்களோ வேண்டாம்.
மகனுக்கு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண் அமைவாள். மகளுக்கு, உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வெளியூர் பயணங்களால், உடம்பு லேசாகப் பாதிக்கும். பத்திரங்களில் கையெழுத் திடும்போது கவனம் தேவை. வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். கன்னிப் பெண்கள், பெற்றோரின் அறிவுரையை ஏற்பீர்கள்; கல்யாணம் கூடி வரும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வீடு- மனை வாங்குவதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சமூக சேவையில் ஆர்வம் பிறக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. லாகிரி வஸ்துகளைத் தவிர்க்கவும். வழக்குகளில் இழுபறி காணப்படும். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவர்.
வியாபாரத்தில், பழைய பிரச்னைகளைத் தீர்க்க புது வழி கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் உண்டு. உத்தியோகத்தில், உங்களின் பொறுப்பு உணர்வால் புதிய பதவி, சலுகைகள் கிடைக்கும். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஆனால், யோசித்து முடிவெடுக்கவும். கலைத் துறையினரை, பழைய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு எட்டில் வந்து அமர்கிறார். அலைச்சல் இருந்தாலும் நிம்மதி உண்டு. குடும்பத்தாரின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுங்கள். தடாலடி முடிவுகள் வேண்டாம். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மனைவியுடன் விட்டுக் கொடுத்துப் போகவும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும். உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் மற்றொரு வீடான ரிஷபத்தில் கேது அமர்வதால் கெடு பலன் குறைந்து நல்ல பலன்கள் அதிகரிக்கும்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செல்கிறார் கேது. வயிற்று வலி, தலை வலி வந்து நீங்கும். சகோதரர்களை அனுசரிக்கவும். வீடு-மனை விற்பது வாங்குவதில் விழிப்பு தேவை. 19.9.11 முதல் 25.5.12 வரை, ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால், வேலை கிடைக்கும். சவாலான காரியங்களையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். ஆபரணங்கள் சேரும். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் மன இறுக்கம் நீங்கும். கொடுக்கல்-வாங்கலில் நிதானம் தேவை. வங்கிக் காசோலைகளை கவனமாகக் கையாளுங்கள்.
கேது ராசிக்கு 8-ல் வந்தமர்வதால் முன் கோபம் அதிகமாகும். சிலருக்குச் செலவுகள் இரட்டிப்பாகும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அரசு காரியங்களை முடிப்பதில் தடுமாற்றம் இருக்கும். அதேநேரம் ஆன்மிகச் சிந்தனை, யோகா- தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும்.
நேரந்தவறி வீட்டுக்குச் செல்வதால் கருத்து மோதல்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் வரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
மொத்தத்தில் கேதுவால் அலைச்சலும் அச்சமும் ஏற்பட்டாலும் ராகுவால் ஆதாயமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

16.5.2011 முதல் 30.11.2012 வரை உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார் ராகு. உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவர்களுக்கு, படிப்பில் இருந்த அலட்சியம் மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பண வரவு அதிகரிக்கும். செலவுகளும் துரத்தும். வீண் செலவுகளைக் குறையுங்கள். உணர்ச்சி வேகத்தில் தவறான முடிவுகள் எடுக்கவேண்டாம்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை, கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், இந்த நட்சத்திரக் காரர்களுக்கு சிறிய அளவில் உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம். பொறுமையான அணுகுமுறை தேவை. எவருக்கும் ஜாமீன் போடவேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷ நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. இந்த நட்சத்திரக்காரர்கள், புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பெரிய நோய்கள் இருப்பது போன்று பிரமை ஏற்படும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. குடும்பத்தில் நிம்மதி, பணப் புழக்கம் அதிகரிக்கும். வீடு கட்ட லோனும் கிடைக்கும்.
