அசுவினி, பரணி, கார்த்திகை
பேச்சில் வசீகரம் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டில் கேது, எட்டில் ராகு, ஆறில் சனி, பன்னிரெண்டில் குரு என்கிற நிலையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. சனிபகவான் மிகுந்த அனுகூல பலன் தருகிற வகையில் உள்ளார். தாமதமான செயல்களை நிறைவேற்றுகிற லட்சிய எண்ணம் மனதில் மலரும். குருபகவானின் பார்வை பதிகிற இடங்களின் வழியாக நற்பலன் கிடைக்கும். பெரியவர்களிடம் பேசுகிற வார்த்தையில் நிதானம் பின்பற்ற வேண்டும். வீடு, வாகனத்தில் தேவையான மாற்றங்களை செய்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர் பாசத்துடன் நடந்துகொள்வர். புத்திரர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பிடிவாத குணத்துடன் செயல் படுவர். பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் சுமாராக இருக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். தம்பதியர் குடும்பநலன் கருதி ஒற்றுமையுடன் நடந்துகொள்வர்.
தொழிலில் இருந்த குறுக்கீடு விலகும். பணியிட மாற்றம், பதவி உயர்வு போன்றவை பெறுவதில் உள்ள முயற்சி அனுகூல பலன் தரும். கிடைக்கிற பண வரவை முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவதால் கடன்சுமை ஏற்படாத நன்னிலை உருவாகும். அரசு தொடர்பான காரியங்கள் நிறைவேற இதமான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். வெளிநாடு வேலைவாய்ப்பில் அனுகூல பலன் உள்ளது. தொழிலதிபர்கள் பொருளின் தரத்தை உயர்த்த நவீன யுக்திகளைக் கடைபிடிப்பர்.
உற்பத்தியை உயர்த்துவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் அதிக நன்மை பெறுவர். உபதொழில் துவங்கும் முயற்சியை பின்வரும் காலங்களில் நிறைவேற்றுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நகை, ஜவுளி, மளிகை, வாகனம், மருந்துப்பொருட்கள், விவசாய விளைபொருட்கள், பாத்திரம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானப் பொருட்கள், காய்கறி, பழங்கள், பர்னிச்சர் வியாபாரிகளுக்கு சந்தையில் இருந்த போட்டி குறையும். மற்ற வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். கிட்டங்கிகளில் கூடுதல் பாதுகாப்பு செய்ய வேண்டும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்குள்ள பொறுப்பை உரிய கவனத்துடன் நிறைவேற்றுவர். பணியிடத்தில் இருந்த குறுக்கீடு விலகும். சம்பள உயர்வு, நிலுவை பணவரவு ஆகியவை கிடைக்கும். கடன்பாக்கிகளை ஓரளவு அடைப்பீர்கள்.
உற்பத்தியை உயர்த்துவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் அதிக நன்மை பெறுவர். உபதொழில் துவங்கும் முயற்சியை பின்வரும் காலங்களில் நிறைவேற்றுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நகை, ஜவுளி, மளிகை, வாகனம், மருந்துப்பொருட்கள், விவசாய விளைபொருட்கள், பாத்திரம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானப் பொருட்கள், காய்கறி, பழங்கள், பர்னிச்சர் வியாபாரிகளுக்கு சந்தையில் இருந்த போட்டி குறையும். மற்ற வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். கிட்டங்கிகளில் கூடுதல் பாதுகாப்பு செய்ய வேண்டும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்குள்ள பொறுப்பை உரிய கவனத்துடன் நிறைவேற்றுவர். பணியிடத்தில் இருந்த குறுக்கீடு விலகும். சம்பள உயர்வு, நிலுவை பணவரவு ஆகியவை கிடைக்கும். கடன்பாக்கிகளை ஓரளவு அடைப்பீர்கள்.
பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் உள்ள மாறுபட்ட சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். பணிப்பளு உயரும் என்றாலும் அதை ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வீர்கள். நிர்வாக குளறுபடியால் சிலருக்கு வெளியூர் மாற்றம் ஏற்படும். குடும்பப் பெண்கள் கணவரின் குணநலன், பணவரவு, குடும்ப சூழ்நிலை இவற்றை கருத்தில் கொண்டு செயல்படுவர். முக்கிய தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி பெருகும். விற்பனை ஓரளவுக்கு இருக்கும். கடனுக்கு கொடுப்பதை இயன்ற அளவு தவிர்ப்பது நல்லது. லாபம் நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் உற்சாகத்துடன் செயல்படுவர். அதிக மார்க் கிடைக்கும். சக மாணவர்களுடன் கருத்து பேதம் கூடாது. படிப்பை முடித்தவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக அமையும். உறவினர்களின் உதவியால் முன்னேற்றம் அடைவீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் நற்பெயரை காத்துக்கொள்கிற எண்ணத்துடன் செயல்படுவர். புதிய பொறுப்புகளை பெறுவதில் இருந்த ஆர்வம் குறையும். எதிரிகளின் தொந்தரவு விலகும். புதிய பிரச்னைகளில் ஈடுபடாமல் விலகிச்செல்வது நல்லது. அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி பங்கு ஓரளவுக்கே இருக்கும். அரசியலுடன் தொழில், வியாபாரம் நடத்துபவர்கள் நல்ல லாபம் பெறுவர்.
விவசாயிகள்: விவசாய பணிகளை நிறைவேற்ற தேவையான அனுகூலம் அத்தனையும் கிடைக்கும். பயிர் மகசூல், கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம் வந்து தாராள பணவரவு பெறுவீர்கள்.
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு சீராகும்
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம்
அன்பே வெல்லும் என்ற கொள்கையுள்ள ரிஷப ராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் கேது, ஐந்தில் சனி, ஏழில் ராகு, பதினொன்றில் குரு என்ற நிலையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. குருபகவான் மிகுந்த நற்பலன்கள் வழங்கும் விதத்தில் உள்ளார். சமூகத்தில் இருக்கிற நற்பெயர் தொடர்ந்திடும். இளைய சகோதரர் கூடுதல் பாசத்துடன் நடந்துகொள்வர். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதியை சரிவர பயன்படுத்துவது போதுமானது. தாயின் எண்ணங்களை அறிந்து தேவையை நிறைவேற்றுவதால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் வளரும். புத்திரர்கள் தங்கள் சேர்க்கை சகவாசத்தினால் படிப்பில் பின்தங்குகிற கிரகநிலை உள்ளது. அதேசமயம் இவர்களை அளவுடன் கண்டிக்க வேண்டும். தவிர்த்தால் பெற்றோரிடம் மனக்கசப்பும், பிரிந்து வேறிடம் செல்கிற எண்ணமும் வளர்ந்திடும். பூர்வ சொத்துக்களை பாதுகாப்பதிலும் அதன்மூலம் வருமானம் பெறுவதிலும் கண்காணிப்புடன் செயல்படுவது அவசியம். தம்பதியரிடையே சிறுசிறு சலசலப்புகள் உருவாகி குருவருளால் சரியாகும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சில நன்மை கிடைக்கும்.
தொழில் சார்ந்த வகையில் கண்ணும் கருத்துமாக பணிபுரிவதால் மட்டுமே குறைபாடு வராத நன்னிலை திகழும். முக்கிய தேவைகளுக்கான பணவரவு சீராக கிடைக்கும். வெளிநாடு வேலைவாய்ப்பில் சுமாரான நன்மை கிடைக்கும். சுயதொழில் துவங்கும் வாய்ப்புக்களை செயல்படுத்த தேவையான முதலீடு, தொழில்நுட்பம் வருட பிற்பகுதியில் கிடைக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியை பெருக்கி புதிய ஒப்பந்தமும் பெறுவர். பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கே கிடைக்கும். லாபம் சுமாராக இருக்கும். நகை, ஜவுளி, மளிகை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருள், தோல், பிளாஸ்டிக், ரப்பர் விற்பனை செய்பவர்கள் கூடுதல் வாடிக்கையாளர் கிடைத்து பணவரவில் முன்னேற்றம் காண்பர். மற்றவர்களுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் கருத்துபேதம் கொள்வர். அளவான மூலதனம், சீரான வாடிக்கையாளர் சேவை என்கிற கொள்கையை பின்பற்றுவதால் வியாபாரம் இன்னும் சிறக்கும். தொடர்பில்லாத பிற வியாபாரங்களில் ஈடுபட முயற்சிக்க வேண்டாம். அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலை பெரிதும் மதித்து பின்பற்றுவர். பணி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். தொழில் சார்ந்த பயிற்சி அல்லது புதிய தொழில்நுட்ப பயிற்சி பெற வாய்ப்பு உருவாகி நிறைவேறும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்று வதுநல்லது. சக பணியாளர்களுடன் சுமூக நட்பு தொடர்ந்திட தேவையற்ற விவாதம் பேசக்கூடாது. சலுகைகள் நல்லபடியாக கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் கூடுதல் முயற்சியுடன் பணிபுரிந்து திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் முயற்சியின் பேரில் கிடைத்து விடும். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவர். எதிர்கால வாழ்வு பற்றிய நம்பிக்கை வளரும். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான உற்பத்தி, எதிர்பார்த்த பணவரவு கிடைக்கப்பெறுவர். போட்டி குறைந்து நிம்மதியான மனநிலையைப் பெறுவர்.