உடன்பிறந்தவர்கள் தேடிவந்து உதவுவர். கன்னிப் பெண்கள், பிறரை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டாம். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். மாணவர்கள், கணிதத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். தெய்வ பலத்தால் பிரச்னைகளைச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை கவனமாகக் கையாளுங்கள். பங்காளிப் பிரச்னை தலைதூக்கும். வெளி உணவுகள், வறுத்த- பொரித்த உணவுகளைத் தவிருங்கள். வாகனத்தை இயக்கும்போது கவனம். அயல் நாட்டுப் பயணங்கள் தேடி வரும். அரசியல்வாதிகள், தலைமையை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில், பெரிய முதலீடுகள் வேண்டாம். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. பங்குதாரர்களை விட்டுப்பிடியுங்கள். புது ஆர்டர்களைப் போராடி பெறுவீர்கள். அரசாங்க வரி விஷயத்தில் தாமதம் வேண்டாம். உத்தியோகத்தில், உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கம் ஆவீர்கள். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினருக்கு பரிசு - பாராட்டுகள் குவியும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது ராசிக்கு 7-வது வீட்டில் அடியெடுத்து வைப்பதால், வீண் பயம் விலகும். எதிர்ப்புகள் அடங்கும். உங்களின் திறமைகள் வெளிப்படும். பிரபலங்கள் அறிமுகமாவர். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பர். சகோதரியின் திருமணத்தை கோலாகல மாக நடத்துவீர்கள். 7-ஆம் வீட்டில் கேது அமர்வதால் தம்பதிக்கு இடையே காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். மனைவிக்கு லேசாக முதுகு வலி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். சொத்துப் பிரச்னை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்லவேண்டாம்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அலைச்சல் வந்தாலும் நினைத்ததை முடிப்பீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் உண்டு. சொத்து விஷயம் நல்லபடியாக முடியும். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் பண வரவு அதிகரிக்கும். வி.ஐ.பி-கள் உதவுவர். தந்தையாரின் உடல்நிலை பாதிக்கலாம். ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் வெற்றி உண்டு. 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் செல்வாக்குக் கூடும்; சொத்து சேரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். கன்னிப் பெண்கள், புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். மாணவ-மாணவியருக்கு நினைவாற்றல் கூடும். பதக்கம், பரிசு கிடைக்கும். 7-ஆம் வீட்டில் கேது அமர்வதால் வியாபாரத்தில் போராடி ஜெயிக்க வேண்டியிருக்கும். பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வெடிக்கும். உத்தியோகத்தில், பதவி உயரும். எந்த நிலையிலும் நேர்பாதையில் செல்வது நல்லது.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி யதார்த்தமான முடிவுகளாலும் கடும் உழைப்பாலும் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

16.5.2011 முதல் 30.11.2012 வரை, ராசிக்கு 12-ஆம் வீட்டில் வந்து அமர்வதால், நிம்மதி பிறக்கும். உடல்நலக் குறைபாடுகள் நீங்கும். தைரியம் பிறக்கும். பேச்சிலும் செயலிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். சந்தேகத்தாலும், வாக்குவாதத்தாலும் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வர். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் கல்யாணம், கிரகப் பிரவேசம் என நல்லது நடக்கும். வெளி மாநில புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: கேட்டை நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 21.1.2012 வரை செல்கிறார் ராகு. சாதுரியமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள். அனுபவ அறிவு கூடும். திடீர் பயணங்களும் செலவுகளும் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷத்தில் செல்கிறார் ராகு. தைரியமாக புதிய முதலீடுகள் செய்வீர்கள். சுப நிகழ்ச்சி களால் மகிழ்ச்சி தங்கும். வழக்கு சாதகமாகும். வீடு மாறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
பிள்ளைகளை உயர் கல்வி, உத்தியோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்புவீர்கள். பூர்வீகச் சொத்தில் சிக்கல்கள் விலகும். கன்னிப் பெண் களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். கல்யாணம் நடக்கும். மாணவர்கள், அதிக மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு முன்னேறுவர். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். நாடாளுவோரின் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள், தங்களின் பலத்தை நிரூபித்து தலைமையிடம் நல்ல பெயரெடுப்பார்கள். சிறு சிறு விபத்துகளும் நிகழலாம் என்பதால் கவனம் தேவை. கௌரவப் பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில், புதிய முதலீடுகளால் லாபம் வரும். சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்வீர்கள். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். ஏற்றுமதி - இறக்குமதியால் அதிக லாபம் வரும். கூட்டுத்தொழிலில் புது முதலீடுகளைச் செய்வீர்கள். பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், இறுதியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவர். உத்தியோகத்தில், மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவர்வீர்கள். பதவி- சம்பள உயர்வு உண்டு. கணினித் துறையினருக்கு, வெளிநாட்டுத் தொடர்பு டைய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளால் புகழ் பெறுவர்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது, உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களை அறிந்து, அதைத் தீர்க்கும் வல்லமையைத் தருவார். இழந்த அமைதியை மீண்டும் பெறுவீர்கள். தாம்பத்தியம் இனிக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். எதிரிகள் பலவீனமடைவார்கள். வழக்கு சாதக மாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். ஷேர் லாபம் தரும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை கேது, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செல்வதால் மதிப்பு கூடும். சொத்துப் பிரச்னை தீரும். அரசால் ஆதாயமடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது உதவிகள் கிடைக்கும். கமிஷன், ஃபைனான்ஸ் வகைகளால் பணம் வரும். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தர வேண்டாம். வேலை கிடைக்கும். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். திருமணம் கூடி வரும். புது மனை புகுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
ராசிக்கு 6-ல் கேது நிற்பதால் புத்தி சாதுர்யத்துடன் பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனையும் பைசல் செய்யுமளவிற்கு வருமானம் கூடும். சொந்த ஊர் கோயில் விழாக்களுக்குத் தலைமை தாங்குவீர்கள். வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்கி வைப்பீர்கள். பங்கு தாரர்களுடன் பிணக்குகள் நீங்கும். உத்தியோகத்தில், உழைப்புக்கேற்ற உயர்வு உண்டு.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி உன்னதமான நிலைக்கு உங்களை உயர்த்துவதுடன், சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.

16.5.2011 முதல் 30.11.2012 வரை, உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ஆம் வீட்டுக்கு வருகிறார். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை சிரமமின்றி நிறைவேற்ற முடியும். சேமிக்கும் அளவுக்கு பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி ஆனந்தம் நிலவும்; உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.
கணவன் - மனைவி இருவரும் நகமும் சதையுமாகத் திகழ்வார்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு, குழந்தைச் செல்வம் வாய்க்கும். அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள். பிள்ளைகள், உயர்கல்வியில் வெற்றி பெறுவர். மகனின் திறமைகளைக் கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். குலதெய்வத்திடம் குழந்தைக்காக வேண்டிய பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், எதிர்பார்த்த பணம் வந்துசேரும். வீடு-மனை வாங்குவீர்கள். திடீர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். செல்வாக்கு கூடும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷ நட்சத்திரத்தில் ராகு செல்வதால், கல்யாணம் ஏற்பாடாகும். வழக்குகள் சாதகமாகும். வாகனத்தை மாற்றுவீர்கள். நிர்வாகத் திறமை கூடும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத்திரத்தில் ராகு செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உறவுகளின் விமரிசனங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
ராசிக்கு 11-ஆம் வீட்டில் ராகு இருப்பதால், பாதியில் நின்றுபோன வேலைகளை முழுமூச்சுடன் செய்துமுடிப்பீர்கள். அயல்நாட்டுப் பயணங்கள் அமையும். சொத்து வழக்குகள் சாதகமாகும். எதிரிகளும் நண்பர்கள் ஆவர்.
கன்னிப் பெண்களுக்கு, தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடக்கும். தடைப்பட்ட கல்வியை முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியைப் பெறுவர். வியாபாரத்தில், மறைமுகப் போட்டிகளை சாதுரியமாக சமாளிப்பீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அனுபவசாலிகளை வேலைக்குச் சேர்ப்பீர்கள்.விலகிச்சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து சேருவர். உத்தியோகத்தில், அதிகாரிகளுடன் இருந்த மோதல்போக்கு விலகும். ஊதிய உயர்வு உண்டு. உங்களின் திறமை வெளிப்படும். கணினித் துறையினருக்கு, அதிகச் சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். கலைத் துறை யினருக்கு வேற்று மொழி வாய்ப்புகள் தேடி வரும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான 5-ஆம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் பெருமை சேரும். கர்ப்பிணிகள், தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். சொந்த வீடு வாங்குவீர்கள். எனினும், உள்மனதில் வீண் சஞ்சலங்கள் வந்து நீங்கும். மாணவர்களுக்கு அதிரடி முன்னேற்றம் உண்டு.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.11 முதல் 18.9.11 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்தை பராமரிக்க அதிகம் செலவு செய்வீர்கள்.