மாணவர்களுக்கு மிகச்சிறப்பாகப் படிப்பர். படிப்பிற்கான பணவசதி எதிர்பார்த்தபடி கிடைக்கும். சக மாணவர்களுடன் கருத்துபேதம் வராத அளவிற்கு பேசுவது நல்லது. படித்து முடித்தவர்களுக்கு சில தடங்கல்களைச் சந்தித்தாலும் வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகத்தில் ஏற்கனவே பெற்ற நற்பெயர் வளரும். ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அரசியல் பணிக்கு புத்திரரின் உதவி அளவுடன் இருக்கும். வம்பு, விவகாரங்களில் ஒதுங்கி செயல்படுவது நல்லது. வெளியூர் பயணம் புதிய நம்பிக்கை, அனுபவங்களை பெற்றுத்தரும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் சிலரது உதவியால் தொழில் சிறந்து தாராள பணவரவு காண்பர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பொருட்களுக்கு சந்தையில் நல்லவிலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அளவான நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நிறைவேறும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடக்கும்.
மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூŒம் 1,2,3
தோற்றப்பொலிவுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நான்கில் சனி, ஆறில் ராகு, பத்தில் குரு, பன்னிரெண்டில் கேது என்ற நிலையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. ராகு நற்பலன்களை வழங்கும் விதத்தில் உள்ளார். பத்தில் குரு, நான்காம் இட அர்த்தாஷ்டம சனி சில குறுக்கீடுகளை உருவாக்கினாலும் சமயோசிதம், ஞானம் நிறைந்த சிந்தனை, செயல்களால் புடம்போட்ட தங்கமாய் ஜொலிப்பீர்கள். பொறுமையான போக்கு செயல்பாடுகளில் வெற்றியைத் தரும். உங்கள் சொல்லுக்கு சமூகத்தில் கூடுதல் மதிப்பு, மரியாதை கிடைக்கும். பணவரவுக்கு குறையேதும் இருக்காது. தம்பி, தங்கைகள் ஓரளவுக்கு உதவி செய்வர். வீடு,வாகனத்தில் தேவையான பராமரிப்பு பணிகளை நிறைவேற்றினால் போதும். புத்திரர்கள் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் கண்டு உங்களின் குடும்பச்சுமை குறைய இயன்ற அளவு உதவுவர். பூர்வ சொத்தில் சிறு பகுதியை அடமானம் வைக்க, விற்பனை செய்ய சில சூழ்நிலைகள் உருவாகும். உடல்நலம் படிப்படியாக பலம்பெறும். உங்களிடம் எதிரித்தனமாக செயல்பட நினைப்பவர்கள் தன் நிலையில் பலமிழந்து போவர். வழக்கு, விவகாரத்தில் இருந்த தாமதம் விலகி அனுகூல பலன் கிடைக்கும். தம்பதியர் குடும்ப பொறுப்புகளை அக்கறையுடன் நிறைவேற்றி சந்தோஷமாக இருப்பர். சிலருக்கு வீடு, பணியிட மாற்றம் ஏற்படும். ஆபத்து, சிரமம் உருவாகிற தருணங்களில் குருவருள் துணைநின்று உங்களை காக்கும். வெளிநாடு வேலைவாய்ப்பில் எதிர்பார்ப்பு நிறைவேறி நல்ல பலனைத்தரும். தொழிலதிபர்கள் உற்பத்தியை பெருக்கி நல்ல லாபம் காண்பர்.