19.9.11 முதல் 25.5.12 வரை, ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் உதவுவார்கள். தள்ளிப்போன திருமணம் தடபுடலாக நடக்கும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், எதிர்பாராத காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ஆனால், திட்டமிட்ட காரியங்கள் தாமதமாகும்.
கேது 5-ஆம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கன்னிப் பெண்கள் புதிய நட்பால் சிறப்படைவர். வியாபாரத்தில் பற்று - வரவு உயரும். தொழில் ரீதியாக பிரபலங்களின் நட்பு கிட்டும். பங்குதாரர்களிடையே பனிப்போர் நீங்கும். உங்களது ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சியில், கேதுவால் கொஞ்சம் குழப்பங்கள் ஏற்பட்டாலும், ராகுவால் திடீர் யோகமும், நினைத்ததைச் சாதிக்கும் வல்லமையும் உண்டாகும்.

16.5.2011 முதல் 30.11.2012 வரை, உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் வந்து அமர்வதால், கடந்த கால உழைப்புக்கான நற்பலன்கள் தேடிவரும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். சுயதொழில் செய்யும் வல்லமையையும் தருவார் ராகு. உங்களின் பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். மூத்த சகோதரருடன் கருத்துமோதல்கள் விலகும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு-வாகன வசதி பெருகும். உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட நபர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள். உங்களின் திட்டமிடலால் அலைச்சல் குறையும். நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் இழப்பால் சில நேரம் வருந்துவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை, கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால் குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். 22.1.12 முதல் 30.9.12 வரை, அனுஷ நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால், திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சில நேரங்களில் நெஞ்சு வலி, முதுகு வலி வந்து நீங்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 1.10.12 முதல் 30.11.12 முடிய ராகு பகவான் விசாக நட்சத்திரத்தில் செல்வதால், பேச்சால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாகக் கிடைக்கும். அதேநேரம், அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும்.
ராசிக்கு 10-ல் ராகு வருவதால் வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். மகனின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். பழைய நண்பர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். கன்னிப் பெண்கள் தடைப்பட்ட கல்வியைத் தொடருவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்த வீட்டுக்குக் குடிபெயரும் யோகமும் உண்டு. மங்களகரமான செய்திகள் தேடி வரும். பல காரியங்கள் முதல் முயற்சியிலேயே வெற்று பெறும். அரசியல்வாதிகள், தலைமையை அனுசரித்துப் போகவும்.
வியாபாரத்தில், புதிய யுக்திகளால் லாபத்தைப் பெருக்குவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் தன்னிச்சையான முடிவுகள் வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், திடீர் இடமாற்றம் உண்டு. வேலை அதிகரித்தாலும் புதிய அனுபவங்கள் கிடைக்கும். கணினித் துறையினருக்கு வேலை தொடர்பான நெருக்கடிகள் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது.கலைஞர்களுக்கு, வெகுநாட்களாக அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்கும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது இப்போது உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். தடைகள் நீங்கி சுப காரியங்கள் கூடிவரும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். ஆபரணம் சேரும். சொந்த வீடு வாங்கவேண்டும் எனும் உங்களின் நீண்டகாலக் கனவு நனவாகும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் கமிஷன், ரியல் எஸ்டேட் மூலம் லாபம் உண்டு. சொத்துகள் வாங்கும்போது, தாய் பத்திரத்தை சரிபார்ப்பது அவசியம். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் பயணங்கள் அதிகரிக்கும். பழைய உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்கிறார். திருமண யோகம் கூடிவரும்.