பணியாளர்கள் நிர்வாகத்தின் நலன் பாதுகாக்கப்படும் வகையில் செயல்படுவர். நகை, ஜவுளி, மளிகை, காய்கறி, மலர், இறைச்சி, ஸ்டேஷனரி, மின்சார உபகரணங்கள், வாகனம், கட்டுமானப் பொருட்கள், தோல், கண்ணாடி, பீங்கான் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கூடுதல் உழைப்பால் விற்பனையைப் பெருக்குவர். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிற பொருள்கள் விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் உங்களின் கடின உழைப்பினைக் கண்டு வியப்புறுவர். நிலுவை பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்ற வேண்டும். பணியில் சிறு அளவிலான குளறுபடி உருவாகும். சக பணியாளர்களின் உதவி, வழிகாட்டுதலினால் பணி இலக்கை சரிவர நிறைவேற்றுவீர்கள். சலுகைகள் ஓரளவுக்கு இருக்கும். குடும்பச்செலவுகளை ஈடுகட்ட கடன் பெறுவதும் சேமிப்பு பணத்தை பயன்படுத்துவதுமான தன்மை இருக்கும். நிதி நிர்வாகம், எழுத்துத்துறை சார்ந்த பணியாளர்கள் வளர்ச்சி காண்பர். பணிபுரியும் பெண்கள் பணியில் சில குளறுபடிகளை எதிர்கொள்ளலாம். பணியிட மாற்றம், பணிச்சுமை போன்றவை ஏற்படலாம். வருட பிற்பகுதியில் வளர்ச்சிதரும் மாற்றம் ஏற்படும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, பாசம் கூடுதலாக கிடைத்து அன்றாட குடும்ப பணியை நிறைவேற்றுவர். தாய்வீட்டு உதவி பெறலாம். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் வியாபார நடைமுறையை அபிவிருத்தி செய்வர். போட்டியை சரிசெய்து முன்னேறுவீர்கள்.
மாணவர்கள் நன்றாகப் படிப்பர். படிப்புக்கான பணவசதி ஓரளவுக்கு கிடைக்கும். மார்க் உயரும். வேலைவாய்ப்பைதேடுபவர்களுக்கு அளவான சம்பளத்தில் பணி கிடைக்கும். இருப்பினும், கற்ற துறையில் வளர கிடைத்த வாய்ப்பாக கருதி பணிபுரிவீர்கள். பெற்றோரின் அன்பு, ஆதரவு சிறப்பாக கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நற்பெயர் பெற உரிய வாய்ப்பு கிடைக்கும். ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை சரிசெய்ய கொஞ்சம் செலவு செய்வீர்கள். எதிரிகளாக செயல்பட்டவர்கள் உங்களிடம் மறைமுக அனுகூலம் பெற விரும்புவர். புத்திரர்கள் அரசியல் பணிக்கு குறைந்த அளவிலேயே உதவுவர். அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் பெற உங்களின் சமயோசித பேச்சு, அணுகுமுறை உதவும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு லாபம் சுமாராக இருக்கும். விவசாயிகளுக்கு அளவான மகசூல் கிடைத்து எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் பலன் உங்கள் குடும்ப செலவினங்களை சரிகட்டும். நிலம் தொடர்பான பிரச்னையில் சுமூக தீர்வு வரும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதால் வாழ்வில் சகல நன்மையும் ஏற்படும்
புனர்பூசம்4, பூசம், ஆயில்யம்
உயர்ந்த சிந்தனை உழைப்பில் ஆர்வம் நிறைந்த கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு மூன்றில் சனி, ஐந்தில் ராகு, ஒன்பதில் குரு, பதினொன்றில் கேது என்கிற வகையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும் உங்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளி வழங்க தயாராக உள்ளனர். உங்கள் காட்டில் அடைமழைதான் என்று பிறர் சொல்லுகிற விதமாக உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். நல்லோர் சொல், வேத சாஸ்திரங்களின் கருத்துக்களை உணர்ந்தும் வாழ்வில் பின்பற்றியும் நடப்பீர்கள். பேச்சில் சாந்தமும் மனதில் கருணையும் நிறைந்திருக்கும். சமூகப்பணியில் ஆர்வம் வளரும். தம்பி, தங்கைககளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க நல்யோகம் பலமாக உள்ளது. தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். பூர்வசொத்தில் பெறுகிற வருமானம் உங்களின் கண்காணிப்பினால் வந்துசேரும். உங்கள் சிறப்புகளை கண்டு எதிரிகளும் வியப்புற்று விலகிப்போவர். உடல்நலம் நன்றாக இருக்கும். கடன்களை பெருமளவில் அடைத்துவிடுவீர்கள். தம்பதியர் கருத்து ஒற்றுமையுடன் நடந்து குடும்ப பெருமையை உயர்த்துவர். நண்பர்கள் உரிய மரியாதையுடன் நடந்துகொள்வர். குடும்பத்தேவை பெருமளவில் பூர்த்தியாகும். அஷ்டலட்சுமியும் நவநிதியும் இஷ்டமாய் உங்கள் இல்லத்தில் வாசம் செய்யும். எனவே புதிய அனுபவங்களைக் காண்பீர்கள். தொழில் சார்ந்த வகையில் புதிய முயற்சிகளை செயல்படுத்தி கூடுதல் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்கள் வளர்ச்சி பெற்று ஆதாய பணவரவு பெறுவர்.
புதியவர்கள் தொழிலில் கூட்டுசேர விருப்பத்துடன் நாடுவர். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக கிடைக்கும். தொழில் நிறுவன அபிவிருத்திப்பணி நிறைவேறும். வெளிநாடு சுற்றுலா சென்றுவர வாய்ப்பு உருவாகி நிறைவேறும். சமூக அந்தஸ்து உள்ள பதவி, பொறுப்பு கிடைக்கும். நகை, ஜவுளி, மளிகை, வாகனம், கட்டுமான பொருட்கள், பிளாஸ்டிக், கடல்சார் பொருட்கள், பாத்திரம் வியாபாரம் செய்பவர்கள் சந்தையில் கூடுதல் வரவேற்பு பெறுவர். விற்பனை சிறந்து உபரி பணவரவைத்தரும். மற்றவர்களுக்கு இவர்களை விட நல்ல லாபம் கிடைப்பதுடன், அபிவிருத்திப்பணிகளையும் நிறைவேற்றுவர். கடன்களை அடைப்பதும், சரக்கு கொள்முதலை உயர்த்துவதுமான நன்னிலை உண்டு. அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தகுதி, திறமையை பயன்படுத்தி நற்பெயர் பெறுவர். பணி இலக்கு எளிதாக நிறைவேறும். நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்து பதவி, சம்பள உயர்வு பெறுவீர்கள். சக பணியாளர்களுடன் நட்பு வளரும். குடும்பத்தேவையை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். மருத்துவம், இன்ஜினியரிங் துறை சார்ந்த பணியாளர்கள் மிக அதிக வருமானம் பெறுவர்.