ராசிக்கு 4-ஆம் வீட்டில் கேது அமர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. எவரை நம்பியும் பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்ற வேண்டி வரும். வீடு- வாகனப் பராமரிப்பு மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும். மாணவர்கள், போட்டிகளில் பதக்கம் பெறுவார்கள். வியாபாரத்தில் உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். உத்தியோகத்தில், பாராட்டும் பதவி உயர்வும் உண்டு.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும், உங்களைச் சாதிக்க வைப்பதாக அமையும்.

16.5.2011 முதல் 30.11.2012 வரை 9-ஆம் வீட்டில் வந்து அமர்வதால், சோம்பல் நீங்கும். வாழ்க்கை பிரகாசிக்கும். உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். சுப காரியங்களால் வீடு களைகட்டும். கணவன் - மனைவிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். கண்ணுக்கு அழகான வாரிசு உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், வேலைச்சுமை இருக்கும். சில நேரங்களில் வீட்டில் தாயா, தாரமா பிரச்னை தலைதூக்கும். சில விஷயங்களில் வி.ஐ.பி-களின் ஆதரவு உண்டு. 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷம் நட்சத்திரத்தில் ராகு செல்வதால் இழுபறியான வேலைகள் விரைவில் முடிவடையும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். வீடு- மனை வாங்குவீர்கள். திடீர் செலவுகளாலும், பயணங்களாலும் தடுமாறுவீர்கள். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாகம் நட்சத்திரத்தில் ராகு செல்வதால் செல்வாக்கு கூடும். பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு மேலை நாட்டில் படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். வாழ்க்கைத் தரம் உயரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். ராகு 9-ஆம் வீட்டில் அமர்வதால் அப்பாவுடன் வீண் விவாதங்கள் வந்துபோகும். கனிவான பேச்சால் பிரச்னைகளைத் தவிர்க்கப் பாருங்கள். கன்னிப் பெண்களுக்கு நல்ல மணமகன் அமைவார். அரசியல்வாதிகளின் மதிப்பு கூடும்; அவர்கள் வீண் விமர்சனத்தைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள், உயர் கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் போட்டிகள் தளரும். புதிய சலுகைகளால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். ஏற்றுமதி - இறக்குமதி வகைகள், உணவு, இரும்பு, கணினி உதிரி பாகங்கள், மருந்துப் பொருட்களால் லாபம் அதிகரிக்கும். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில், பிரச்னைகள் நீங்கும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். சிலருக்கு, புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைத் துறையினரின் படைப்புகள், பட்டிதொட்டியெங்கும் பேசப்படும்.
கேது பகவான் தரும் பலன்கள்
கேது பகவான் இப்போது, 3-வது வீட்டில் வந்து அமர்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் கரைபுரளும். எதிர்பார்த்த வகையில் உதவி கிடைக்கும். தாயாருடனான மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகள், உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். ஆனால், இளைய சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வந்து மறையும். விட்டுக்கொடுத்துப் போகவும். சொத்துப் பிரச்னைகளை கவனமாகக் கையாளுங்கள்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிட நட்சத்திரத்தில் கேது செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். பண வரவு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். விலகியிருந்த உறவினர், சகோதரர்கள்... இனி, உங்கள் மீது பாசமழை பொழிவார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால், குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தெய்வ நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். சொத்து சேரும். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால். நீண்டநாட்களாக இருந்த முதுகு வலி, கழுத்து வலி நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
சொந்த ஊரில் உங்களின் மரியாதை கூடும். இழுபறியான வழக்குகள் சாதகமாகும். சிலர் சொந்த வீட்டுக்கு குடிபுகுவார்கள். வீண் செலவுகளைக் குறைப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. நீங்களும் அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டு. உங்களால் பயனடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.
கன்னிப் பெண்களின் கனவு நனவாகும். மாணவ- மாணவியருக்கு தேர்வில் மதிப்பெண் கூடும். வியாபாரத் தில், பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். கணினித் துறையினருக்கு அதிக சம்பளம் - சலுகையுடன்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, சமூகத்தில் பெரிய அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாக அமையும்.
__._,_.___

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)