பணிபுரியும் பெண்கள் தமக்குள்ள திறமையை முழுமையாக பயன்படுத்தி பணியின் தரத்தை உயர்த்துவர். பணி இலக்கு எளிதாக நிறைவேறும். பதவி உயர்வு, பிற சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, பாசத்தினை பெறுவர். குடும்ப செலவுக்கான பணவரவு திருப்திகரமாக இருக்கும். புத்திரப்பேறு வகையில் குறைகளை சரிசெய்வதால் நற்பலன் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிசெய்வர். உற்பத்தி, விற்பனை உயர்ந்துசேமிக்கும் அள வில் பணவரவைத்தரும். மாணவர்கள் ஒருமித்த மனதுடன் நன்கு படிப்பர். இந்த ஆண்டில் மாநில ராங்க் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. கிரக சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் நன்மதிப்பை பெறுவார்கள். அரசு தொடர்பான காரியங்கள் தாமதமின்றி நிறைவேறும். பதவி, பொறுப்புகளை எதிர்பார்த்தபடி பெறுவீர்கள். புத்திரர்கள் அரசியல்பணியில் ஆர்வக்குறைவுடன் செயல்படும் கிரகநிலை உள்ளது. அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் திறமை, விசுவாசம் நிறைந்த பணியாளர்களின் உதவியால் தொழில் சிறப்பும் தாராள பணவரவும் காண்பர். விவசாயிகள் விவசாயப்பணிகளை திறம்பட மேற்கொள்ள அனைத்து வசதிகளும் கிடைக்கும். மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் முன்னேற்றம் உண்டு. இதனால் தாராள பணப்புழக்கம் ஏற்படும். கூடுதல் நிலம் வாங்க அனுகூலம் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி இனிதாக நடக்கும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் தொழில்வளமும் குடும்ப நலமும் சிறக்கும்
மகம், பூரம், உத்திரம்
துணிச்சலும் செயல்திறனும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டில் சனி, நான்கில் ராகு, எட்டில் குரு, பத்தில் கேது என்கிற வகையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. ஆறாம் இட அதிபதி சனிபகவானும் எட்டாம் இட அதிபதி குருபகவானும் ஒருவருக்கொருவர் "சமசப்தம' பார்வை பெற்றுள்ளனர். இந்த நிலை "விபரீத ராஜயோகம்' எனற பலமான நன்மையைத் தருகிறது. ஆண்டின் இறுதியில் ஏழரைச் சனி விலகுவது இன்னொரு பிளஸ் பாயின்ட். மனதில் நம்பிக்கை வளர்த்து உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தற்போது நடக்கும் சில குளறுபடியான சூழ்நிலைகள் படிப்படியாக சரியாகும். பேச்சில் கண்டிப்பும் நியாய தர்மத்தை பின்பற்றுகிற குணமும் குரு அருளால் உண்டாகும். இளைய சகோதரர்கள் அன்பு பாராட்டுவர். வீடு, வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் பின்பற்ற வேண்டும். இஷ்ட, குலதெய்வ வழிபாடு, தான தர்மம் வழங்குதல் திட்டமிட்டபடி நிறைவேறும். எதிரிகள் மதிப்பிழந்து போவர். உடல்நலத்தைக் காப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவது நல்லது. தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்து மகிழ்ச்சி பெறுவர். நண்பர்களின் உதவி, ஆலோசனை தொடர்ந்து கிடைக்கும். இயந்திரங்களை கையாளும் தருணங்களில் உரிய பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவது அவசியம்.
தந்தைவழி சார்ந்த உறவினர்கள் எதிர்பார்ப்பு மனதுடன் நடந்துகொள்வர். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற ஓரளவு கடன் பெறுவீர்கள். வெளிநாடு வேலைவாய்ப்பில் சாதகமான நிலை ஏற்படும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் இருந்த சிரமம் விலகி முன்னேற்றம் காண்பர். அபிவிருத்திப்பணிகள் சிறப்பாக நிறைவேறும். கைவிட்டுப்போன பொருள் வந்து சேரும். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். தொழிலதிபர் அமைப்புகளில் பதவி பெறும் வாய்ப்புண்டு. நகை, ஜவுளி, மளிகை, வாகனம், கண்ணாடி, பீங்கான், பிளாஸ்டிக், தோல் பொருட்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கட்டுமானப் பொருள், பர்னிச்சர் விற்பனை செய்பவர்கள் கூடுதல் வரவேற்பு பெறுவர். மற்றவர்களுக்கு வியாபாரம் சுமாராக இருக்கும். கடனுக்கு விற்பனை நடந்தாலும் வரும் காலத்தில் நிலுவைப்பணம் வசூலாகிவிடும். கிட்டங்கிகளில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது அவசியம். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிபுரியும் இடத்தில் சுமூக சூழ்நிலை அமையப்பெறுவர். பணி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். உயர் அதிகாரிகளின் மனதில் உங்களைப்பற்றி நல்ல அபிப்பிராயம் வளரும். நிர்வாகப் பொறுப்புக்களை அடைவீர்கள். பணியில் கிடைக்கிற அதிர்ஷ்டகரமான முன்னேற்றம் உங்களுக்கே உங்கள் மீது வியப்பை உருவாக்கும். பணித்திறன், தகுதியை வளர்த்துக்கொள்வீர்கள். சிலருக்கு வசதி நிறைந்த வீடு, கவுரவமான வெளியூர் வேலைவாய்ப்பு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் படிப்படியாக பணி இலக்கை நிறைவேற்றுவர். பணியின் தரம் சிறந்து நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். சலுகை, கூடுதல் பொறுப்பு எதிர்பாராத வகையில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் நன்மதிப்பு, பாராட்டு பெறுவர். குடும்பத்தேவை பெருமளவில் பூர்த்தியாகும். மாங்கல்ய பலம் அதிகரித்து கணவரின் உடல்நலம் சிறக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் சராசரி உற்பத்தி, விற்பனை என்கிற நிலைமை மாற்றம்பெறக் காண்பர். உற்பத்தி, விற்பனை சிறந்து கூடுதல் பணவரவு பெறுவீர்கள். எவருக்கும் பணம் சார்ந்த வகையில் பொறுப்பேற்கக்கூடாது. மாணவர்கள் மிக கவனமாகப் படித்து முன்னேற்றம் காண்பர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும்.
சக மாணவர்கள் படிப்பில் ஒத்துழைப்பு தருவர். தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு அதிர்ஷ்டகரமாக கிடைக்கும். அரசியல்வாதிகளின் செயல்திறன் அதிகரிக்கும். ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் நடந்துகொள்வர். பதவிப்பொறுப்பு கிடைக்கும். புத்திரர்கள் புதிய செயல் திட்டங்களை வகுத்து தந்து உங்களின் அரசியல் பணி சிறக்க உதவுவர். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் கூடுதல் நிர்வாக செலவினங்களுக்கு உட்படுவர். வெளியூர் பயணம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையில் கிடைக்கிற பணவரவு முக்கிய தேவைகளுக்கு பயன்படும். நிலம் தொடர்பான விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்கும்.
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் சகல நன்மையும் உண்டாகும்
உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2
எந்தச்சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் சனிபகவான், மூன்றில் ராகு, ஏழில் குரு, ஒன்பதில் கேது என்கிற வகையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. இதில் குரு, ராகு உங்களுக்கு தாராள நற்பலன்களைத் தருவர். ஜென்மச்சனியின் தாக்கத்தை குரு பார்வையும், குருவின் 9ம் பார்வையையும் பெற்ற ராகுவின் 11ம் பார்வை ராசியில் பதிகிறது. இதனால் உங்களிடம் கருத்துபேதம் கொண்டவர்கள் கூட நன்மதிப்பு வைத்து உங்களை நாடிவருவர். நடை, உடை, பாவனையில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்க இளைய சகோதரர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். அவர்களுக்கான சுபநிகழ்வு இனிதாக நிறைவேறும். வீடு, வாகனத்தில் நம்பகமானவர்களை மட்டும் அனுமதிக்கலாம். புத்திரர்கள் செயல்திறன் வளர்த்து படிப்பு, வேலைவாய்ப்பில் உயர்ந்த நிலையை அடைவர். பூர்வசொத்தில் சீரான பணவரவு கிடைக்கும். உடல்நலத்தில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது அவசியம். எதிரி உங்களின் வழியாக மறைமுக பலன் பெறுவதின் காரணமாக பகைமை உணர்ச்சியை குறைத்துக்கொள்வர். திசை தெரியாத போக்கு ஏற்பட்டு நண்பர், உறவினர்களின் வழிகாட்டுதலால் சரியாகும்.
தம்பதியர் அன்பு, பாசத்துடன் நடந்து குடும்பத்தேவைகளை நிறைவேற்றுவர். வெளிநாடு வேலைவாய்ப்பில் இருந்த தடையை சரிசெய்து பண வருமானத்தை உயர்த்துவீர்கள். இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும். தொழிலதிபர்கள் தொழிலில் இருந்த தேக்கநிலையை மாற்ற புதிய யுக்திகளை பின்பற்றுவீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர். வளர்ச்சியும் தாராள பணவரவும் கிடைக்கும். அபிவிருத்திப்பணிகள் நிறைவேறும். தொழில் கூட்டமைப்புகளில் தகுதிவாய்ந்த பதவி, பொறுப்பு கிடைக்கும். நகை, ஜவுளி, மளிகை, வாகனம், ஸ்டேஷனரி, கட்டுமான பொருட்கள், தோல், பிளாஸ்டிக், கண்ணாடி, பீங்கான், ரப்பர் பொருட்கள், எண்ணெய், பாத்திரம் விற்பவர்கள் சந்தையில் புதிய வாய்ப்பு கிடைத்து முன்னேற்றம் காண்பர். மற்றவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கருத்து ஒற்றுமையுடன் நடந்துகொள்வர். வியாபார அபிவிருத்தி பணிகளை நிறைவேற்ற தாராள பணஉதவி கிடைக்கும்.
அரசு, தனியார் துறையில் பணிபுரி பவர்கள் பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சக பணியாளர்கள் உதவும் மனப்பாங்குடன் நடந்துகொள்வர். பதவி உயர்வு, விரும்பிய பணியிட மாற்றம் எதிர் பார்த்தபடி கிடைக்கும். கூடுதல் வரவை பாதுகாப்பான வகையில் முதலீடு செய்வீர்கள். பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்புரிந்து பணியை திறம்பட நிறைவேற்றுவர். தாமதமான பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப பெண்கள், கணவரின் நல்அன்பை பெறுவர்.
அரசு, தனியார் துறையில் பணிபுரி பவர்கள் பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சக பணியாளர்கள் உதவும் மனப்பாங்குடன் நடந்துகொள்வர். பதவி உயர்வு, விரும்பிய பணியிட மாற்றம் எதிர் பார்த்தபடி கிடைக்கும். கூடுதல் வரவை பாதுகாப்பான வகையில் முதலீடு செய்வீர்கள். பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்புரிந்து பணியை திறம்பட நிறைவேற்றுவர். தாமதமான பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப பெண்கள், கணவரின் நல்அன்பை பெறுவர்.
குடும்பச்செலவுகளுக்கான பணவசதி திருப்திகரமாகும். புத்திரர்களின் படிப்பு, திறமையை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.சுயதொழில் புரியும் பெண்கள், கூடுதல் மூலதனத்துடன் உற்பத்தியை பெருக்குவர். சந்தையில் வரவேற்பும், விற்பனையும் அதிகரிக்கும். இளம் பெண்களுக்கு திருமண முயற்சி நிறைவேறும். மாணவர்கள் நிறைந்த ஞாபக சக்தியுடன் படித்து உயர்வான நிலை பெறுவர். வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும். சக மாணவர்கள் கூடுதல் நட்பு பாராட்டுவர். சுற்றுலா பயணத்திட்டம் நிறைவேறி இனிய அனுபவத்தை பெற்றுத்தரும். அரசியல்வாதிகளுடன் கருத்து வேறுபாடு கொண்டு விலகிச் சென்றவர்கள் மதித்து நாடிவருவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் முயற்சி நிறைவேறி கூடுதல் ஆதரவாளர்களை பெற்றுத்தரும். எதிரிகளும் உங்களின் சிபாரிசை மறைமுகமாக பெற விரும்புவர். புத்திரர்கள் உங்களின் அரசியல் பணி பரிமளிக்க இயன்ற உதவி புரிவர். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் நல்லவர்களின் உதவி கிடைத்து வளர்ச்சி காண்பர். பணவரவு அதிகரிக்கும். விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். மகசூல் சிறந்து சந்தையில் நல்ல விலை கிடைக்கும். கால்நடை பராமரிப்பில் கூடுதல் செலவு இருக்கும். நிலம் தொடர்பான சிரமம் விலகும். குடும்பத்தில் சுபகாரியம் திட்டமிட்டபடி நடக்கும்.
பரிகாரம்: சரஸ்வதியை வழிபடுவதால் பேச்சில் இனிமை கூடி எல்லா செயலும் வெற்றி தரு